புதியவைவீடு-தோட்டம்

மொத்த வீடு பராமரிப்புக்கும் இந்தவொரு பொருள் மட்டும் போதும்! இப்படி யூஸ் பண்ணுங்க

​அனைவரது சமையலறையும் இருக்கின்ற ஒரு பொருள் தான் பேக்கிங் சோடா.

இந்த பேக்கிங் சோடா உடலுக்கு கெடுதல் என பலபேர் சொல்வதும் உண்டு. இருந்தாலும் இந்த பேக்கிங் சோடாவை சமையலுக்கு எப்பயாவது ஒரு முறை தான் நாம் பயன்படுத்துவோம்.

இது சமையலுக்கு மட்டுமின்றி வீடு பராமரிப்பில் பல விஷயங்களுக்கு பயன்படுகிறது. இதை கொண்டு என்னவெல்லாம் செய்யலாம் என்று பார்க்கலாம்.

ஃப்ரிட்ஜ்ஜிலிருந்து வெளிப்படும் நாற்றம் போக்க

இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை ஃப்ரிட்ஜ்ஜை சுத்தம் செய்வது அவசியம். உணவு பொருள்கள் நீண்ட நாட்கள் வைத்திருப்பது, உணவுகள் சிந்தியிருப்பது, அழுக்குகள் என எல்லாமாய் சேர்ந்து ஃப்ரிட்ஜ்ஜில் நாற்றத்தை உண்டாக்க செய்யும்

இதனை போக்க பேக்கிங் சோடாவை சிறு கிண்ணத்தில் வைத்து ஃப்ரிட்ஜ்ஜின் பின்புறம் வைத்தால் நாளடைவில் துர்நாற்றம் நீங்கும்.

அறைகளில் வரும் வாடையை நீக்க

பேக்கிங் சோடா இந்த துர்நாற்றத்தை உண்டாக்கும் மோசமான துகள்களை எதிர்த்து நாற்றத்தை வெளியேற்றுகிறது.

ஒரு சிறிய ஜாடியில் மூன்றில் ஒரு பங்கு பேக்கிங் சோடா அதனுடன் 10 முதல் 15 சொட்டுகள் எசென்ஷியல் எண்ணெய் சேர்த்து அதில் ஒரு நாடாவை சேர்த்து விடவும். வாசனை மங்கும் போது அந்த ஜாரை குலுக்கிவிட்டால் போதுமானது.

​துணியை வெண்மையாக்க

பேக்கிங் சோடா காரமானது. இது கரையக்கூடிய உப்பு அழுக்கு மற்றும் கறைகளை அகற்ற செய்கிறது.

அழுக்கு கறைபடிந்த துணிகளை வெறும் நீரில் நனைத்து பேக்கிங் சோடா கலந்த நீரில் 20 நிமிடங்கள் ஊறவிடவும். இது கறைகளில் இருக்கும் அமிலங்களை வெளியேற்ற செய்கிறது.

​சமையலறையை சுத்தம் செய்ய

சிறிதளவு தண்ணீரில் பேக்கிங் சோடாவை கலந்து சிறிய அளவு தண்ணீரில் கலந்து பேஸ்ட் செய்யுங்கள். இதை கறைகள் இருக்கும் பகுதியில் தடவி துணியால் அழுத்தி துடைத்து எடுக்கவும்.

இதை கொண்டு அடுப்புகள், காஃபி கறைகள், பளிங்கு கற்கள், சிம்னி அடுப்பு, மைக்ரோவேவ், வெள்ளி பொருள்கள் என அனைத்தையும் சுத்தம் செய்யலாம்.

​கழிவுத்தொட்டி வாடைகளை போக்க

பேக்கிங் சோடாவை பயன்படுத்தலாம். இது துர்நாற்ற வீசும் அமில மூலக்கூறூகளுடன் தொடர்பு கொண்டு அதை வெளியேற்றுகிறது.

குப்பைத்தொட்டி மற்றும் நீர்த்தொட்டி அடியில் பேக்கிங் சோடாவை பரப்புவதன் மூலம் குப்பை வாசனை 70 % குறையக்கூடும்.

கம்பள கறைகளை அகற்ற செய்கிறது

கனமான கம்பளியாக இருந்தாலும் முதலில் அதன் மேல் வினிகரை ஸ்ப்ரே செய்து விடவும். பிறகு ஒரு மணி நேரம் கழித்து பேக்கிங் சோடாவை பிரஷ் உதவியுடன் முழுக்க பரப்பி விடவும். பிறகு சுத்தமான துணியால் அந்த இடத்தை துடைத்துவிட்டால் பளிச்சென்று இருக்கும்.

​குளியலறை க்ளீனர்

பேக்கிங் சோடா குளியலறையை வெண்மையாக்க செய்கிறது. இது குளியலறையில் இருக்கும் கிருமிகளை வெளியேற்ற செய்கிறது. இது வெளியில் வாங்கும் க்ளீனர்களை காட்டிலும் குறைவான செயல்திறன் கொண்டது.

கழிப்பறைகள், குளியல் தொட்டி, குளியலறை சுவர்களில் பேக்கிங் சோடாவை நீரில் கரைத்து பேஸ்ட் பதத்துக்கு ஆக்கி விடவும். இதை அதன் மேல் தடவி பிறகு துணியால் துடைத்து எடுத்தால் பளிச் தோற்றம் கிடைக்கும்.

​வெள்ளி பொருள்களுக்கு மெருகூட்ட செய்கிறது

வெள்ளி பொருள்கள் பளிச் என்று வைக்க பேக்கிங் சோடா உதவுகிறது வெள்ளி பொருள்களை சுத்தம் செய்ய அலுமினிய பேக்கிங் பான் அல்லது தகடு சேர்த்து நீரை கொதிக்க வைத்து 1 டீஸ்பூன் சமையல் சோடா அரை கப் வெள்ளை வினிகர் சேர்த்து கொதிக்கும் நீரில் ஊற்றி எடுக்கவும்.

பிறகு வெள்ளியை பேக்கிங் சோடா சேர்த்து ஊறவிடவும். 30 விநாடிகளுக்குள் வெள்ளிப்பாத்திரங்களை அகற்றலாம்.

இந்த கலவையில் வெள்ளி அலுமினிய பான் மற்றும் சமையல் சோடாவுடன் எதிர்வினை புரிகிறது. இது வெள்ளிப்பொருள்களில் கெடுதலை உண்டாக்கும் மஞ்சள் எச்சத்தை வெளியேற்றுகிறது.

​அடிப்பிடித்த பாத்திரம்

பாத்திரத்தின் அடியில் கரிப்பிடித்திருந்தால் பேக்கிங் சோடாவை தூவி கரி இருக்கும் வரை நீர் விட்டு அடுப்பில் வைத்து சூடேற்றவும்.

இது இலேசாக கொதி வரும் போதே இறக்கி தேய்த்தால் கறைகள் நீங்கும். இந்தகொதித்த நீரை கொண்டு பாத்திரம் அடி வரை சுத்தம் செய்யலாம்.

​காலணிகளில் துர்நாற்றம் போக்க

இரண்டு தேக்கரண்டி பேக்கிங் சோடாவை எடுத்து மெல்லிய துணிகளில் ஊற்றி அதை மெல்லிய சரமாக்கி துணியில் துடைத்து அதை ஷூக்களின் உள்ளே வைத்தெடுக்கவும்.

ஷூவை போடும் போது பேக்கிங் சோடா நனைத்த துணியை எடுத்து விட்டு போடலாம்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker