புதியவைவீடு-தோட்டம்

உங்க அயர்ன் பாக்ஸ் இப்படி இருக்கா? இத ஒரே நிமிஷத்துல எப்படி பளிச்னு சுத்தம் செய்யலாம்?

பொதுவாக எல்லோருடைய வீடுகளிலும் அயர்ன் பாக்ஸ் இருக்கும். சில சமயங்களில் அயர்ன் செய்கிற பொழுது, துணியை கருக விட்டுவிடுவோம். அந்த துணி என்னவோ வீணாகிவிட்டது என தூக்கி வீசிவிடுவோம். அந்த அயர்ன் பாக்ஸை திருப்பிப் பார்த்தால் கருப்பாக மாறியிருக்கும். நாளடைவில் அது மிக மோசமாகிவிடும். அதற்கான அயர்ன் பாக்ஸை தூக்கி எறிந்து விட முடியுமா என்ன?

சுத்தம் செய்ய முடியுமா? அப்படி தேய்க்க தேய்க்க நாளடைவில் மிகவும் கருப்பாக மாறிவிடுகிற அயர்ன் பாக்ஸைப் பற்றி நாம் ஒருபோதும் பெரிதாகக் கவலை கொள்வதில்லை. ஆனாலும் கூட பார்ப்பதற்குக் கொஞ்சம் அருவருப்பாக இருக்குமல்லவா? அதை எப்படி சுத்தம் செய்ய முடியுமா? என்ற கேள்வி எல்லோருக்குமே இருப்பது தான். ஆனால் எப்படி என்பது தான் தெரியாது. இன்னொன்று சோப்பெல்லாம் அயர்ன் பாக்சில் போட்டு கழுவ முடியாது. தண்ணீர் உள்ளே போய்விடும், அதன்பின் அந்த அயர்ன் பாக்ஸை பயன்படுத்தவே முடியாது என்பது நமக்கு நன்றாகத் தெரியும். சரி. பிறகு எப்படி தான் சுத்தம் செய்யலாம்.

சோல்பிளேட்

அயர்ன் பாக்சில் அடிப்பகுதியில் உள்ள நாம் துணியைத் தேய்க்கப் பயன்படுத்தும் பகுதியைத் தான் சோல் பிளேட் என்று அழைக்கப்படும். அதுதான் அந்த அடிப்பகுதியின் நிறத்தை மாற்றக் கூடாது. அது அப்படியே கறையாக நிரந்தரமாகத் தங்கி விடும்.

வெள்ளை ஆடைகள்

வெள்ளை நிற ஆடைகளை கறை படிந்த அயர்ன் பாக்சில் அயர்ன் செய்வதற்குத் தயங்குவோம். அந்த கறை எங்கே நம்முடைய வெள்ளை ஆடையில் தங்கி விடுமோ என்று யோசிப்பது உண்டு.

என்ன செய்யலாம்?

ஆனால் நீங்கள் இனிமேல் அதைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. கடையில் வாங்கும் போது அயர்ன் பாக்ஸ் எப்படி இருந்ததோ அதேபோல உங்களுடைய கறை படிந்த அயர்ன் பாக்ஸை மாற்ற முடியும். அதற்கு தேவையான பொருள் உங்களிடம் எப்போதுமே இருக்கும். அதுபற்றி இங்கே பார்க்கலாம்.

உப்பு

சிறிதளவு உப்பு மட்டுமே போதும் உங்களுடைய அயர்ன் பாக்ஸை மீண்டும் புதிது போல மாற்றுவதற்கு.

ஒரு டீ டவல் அல்லது வெள்ளை நிற டவலை எடுத்துக் கொள்ளுங்கள். அதை அயர்ன் செய்யும் டேபிளின் மீது போடுங்கள். அந்த டவலின் மேல் அப்படியே ஒரு கைப்பிடியளவு உப்பை எடுத்து பூப்போல தூவி விடுங்கள். ஸ்டீம் போடாமல் சாதாரணமாக உப்பு தூவிய டவல் மேல் அயர்ன் பாக்ஸை வைத்து அயர்ன் செய்யுங்கள். சில நிமிடங்கள் கழித்து சோல் பிளேட்டைத் திருப்பிப் பாருங்கள். உங்கள் அயர்ன் பாக்சின் அடிப்பகுதி கறைகள் நீங்கி, பளிச்சென சுத்தமாக புதிது போல மாறியிருக்கும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker