ஆரோக்கியம்புதியவை

முழங்கால் வலியா? இந்த 10 பயிற்சியில எதையாவது தினம் செய்ங்க… வலி ஓடிடும்…

முழங்கால் வலி நமது அன்றாட வாழ்க்கை பணிகளை அதிகமாக பாதிக்கும். ஆனால் இதை நினைத்து இனி நீங்கள் வருத்தப்பட வேண்டாம். ஏனென்றால் எளிய பயிற்சிகள் மூலம் நீங்கள் இந்த முழங்கால் பிரச்சனையில் இருந்து விடுபடமுடியும். நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

முழங்கால் வலி என்பது முதியவர்களுக்கு ஏற்படும் ஒரு பொதுவான பிரச்சினையாகும். இது நாளடைவில் அதிக வலியை ஏற்படுத்தி, சரியாக கவனிக்கப்படாவிட்டால், அது முழங்கால் மூட்டுக்கு கூட சேதத்தை ஏற்படுத்தும். முழங்கால் மூட்டு, முழங்கால் செயல்பாட்டில் முக்கிய பங்கு வைக்கிறது. இந்த பிரச்சனையை சரி செய்ய முழங்கால் அசைவுகளை அதிகரிப்பதற்கு பதிலாக, பெரும்பாலான மக்கள் நடப்பதை தவிர்த்து முழங்கால் இயக்கத்தை நிறுத்தி விடுகிறார்கள். ஆனால் இது போன்று செய்வது பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை மறந்து விடாதீர்கள்!

​முழங்கால் வலி

உங்கள் வயது என்னவாக இருந்தாலும், ஆரோக்கியமாக இருக்க உங்கள் அன்றாட பழக்க வழக்கத்தில் உடற்பயிற்சியை சேர்த்துக்கொள்ள வேண்டும். உடற்பயிற்சி செய்வது உங்கள் முழங்கால்கள் வலிமை பெற உதவும் என்பதில் சந்தேகம் இல்லை. உடற்பயிற்சி செய்வது நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் என்பதை நாம் ஏற்கனவே அறிவோம்!

உங்களுக்கு முழங்கால் வலி அல்லது இதுபோன்ற வேறு ஏதேனும் பிரச்சினை இருந்தால் நீங்கள் கவலைப்பட வேண்டாம். உங்கள் முழங்கால்களை வலுப்படுத்த உங்கள் அன்றாட பழக்க வழக்கத்தில் நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய 10 பயிற்சிகள் பற்றி பார்க்கலாம் வாருங்கள்.

​ஸ்குவாட்ஸ்

ஸ்குவாட்ஸ் உடற்பயிற்சி முதுகுக்குக் கீழ் இருக்கும் உட்காரும் பகுதி, மற்றும் பின்தொடை தசைநார் ஆகிய பாகங்களை வலுப்படுத்த உதவுகிறது. ஒவ்வொரு நாளும் ஸ்குவாட்ஸ் உடற்பயிற்சி செய்வது முழங்கால் வலியிலிருந்து விடுபட நமக்கு உதவுகிறது. உங்கள் முழங்கால்களை வலுப்படுத்தி, முழங்கால்களில் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்த உதவுகிறது. இந்த உடற்பயிற்சியை சரியான முறையில் மேற்கொள்வதன் மூலம் நீங்கள் சிறந்த பலன்களை அடைய முடியும்.

லங்கு உடற்பயிற்சி

உங்கள் பின்தொடை தசைநார், இடுப்பு, தொடைகள், முழங்கால்களை வலுப்படுத்த லங்கு உடற்பயிற்சி உதவுகிறது. இதனால் நமது உடல் பாகங்களில் சமநிலை மேம்படுகிறது. நமது தசைகள் வலுவாக இருந்தால் முழங்கால்கள் ஆரோக்கியமாக இருக்கும். இந்த உடற்பயிற்சி கால்களில் உள்ள கொழுப்பை குறைக்க உதவுகிறது.

​முழங்கால் சுழற்சி

முழங்கால் சுழற்சி பயிற்சி உங்கள் முழங்கால்களில் இடுப்பு, பின்தொடை தசைநார் ஆகியவற்றை வலுப்படுத்த உதவுகிறது. உங்கள் முதுகு மற்றும் கீழ் முதுகை எளிதாக நீட்ட இது ஒரு சுலபமான வழியாகும். இந்த முழங்கால் சுழற்சி பயிற்சி முதுகெலும்பின் சிறந்த இயக்கத்திற்கு வழிவகுக்கின்றன.

​கால் தூக்குதல்

நேராக கால் தூக்குதல், நேராக கால் உயர்த்துவது போன்ற பல்வேறு உடற்பயிற்சிகளின் மூலம் நீங்கள் இந்த முழங்கால் வலியிலிருந்து விடுபடலாம். இது உங்கள் பின்தொடை தசைநார் மற்றும் கன்று தசைகளை பலப்படுத்த உதவும் ஒரு சக்திவாய்ந்த உடற்பயிற்சியாகும். மேலும் உங்கள் முழங்கால்களில் அழுத்தம் கொடுத்து, இது எடை இழப்புக்கும் உதவுகிறது.

​இடுப்பெலும்பு

இடுப்பெலும்பு பயிற்சி அல்லது பக்க கால்களை தூக்கி உடற்பயிற்சி செய்தல் இடுப்புக்கு வெளியே அமைந்துள்ள உங்கள் தசைகளின் இயக்கத்திற்கு உதவுகிறது. அவை தசையின் செயல்திறனை மேம்படுத்துவதற்கும், நமது முழங்கால்களில் வலியைக் குறைப்பதற்கும் உதவுகின்றன.

​புட்டத்தமனி உடற்பயிற்சி

இந்த பயிற்சியை நீங்கள் ஒருவேளை கேள்விப்பட்டிருக்கலாம். இந்த உடற்பயிற்சி உங்கள் முழங்கால்களை வலுவாக வைத்திருக்க உதவும். அதே நேரத்தில், இடுப்பு, முதுகெலும்பு மற்றும் உங்கள் முக்கிய உறுப்புகளை வலுப்படுத்த இது உதவும். இது உங்கள் கீழ் முதுகில் இயக்கத்தை ஏற்படுத்தி, ஸ்திரத்தன்மையை ஊக்குவிக்கிறது. மேலும் இந்த உடற்பயிற்சியினால் நீங்கள் எளிதாக படிக்கட்டுகளில் ஏற முடியும்.

​கெண்டைக்கால்

கெண்டைக்கால் உடற்பயிற்சி உங்கள் கன்று தசைகள் மற்றும் முழங்கால்களுக்கும், கணுக்கால்களுக்கும் ஒரே நேரத்தில் பயனளிக்கும் ஒரு சிறந்த உடற்பயிற்சி ஆகும். இந்த பயிற்சி நமது முழங்கால்களில் சமநிலை மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது.

​தொடை சுழட்டுதல்

தொடை சுழட்டுதல் உடற்பயிச்சி உங்கள் முழங்கால் மூட்டுகளை வலுப்படுத்தி, உங்கள் புட்டத்தமனிகளில் இயக்கத்தை ஏற்படுத்துகிறது. மேலும், முழங்கால்களில் ஏற்படும் காயங்களைத் தடுக்க இவை உதவுகின்றன.

​புட்டாக் கிக்

புட்டாக் கிக் உடற்பயிற்சி எளிதானவை மற்றும் முழங்கால் பிரச்சனைகளுக்கு மிகவும் பயனுள்ள உடற்பயிற்சி ஆகும். நமது முழங்கால்களைக் கஷ்டப்படுத்தாமல், இது முழங்கால் வலிமையை மேம்படுத்துகிறது. முழங்கால்களில் சுழற்சியை மேம்படுத்தி, முழங்கால்கள் வேகமாக இயங்க உதவுகிறது. படுத்துக் கொண்டிருக்கும்போதோ அல்லது நிற்கும்போதோ இந்த உடற்பயிற்சியை நீங்கள் அதைச் மேற்கொள்ளலாம்.

​நாற்காலி டிப்ஸ்

இந்த பயிற்சி தொடை எலும்புகள், பின்தொடை தசைநார், இடுப்பு ஆகிய பாகங்களை வலுப்படுத்த உதவுகிறது. மேலும் இது உங்கள் முழங்கால்களில் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்க உதவுகிறது.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker