உங்களுக்கு ட்ரை சருமமா இருந்தா இந்த குறிப்பு ஃபாலோ பண்ணுங்க! ஃப்ரெஷ்ஷா இருப்பீங்க!
வறண்ட சருமம் என்பது அலட்சியப்படுத்தக்கூடாது. அதிலும் கோடைகாலத்தில் வறட்சி இன்னும் அதிகமாக கூடும். இந்த நேரத்தில் என்ன மாதிரியான மேக் அப் செய்வது என்பதையும் பார்க்கலாம்.
வறண்ட சருமம் கொண்டிருக்கும் போது சருமம் சீக்கிரம் வயதான தோற்றத்தை கொண்டிருக்க கூடும். சருமம் மாறத்தொடங்கும். முகத்தின் பளபளப்பு நீங்கி வறண்டு போக கூடும்.
இதற்கு வெளியில் பலவிதமான க்ரீம்கள் இருந்தாலும் அதை காட்டிலும் வீட்டில் இருக்கும் பொருள்களை கொண்டு இயற்கையாகவே வறட்சியான சருமத்துக்கு மேக் அப் செய்வது குறித்து பார்க்கலாம்.
வறண்ட சருமத்துக்கு ஒப்பனை
பொதுவாக வயது அதிகரிக்கும் போது சருமம் மாறத்தொடங்குகிறது. முகத்தில் இருக்கும் இயற்கையான பளபளப்பு நீங்க தொடங்குகிறது. இது வறண்டு போகிறது. இந்த சூழலில் சருமத்தின் பளபளப்பை நீக்கி பெறுவதற்கான முயற்சிகளில் உங்களுக்கு வெற்றி கிடைக்காவிட்டால் நீங்கள் சலிப்பை அடைவீர்கள்.
விலை உயர்ந்த க்ரீம் வகைகளாக இருந்தாலும் வீட்டில் இயற்கையான முறை பராமரிப்பில் கிடைப்பது போல் வருமா? அப்படியான குறிப்புகளை நாம் பார்க்கலாம்.
எலுமிச்சை
எலுமிச்சை வறட்சியை கொடுக்கும் என்பதால் குறைத்து பயன்படுத்த வேண்டும் என்று சொல்வார்கள். எலுமிச்சை சருமத்தின் வெளுப்பை கொண்டு வரக்கூடியது. இதை பயன்படுத்துவதன் மூலம் சருமத்தின் பளபளப்பை நீங்கள் பெறலாம்.
எலுமிச்சை சாற்றில் இரண்டு டீஸ்பூன் பன்னீர் கலந்து பிறகு நீர் சேர்த்து ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வைக்கவும். பிறகு தேவைப்படும் போதெல்லாம் முகத்தில் தெளித்துகொண்டால் முகம் புத்துணர்ச்சியாகவும் பளபளப்பாகவும் இருப்பதை உணர்வீர்கள்.
பழங்களை பயன்படுத்துங்கள்
எந்த பழமாக இருந்தாலும் அவை முகத்துக்கு நன்மை செய்யகூடியவை. பழங்கள் சாப்பிடும் போது ஒரு துண்டு எடுத்து மசித்து முகத்தில் தடவுங்கள். தினமும் ஒரு பழம் என்று சாப்பிடும் போதெல்லாம் அதை மசித்து முகத்தில் தடவி கொண்டால் முகம் வறட்சி நீங்கி எப்போதும் புத்துணர்ச்சியாக காட்சி அளிக்கும். தொடர்ந்து இரண்டு வாரங்கள் பயன்படுத்தினாலே பலனை உணர்வீர்கள்.
முல்தானி மிட்டி
இதை வாரம் ஒரு முறை செய்துவந்தால் மேக் அப் செய்யாமலே முகம் பளபளப்பாக இருப்பதை உணர்வீர்கள்.
முல்தானி மிட்டி 2 டீஸ்பூன் எடுத்து அதில் சம அளவு சந்தனம் சேர்த்து கலந்து தேவையான அளவு பன்னீர் சேர்த்து நன்றாக பேஸ்ட் போல் குழைத்து விடவும். பிறகு இதை முகம் மற்றும் கழுத்துபகுதியில் தடவி விடவும். இவை நன்றாக உலர்ந்ததும் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவி விடவும். முகம் எப்போதும் புத்துணர்ச்சியாக இருக்கும்.
ஆரஞ்சு சாறு
உலர்ந்த சருமத்துக்கு ஆரஞ்சு சாறு எப்போதும் பயனளிக்கும். இதை எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் பயன்படுத்தலாம். ஆரஞ்சு சாறு முகத்தில் இருக்கும் கறைகளை அகற்றி விட செய்யும்.
ஆரஞ்சு சாற்றில் பருத்தியை நனைத்து அதை கொண்டு முகம் முழுக்க தடவி எடுக்கவும். அவை உலர உலர மீண்டும் மீண்டும் சாறை நனைத்து பயன்படுத்தி உலரவைத்து பிறகு குளிர்ந்த நீரில் கழுவி எடுக்கவும். தொடர்ந்து இதை செய்து வந்தால் வறண்ட சருமத்தில் பளபளப்பு காணலாம்.
உருளைக்கிழங்கு சாறு
உருளைக்கிழங்கு கண்களுக்கு கீழ் இருக்கும் கருவளையத்தை போக்குவதற்காக மட்டும் பயன்படுத்தப்படுவதில்லை. அது முகத்தில் இருக்கும் கறைகளையும் போக்க கூடும். இது வறண்ட சருமத்துக்கும் நன்மை செய்யகூடியது.
உருளைக்கிழங்கு தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் அரைத்து சாறு எடுக்கவும். இதை பஞ்சில் நனைத்து முகம் முழுக்க தடவி உலரவிட்டு வெதுவெதுப்பான நீரில் கழுவி எடுக்கவும். தொடர்ந்து செய்து வந்தால் வறண்ட சருமத்தில் பொலிவு கூடும்.