சமையல் குறிப்புகள்
கேழ்வரகு அவல் வெஜிடபிள் சாலட்
கேழ்வரகை எந்த வடிவிலாவது உணவில் சேர்த்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அந்த வகையில் இன்று கேழ்வரகு அவல் வைத்து சத்தான சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
கேழ்வரகு அவல் – அரை கப் (ஆர்கானிக் கடைகளில் கிடைக்கும்) ஃப்ரெஷ் க்ரீம் – ஒரு கப்
மாதுளை முத்துக்கள் – கால் கப்
வெள்ளரிக்காய், கேரட் – தலா ஒன்று
தக்காளி – ஒன்று
பச்சை மிளகாய் விழுது – ஒரு டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
உப்பு – சிறிதளவு.
செய்முறை:
வெள்ளரிக்காய், கேரட், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அவலை அலசி தண்ணீரில் 10 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
பிறகு தண்ணீரை ஒட்டப் பிழிந்துவிட்டு ஃப்ரெஷ் க்ரீமில் போட்டு அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
இதில் நறுக்கிய கேரட், வெள்ளரி, பச்சை மிளகாய் விழுது, நறுக்கிய தக்காளி, மாதுளை முத்துக்கள், கொத்தமல்லித்தழை, உப்பு சேர்த்துக் கிளறி ஃப்ரிட்ஜில் 10 நிமிடங்கள் வைத்து எடுத்து கூலாகப் பரிமாறவும்.
சூப்பரான சத்தான கேழ்வரகு அவல் வெஜிடபிள் சாலட் ரெடி.