மருத்துவம்
வயிறு சம்பந்தப்பட்ட நோய்களை குணமாக்கும் சட்னி
கற்பூரவல்லி குழந்தைகளின் அஜீரண வாந்தியை நிறுத்தக் கூடிய மருத்துவ குணத்தைப் பெற்றிருக்கிறது. வயிறு சம்பந்தப்பட்ட நோய், இளைப்பு நோய்களுக்கு உள் மருந்தாகவும், கண் அழற்சிக்கும் இதன் சாறு மேல் பூச்சாக தடவ குணம் தரும்.
தேவையான பொருட்கள் :
கற்பூரவல்லி இலைகள் – 15, தேங்காய்த் துருவல் – கால் கப்,
பச்சை மிளகாய் – 2,
புளி – கோலி குண்டு அளவு,
பெருங்காயம் – சிட்டிகை,
கடுகு, உளுந்தம் பருப்பு – தலா கால் டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,
எண்ணெய் – அரை டீஸ்பூன்.
செய்முறை :
கற்பூரவல்லி இலைகளை நன்றாக கழுவி வைக்கவும்.
வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு பச்சை மிளகாய், கற்பூரவல்லி இலைகள், தேங்காய்த் துருவல், புளியை தனித்தனியாக சேர்த்து வதக்கி ஆற விடவும்.
அனைத்தும் நன்றாக ஆறிய பின் மிக்சியில் போட்டு உப்பு சேர்த்து அரைத்த கொள்ளவும்.
அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, பெருங்காயம் சேர்த்து தாளித்து சட்னியில் சேர்த்து கலந்து பரிமாறவும்.
சூப்பரான கற்பூரவல்லி சட்னி ரெடி.