சுருட்டை முடியைப் பராமரிப்பதே சிரமமாக உள்ளதா..? இதை மட்டும் ஃபாலோ பண்ணுங்க போதும்..
கருகருவென சுருட்டை முடிகள் பெண்களுக்கு அழகாக இருந்தாலும் அன்றாட வாழ்க்கையில் அவர்கள் சிரமங்களை சந்திக்கின்றனர். ஏனெனில் அவர்களின் முடிகள் அடர்த்தியாக காணப்பட்டாலும், முடிகளின் நுனிகளில் பிளவுகள் அதிகமாக ஏற்பட்டு, வேகமாக வறண்டு, அடிக்கடி சிக்கலாகும். இதன் காரணமாக எந்த ஹேர் ஸ்டைலும் ஒத்து வராமல் இருக்கும். பார்ட்டிகள் அல்லது விழாவிற்கு செல்லும் போது சுருள் முடியானது நம் கைகளுக்கு அடங்காமல் இருக்கும். எனவே கர்லி ஹேர் கொண்ட பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் மற்றும் அதன் தீர்வுகள் குறித்து இங்கு தெரிந்துகொள்வோம்.
மைல்டு ஷாம்பூ : ஆல்கஹால், சல்பேட் மற்றும் பராபன்கள் போன்ற நச்சு இரசாயனங்கள் இல்லாத மைல்டு ஷாம்பூவை பயன்படுத்தவும். இது உங்கள் உச்சந்தலையில் எரிச்சலூட்டும், எனவே ப்ராகரன்ஸ், சல்பேட் மற்றும் பராபன் இல்லாத ஷாம்புவை பயன்படுத்துங்கள். இன்று மார்க்கெட்டில் கர்லி ஹேருக்கென்றே பல விதமான ஷாம்பூகள் கிடைக்கிறது, அவற்றை வாங்கி பயன்படுத்தலாம்.
எண்ணெய் மசாஜ்` : சுருள் முடி உள்ளவர்களுக்கு கூந்தல் வறட்சியாக இருக்கும். எனவே குளிப்பதற்கு முன்னர் தேங்காய் அல்லது ஆலிவ் எண்ணெய்யை சூடு செய்து கூந்தலில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். மேலும் இவர்கள் குளிக்கும்போது கண்டிஷனர் பயன்படுத்துவது அவசியம், கூந்தலுக்கு கண்டிஷனர் அப்ளை செய்துவிட்டு 20 நிமிடங்கள் கழித்து வாஷ் செய்யவும். இந்த கண்டிஷனர் உங்கள் தலைமுடி மென்மையாக இருக்க உதவுகிறது.
அகன்ற பல் சீப்பு : நீங்கள் தலைக்கு குளிப்பதற்கு முன்னர் உங்கள் தலைமுடியில் அகன்ற பல் கொண்ட சீப்பைப் பயன்படுத்தி சிக்குகளை நீக்குங்கள். இப்படி செய்வதால் குளித்த பின்னர் உருவாகும் அதிக சிக்குகள் தவிர்க்கப்படும். மேலும் ஹேர் வாஷ் செய்த பிறகு, உங்கள் தலைமுடியை உங்கள் விரல்களை கொண்டு சிக்குகளை நீக்கவும்.
ஹர் ஸ்டைலிங் கருவி : ஹர் ஸ்டைலிங் கருவிகளை பயன்படுத்துவதை தவிர்த்து விடுங்கள். இதில் இருந்து வரும் அதிக வெப்பநிலை உங்கள் தலைமுடியின் இயற்கையான அமைப்பை அகற்றும். மேலும் உங்கள் முடியை ட்ரை செய்ய ஹேர் ட்ரையரை பயன்படுத்த வேண்டாம். அதற்கு பதிலாக காட்டன் துணியை பயன்படுத்துங்கள்.
சூடான நீரை பயன்படுத்தாதீர்கள் : சூடான நீரில் உங்கள் கூந்தலை அலசுவதை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள். சூடான நீர் உங்கள் உச்சந்தலையில் உள்ள இயற்கை எண்ணெய் சத்தை நீக்கி கூந்தலை வறட்சியாக்கும். நீங்கள் கூந்தலை ஷாம்பு கொண்டு வாஷ் செய்யும் போது குளிர்ந்த நீரை பயன்படுத்துவது பாதுகாப்பானது.
ஹேர் ட்ரிம் : ஹேர் ட்ரிம் என்பது ஸ்ப்ளிட் எண்டு எனும் பிளவு முனைகள் மற்றும் சேதமடைந்த முடியை அகற்ற உதவும் முறையாகும். ஒவ்வொரு 6-8 வாரங்களுக்கும் உங்கள் தலைமுடியை ட்ரிம் செய்யவும். இப்படி செய்து வந்தால் ஸ்ப்ளிட் எண்ட்ஸ் பரவுவது தடுக்கப்பட்டு, கூந்தல் உதிர்வு பிரச்சனைகள் கட்டுக்குள் வரும்.
ஹேர் மாஸ்க் : உங்கள் கூந்தலுக்கு ஹேர் மாஸ்க் அவசியம். முட்டை ஹேர் மாஸ்க், ஆலிவ் எண்ணெய், வினிகர் போன்றவற்றையும் உங்கள் கூந்தலுக்கு பயன்படுத்தலாம். இதனை அப்ளை செய்துவிட்டு 30 நிமிடங்களுக்குப் பிறகு ஷாம்பூ கொண்டு வாஷ் செய்யுங்கள். எண்ணெய் மசாஜும் உங்கள் கூந்தல் ஆரோக்கியமாக இருக்க அவசியம். உங்கள் உச்சந்தலையில் எண்ணெயை மசாஜ் செய்ய உங்கள் விரல் நுனியைப் பயன்படுத்தவும்.