நெஞ்சு எரிச்சலை போக்க துளசியை எப்படி பயன்படுத்துவது..? சில வீட்டுக்குறிப்புகள் உங்களுக்காக…
துளசி நெஞ்சு எரிச்சலை உண்டாக்கும் வாயுத் தொல்லையை உடனடியாக நிவாரணம் செய்கிறது. வயிற்றுக் கோளாறுகளுக்கும் துளசி நல்ல மருந்து.
காரசாரமான உணவுகள், எண்ணெயில் பொறித்த உணவுகள், ஃபாஸ்ட் ஃபுட், பதப்படுத்தப்பட்ட உணவுகள், ஜங்க் ஃபுட்ஸ் போன்ற ஆரோக்கியம் குறைந்த உணவுகளை சாப்பிட்டு வந்தால் இந்த நெஞ்சு எரிச்சல் உண்டாகும். வயதானவர்கள் எனில் செரிமாண கோளாறு காரணமாகவும் நெஞ்சு எரிச்சல் உண்டாகும். இதை எளிமையான முறையில் துளசி பயன்படுத்தி சரி செய்யலாம் என்கின்றனர். எப்படி என்று பார்க்கலாம்.
துளசி நன்மைகள் :
துளசி நெஞ்சு எரிச்சலை உண்டாக்கும் வாயுத் தொல்லையை உடனடியாக நிவாரணம் செய்கிறது. வயிற்றுக் கோளாறுகளுக்கும் துளசி நல்ல மருந்து. இது உணவை செரிமானிக்கக் கூடிய அமிலத்தை தூண்ட உதவி செய்கிறது. இதனால் செரிமானம் தடைபட்டாலும் விரைவில் அது சரியாகிறது.எனவேதான் ஆயுர்வேதத்தில் செரிமாணத்தின் அதிமருந்துகளில் துளசியும் ஒன்றாக இருக்கிறது.
சரி எப்படி துளசியைப் பயன்படுத்துவது என்று பார்க்கலாம்….
ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் நிரப்பி அதில் 3-4 துளசி இலைகளை செர்த்து நன்கு கொதிக்க விடுங்கள். 10-15 நிமிடங்களுக்கு சிறு தீயில் வையுங்கள். பின் அடுப்பை அணைத்துவிட்டு அதை நாள் முழுவதும் அப்படியே தட்டுப்போட்டு மூடிவிடுங்கள். பின் இந்த தண்ணீரை ஒரு நாளைக்கு 2-3 முறை குடிக்கலாம். ஏதேனும் இனிப்பு சுவை தேவைப்பட்டால் தேன் கலந்து குடிக்கலாம். இல்லையெனில் அப்படியேவும் குடிக்கலாம். இதை இரவு கொதிக்க வைத்து மூடி வைத்துவிட்டால் மறுநாள் முழுவதும் குடிக்கலாம்.
மேலே குறிப்பிட்டதுபோக….அவ்வபோது ஒரு சில துளசி இலைகளை மெதுவாக வாயில் அசைபோட்டு மென்று முழுங்குங்கள். இதுவும் நெஞ்சு எரிச்சலுக்கு இதவும்.
குறிப்பு : உங்களுக்கு வேறு ஏதேனும் உடல் நல பாதிப்புகள் இருப்பின், தொடர்ந்து மருந்துகள் உட்கொண்டு வந்தாலும் இந்த துளசி வைத்தியத்தை பின்பற்றலாமா என மருத்துவரை கலந்து ஆலோசித்துப் பின் பருகுவது நல்லது.