ரவையில் காய்கறிகள் பயன்படுத்தி ஆரோக்கியமான ஸ்நாக்ஸ்
தேவையான பொருட்கள் :
ரவை – 1/2 கப்
வெங்காயம் – 1/4 கப் (நறுக்கியது)
பீன்ஸ் – 1/4 கப் (நறுக்கியது)
காளான் -1/4 கப் (நறுக்கியது)
கேரட் – 1/4 கப் (நறுக்கியது)
சீஸ் க்யூப்ஸ் – 2
ஹெர்ப்ஸ் – 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 1
தண்ணீர் – 2 கப்
பச்சை பட்டாணி – 1/4 கப்
வேகவைத்த உருளைக்கிழங்கு – 1 கப்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி இலைகள் – சிறிதளவு
ரீபைன்ட் ஆயில் – தேவையான அளவு
செய்முறை:
1. ஒரு கடாயில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். அதில் நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கி பிறகு பட்டாணி, பீன்ஸ், கேரட் மற்றும் காளான் உள்ளிட்ட காய்கறிகளை சேர்த்து அவற்றை 4 முதல் 5 நிமிடங்களுக்கு வதக்கவும்.
2. அவை நன்கு வதங்கிய பிறகு வாணலியில் ரவை சேர்த்து நன்கு கிளறி விடுங்கள். பின்னர் அதனுடன் 2 கப் தண்ணீர் சேர்த்து கிளறவும். இப்பொது அந்த கலவையில் உப்பு மற்றும் கொஞ்சம் ஹெர்ப்ஸ் சேர்க்கவும்.
3. பின்னர் இந்த கலவை கெட்டியாகும் வரை அதனை மூடி வைத்து சில நிமிடங்கள் சமைக்கவும். இப்போது தீயை அனைத்துவிட்டு சூடாக இருக்கும் கலவையில் வேகவைத்த உருளைக்கிழங்கைச் சேர்த்து கிளறிவிடுங்கள்.
4. கடைசியாக, பொடிப்பொடியாக நறுக்கி வைத்த மிளகாய் மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்க்கவும். அதனுடன் துருவிய சீஸ் க்யூப்ஸை சேர்த்துக்கொள்ளுங்கள்.
5. ஒரு அகலமாக தண்டில் வெண்ணெய் தடவிய காகிதத்தை வைத்து அதில் இந்த கலவையை 1/2 அங்குல தடிமன் அல்லது அதற்கு மேற்பட்ட அளவில் இருக்கும்படி நன்கு பரப்பிவிடுங்கள். இப்போது அவற்றை 40 நிமிடங்கள் குளிரூட்டவும். குளிரூட்டப்பட்ட பிறகு, துண்டுகளாக வெட்ட வேண்டும்.
6. இப்போது ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி அது சூடானதும், ரவை வெஜ்ஜி துண்டுகளை போட்டு ஷலோவ் பிரை செய்ய வேண்டும். ரவை வெஜ்ஜி தங்க-பழுப்பு நிறத்தில் மாறும் வரை வறுத்தெடுங்கள். அவ்வளவுதான் உங்கள் விருப்பப்படி தேநீர் வேளையில் இதனை சூடாக பரிமாறவும்.