கர்ப்பமாக இருக்கும்போது மன அழுத்தத்தை குறைக்க வழிகள்
மன அழுத்தம் தவிர்க்க இந்த கர்ப்ப காலத்துல நம்மை சுத்தி நல்ல விஷயங்களை மட்டுமே பேசற மாதிரி பார்த்து கொள்ள வேண்டும். ஏன்னா தேவையில்லாத பயத்தை, கோபத்தை ஏற்படுத்துறவங்க கிட்ட கொஞ்சம் தள்ளியே இருப்பது நல்லது. எந்த எதிர்மறையான விஷயங்களும் நம்ம மனசுக்குள்ளே போகாம இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும் அல்லது அப்படியே போனாலும் அதிலிருந்து உடனே வெளிவர உங்களுக்கு புடிச்ச விஷயத்தை செய்யும் போது எளிதாக அந்த மனநிலையில இருந்து வெளியில வர முடியும்.
உங்க கணவரோட மாலை நேரத்துல கண்டிப்பா ஒரு நடைப்பயிற்சி போங்க. அப்படி போகும் போது அவர் கூட மகிழ்ச்சியான விஷயங்களை மட்டும் பேசிட்டு போங்க.
மன அழுத்தத்தில் இருந்து வெளியே வர உதவுவதில் உணவு ஒரு நல்ல மருந்தாகும். ஒமேகா 3 அதிகமா இருக்கிற வால்நட் (walnut), அளவாக டார்க் சாக்லேட் கூட சாப்பிடலாம். இதெல்லம் நம்ம மன நிலைமையை சரி பண்றதுக்கான உணவுகள் ஆகும்.
குடும்ப சூழ்நிலை காரணமாகவும் மன அழுத்தம் இருக்குன்னா நீங்க கண்டிப்பாக யோகா, மூச்சு பயிற்சி, தியானம் பண்ணலாம். நடந்த கசப்பான சம்பவங்களை நினைக்காம நம்ம குழந்தைக்காக நேர்மறையான விஷயங்களை மட்டும் யோசிக்கவோ இல்லனா பேசவோ பழகிக்கோங்க. இது நிச்சயமாக உங்களுக்கு ஒரு நல்ல மாற்றத்தை தரும்.
இப்படி நமக்கு பிடிச்ச விஷயத்தை நாம் செய்ய ஆரம்பிச்சா கண்டிப்பாக மன அழுத்தமோ, சோர்வோ இருக்காது.