உலக நடப்புகள்புதியவை

திருமணமான பெண்கள் நெற்றியில் குங்குமம் ஏன் வைக்க சொல்கிறார்கள் தெரியுமா..? இதுதான் காரணம்..!

சிந்து சமவெளி காலத்திலிருந்தே பெண்கள் குங்குமத்தை தங்கள் நெற்றியில் சூடிக்கொள்வதாக ஒரு சில குறிப்புகள் நம்மிடையே உள்ளது. 4000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட கலாச்சார முக்கியத்துவத்தை பெற்றது நாம் அணியும் குங்குமம்.

ஒரு பெண்ணுக்கு திருமணம் ஆகிவிட்டதா இல்லையா என்பதை சில அடையாளங்களை வைத்து நம்மால் கண்டுபிடிக்க முடியும் அந்த வகையில் குங்குமம் என்பது மிகவும் பொதுவான ஒன்று. நம் இந்திய கலாச்சாரத்தில் குங்குமத்திற்கு அதீத முக்கியத்துவம் உண்டு. திருமணத்திற்கு பின் பெண்கள் குறிப்பாக இந்து பெண்கள் குங்குமத்தை அவர்களின் நெற்றியின் வகிடில் வைத்துக்கொள்வது காலம்காலமாக தொன்று தொட்டு பின்பற்றிவரும் ஒரு பழக்கம்.

திருமணமான பெண்கள் இதுபோல் குங்குமத்தை தலையில் வைத்து கொள்வதால் அவர்களின் கணவன்மார்களின் ஆயுள் நீளும் என்று ஒரு ஐதீகம். குங்குமத்தின் நிறமான சிவப்பு என்பது இந்து கடவுள் பார்வதி தேவியின் அம்சமாகும். பெண்கள் குங்குமத்தை அணிந்து கொள்கிற போது பார்வதி தேவியின் பரிபூரண அருளை பெறுவார்கள் என்று சொல்லப்படுகிறது. விரலி மஞ்சள், வெண்காரம், படிகாரம், கஸ்தூரி மஞ்சள் ஆகியன சேர்த்து அரைக்கபட்ட பொடியுடன் நல்லெண்ணய் கலக்கி இயற்கை முறையில் குங்குமம் தயாரிக்கப்படுகிறது. திருமணமான பெண்கள் திருமணத்தின் போதும் திருமணத்திற்கு பின்னாலும் இந்த குங்குமத்தை ஏன் தலையில் வைத்துக் கொள்கிறார்கள் என்பது பற்றித்தான் இந்த பதிவில் நாம் காண இருக்கிறோம்.

பண்டைய கால பழக்கம்…சிந்து சமவெளி காலத்திலிருந்தே பெண்கள் குங்குமத்தை தங்கள் நெற்றியில் சூடிக்கொள்வதாக ஒரு சில குறிப்புகள் நம்மிடையே உள்ளது. 4000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட கலாச்சார முக்கியத்துவத்தை பெற்றது நாம் அணியும் குங்குமம். புராணத்தில் நெற்றியில் இடும் குங்குமத்தை தீபத்தின் ஜூவாலையின் வடிவில் கிருஷ்ணரை எண்ணி ராதா மாற்றியதாக சொல்லப்படுகிறது. லலிதா சஹஸ்ஹரநாமம் மற்றும் சவுந்தர்ய லஹரி ஆகியவையில் குங்குமம் குறித்து மிக உயர்வாக சொல்லப்பட்டிருக்கிறது. குங்குமம் இடுவது பண்டையகால பழக்க வழக்கமாக இருந்தாலும் அந்த காலத்தில் குங்குமத்தை பல்வேறு பொருட்களுடன் சேர்த்து வைத்துக்கொள்வதை பெண்கள் வழக்கமாக கொண்டிருந்தனர். காலப்போக்கில் பெண்களிடம் குங்குமத்தின் அளவு சிறுத்து நெற்றியிலும் தலை வகிடிலும் இப்போது வைத்துக் கொள்கின்றனர்.

மண நாளில் குங்குமம்: இன்றும் கூட திருமண நிகழ்வுகளில் முக்கிய சடங்காக இருப்பது குங்குமம் தான், மணமகன் மணமகளுக்கு குங்குமம் வைக்கும் சடங்கு முக்கியமாக பின்பற்றப்படுகிறது. மணநாள் அன்று மாங்கல்யம் அணிவிக்கும் சடங்குக்கு ஈடாக மணமகன் மணமகளுக்கு நெற்றி வகிடில் குங்குமம் வைப்பார். அல்லது ஒரு சில இல்லங்களில் அத்தை முறை உறவுகள் அனைவரும் குங்குமம் வைப்பது வழக்கம்.

மனித வாழ்வோடு குங்குமம்: குங்குமம் என்பது மனித வாழ்வோடு ஒன்றிணைந்து ஒவ்வொரு காலகட்டத்திலும் பெண்களுக்கு நம்பிக்கையின் நட்சத்திரமாக இருந்துள்ளது. பெண்கள் குங்குமத்தை பல்வேறு வடிவில் வாரத்தின் முதல் நாளிலிருந்து வைத்துக்கொள்கின்றனர். அந்த வகையில்…

திங்கள்: திங்கட் கிழமை, ஈஸ்வரனை பூஜிக்க வேண்டிய நாள் என்பதால், சிவனுக்கு உகந்த பிரசாதமான புனித சாம்பலை ஆண்களும் பெண்களும் நெற்றியில் வைத்துக் கொள்வது நன்மையை அளிக்கும்.

செவ்வாய்: செவ்வாய் அன்று, பெண்கள் நெற்றியில் சந்தனத்தை சிறிது நீரில் குழைத்து இட்டுக்கொள்ளவேண்டும். மேலும் அதனுடன் ஒரு சிறிய அளவில் குங்குமத்தையும் இட்டுக் கொள்ள வேண்டும்.

புதன்: புதன் கிழமை, மஞ்சள் மற்றும் குங்குமத்தை தனித் தனியாகவோ கலவையாக நெற்றியில் இட்டுக் கொள்ள வேண்டும்.

வியாழன்: வியாழக்கிழமை பல கடவுளர்களுக்கு உகந்த நாள் என்பதால் அன்று நாம் சந்தனத்தையும், குங்குமத்தையும் நெற்றியில் இட்டுக் கொள்ள வேண்டும்.

வெள்ளி: வெள்ளிக்கிழமை, மகாலட்சுமிக்கும், குபேரனுக்கு உரிய மிக உன்னதமான நாள். இதனால் பெண்கள் வெள்ளிக்கிழமைகளில் குங்குமத்தை அணிவதும், குபேர குங்குமத்தை அணிவதும் நல்ல பலனைத் தரும்.

பெண்களின் உடலுக்கு நன்மையை தரும் குங்குமம்: பெண்கள் அணியும் குங்குமத்திற்கு பின்னால் மிக பெரிய கதை ஒன்று சொல்லப்படுகிறது. பெண்கள் நெற்றியில் குங்குமம் வைப்பதால் பெண்களின் கருப்பை ஆரோக்கியமடைவதாகவும், இதனால் தான் திருமணம் முடிந்த பெண்களை நெற்றியின் வகுட்டில் பொட்டு வைக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. மேலும் நெற்றியில் உள்ள பல நரம்புகளை குங்குமம் தூண்டுவதன் மூலம் குழந்தை பேறு உடனடியாக கிடைக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

மனித உடலில் தனித்துவமான பகுதி என்றால் அது நெற்றிக்கண். அதனாலே தியானத்தில் நெற்றி பகுதிக்கு தனி கவனம் செலுத்துவதுண்டு. இரண்டு புருவங்களுக்கு நடுவிலுள்ள பகுதி தான் நெற்றி பகுதி. இங்கு பெண்கள் குங்குமத்தை இட்டால் மன அமைதி கிடைக்கும். மூளைக்குச் செல்லும் நரம்புகள் அதிகமான சூட்டை மூளைக்கு அனுப்பாமல், அதை கட்டுப்படுத்தக்கூடிய பகுதி நெற்றி. அந்த நெற்றியில் குங்குமம் இடுவதால் அந்த சூடு தணிகிறது. இது போன்று பல விஷயங்கள் பெண்கள் நெற்றியில் குங்குமம் அணிவதால் கிடைக்கிறது என்று நம் முன்னோர்கள் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker