உலக நடப்புகள்புதியவை

வேலையிடத்தில் தலைமை பொறுப்பில் இருப்பவர்களுக்கு தேவையான 6 குணங்கள் என்னென்ன?

நாம் வேலை செய்யும் பணியிடத்தில் தலைவராக இருப்பது ஒன்றும் அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. ஒரு வலிமையான தலைவர் அமைதியானவர், புதுமையானவர், பொறுமைசாலி, வளமானவர போன்ற பல குணநலன்களை கொண்டு ஒரு செயல்பாட்டை அல்லது பிரச்சாரத்தை திறம்பட நடத்துவதற்குத் தேவையான அனைத்து நல்ல குணங்களையும் கொண்டிருக்க வேண்டும்.

ஏனெனில் தன்னுடைய சக ஊழியர்களை கட்டுக்குள் வைக்க இந்த குணங்கள் இருப்பது அவசியம். இந்த குணநலன்கள் சில பேருக்கு இயற்கையாகவே அமைந்து இருக்கும். ஆனால் சிலர் இதை அடைய கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். ஒரு தலைவரால் மட்டும் தான் பணியிடங்களில் பாசிட்டிவ் சூழலை கொண்டு வர முடியும். எனவே நீங்கள் ஒரு தலைவராக இருக்க ஆசைப்பட்டால் இந்தந்த குணாதிசயங்கள் உங்களிடம் இருக்கிறதா என்று பாருங்கள். இல்லையென்றால் வளர்த்துக் கொள்ளுங்கள்.

​தொடர்பு கொள்ளுதல்

ஒரு தலைவருக்கு தகவல் தொடர்பு திறன் இருக்க வேண்டும். அப்பொழுது தான் அவரால் பணியிடங்களில் சிறப்பாக செயல் பட முடியும். நல்ல பேச்சு இருந்தா தான் பணியிடங்களில் அவரவருக்கு என்னென்ன பொறுப்பு வேலைகள் என்பதை அறிவுறுத்த முடியும். தலைவருக்கு வாய்மொழி மற்றும் எழுத்து மூலம் தொடர்பு கொள்ள தெரிந்திருக்க வேண்டும். ஏனெனில் பணியிடங்கள் எல்லா நேரமும் சுமூகமாக இருக்காது. குழப்பங்களுக்கு செவி சாய்த்து சரியான முடிவு எடுக்க இந்த தகவல் தொடர்பு ஒரு தலைவருக்கு அவசியம்.

​நேர்மை பண்பு

ஒரு அணியின் தலைவராக இருப்பதன் மிக முக்கியமான பண்புகளில் நேர்மை ஒன்றாகும்.குழு உறுப்பினர்களிடம் நேர்மையான கருத்தை வெளியிடுவதும், தவறு என்ன என்பதை அவர்களிடம் நேராகச் சொல்வதற்கும் இந்த நேர்மை பண்பு அவசியம். இது எந்தவொரு தவறான விளக்கத்திற்கும் குழப்பத்திற்கும் இடமளிக்காது. மற்றவர்கள் உண்மையை விரும்பாவிட்டாலும், சரியாக செயல்படுவது தலைவர்களின் பொறுப்பு.

​முடிவு எடுக்கும் திறன்

ஒரு தலைவராக இருக்கும் போது முடிவெடுக்கும் திறன் என்பது மிக முக்கியம். முடிவுகளை சரியாக தீர்மானிக்காமல் மாற்றிக் கொண்டே இருப்பது அழகல்ல. ஒரு பிரச்சினை நடக்கிறது என்றால் அதற்கு சரியான முடிவு எடுத்து மற்றவர்களை வழி நடத்த வேண்டும். தன்னம்பிக்கை அவசியம் மற்றும் அடுத்த கட்டத்திற்கான முடிவை குழு உறுப்பினர்களிடம் தெரிவிப்பதும் அவசியம்.

​புதுமை அல்லது கண்டுபிடிக்கும் திறன்

ஒரு தலைவர் செயல்பாடுகள் அல்லது பணிகளை வடிவமைக்கும்போது அவர் அணுகுமுறையில் ஆக்கப்பூர்வமாகவும் புதுமையாகவும் இருப்பது மிகவும் முக்கியம். ஒரு தலைவர் காட்டும் புதுமைத்தனம் ஒரு பிரச்சினையில் இருக்கும் சிக்கல்கள் மற்றும் வழிமுறைகளை கண்டறிய உதவும். அவசர காலத்தில் நல்ல முடிவுகளை எடுக்க இந்த குணம் அவசியம். எந்தவொரு சூழ்நிலையிலும் ஒருவர் புதிய அல்லது வழக்கத்திற்கு மாறான அணுகுமுறைகளை எடுக்க முயல வேண்டும். சிறந்த வாய்ப்புகளை உருவாக்க முயல்வது தலைவரின் பொறுப்பு.

​பொறுப்பு

பணியிடங்களில் ஒரு திட்டத்தை செயல்படுத்துகிறார்கள் என்றால் அதை பொறுப்பேற்பது அவசியம். அதில் வெற்றியும் வரலாம் அல்லது தோல்வியும் வரலாம் இரண்டிற்கும் தலைவர் தான் பொறுப்பேற்க வேண்டும். ஒரு நல்ல தலைவர் அனைத்து குற்றச்சாட்டுகளையும் எடுத்துக் கொள்ளும் அளவுக்கு பொறுப்பு முக்கியம். மேலும் எந்த வெற்றியின் போதும் தாழ்மையுடன் இருக்க வேண்டும்.

எந்தவொரு சூழ்நிலையையும் கையாள்வதில் ஒரு அணியாக தோல்வி மற்றும் வெற்றியைப் பெறுவது சகஜம் என்று தெரிந்திருக்க வேண்டும். இந்த குணம் தான் முன்னேற்றத்திற்கு அதிக இடத்தையும் அனுமதிக்கிறது.

​உற்சாகமூட்டுதல் மற்றும் நல்ல உறவை ஏற்படுத்துதல்

ஒரு தலைவர் தன்னுடைய பணியிடங்களில் வேலை செய்யும் உறுப்பினர்களிடம் நல்ல உறவை பேண வேண்டும். அவர்களின் ஆர்வத்தின் அடிப்படையில் உற்பத்தித்திறனை ஊக்குவிப்பதும் ஒட்டுமொத்த நிறுவனத்தையும் வெற்றி பாதைக்கு இட்டுச் செல்லும். அவர்களுக்கு உந்து சக்தியாக அவர் செயல்பட வேண்டும். எல்லாரும் ஒன்றாக சேர்ந்து செயல்பட அங்கு நம்பிக்கை அவசியம்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker