இரவில் அடிக்கடி சிறுநீர் வருகிறதா? இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க… பிரச்சினை சரியாயிடும்…
சிலருக்கு இரவு நேரங்களில் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பழக்கம் இருக்கும். தூங்கிக் கொண்டிருக்கும் போது எழுந்து சிறுநீர் கழிக்க போவது மிகவும் எரிச்சலடைய செய்யும். ஆனால் இதுபோன்ற பிரச்சினைகளிலிருந்து விடுபட சில குறிப்புகள் உள்ளன. இங்கு குறிப்பிட்டுள்ள இந்த பட்டியலை படித்து பயனடையுங்கள்.
நீங்கள் இரவு தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது சிறுநீர் கழிக்க வேண்டும் என்று தோன்றினால், படுக்கையிலிருந்து எழுந்து போவது மிகவும் எரிச்சல் அடைய செய்கிறது. அதுவும் நாம் சோர்வாக இருக்கும் காலங்களில் சொல்லவே வேண்டாம். இந்த பிரச்சனை ஏற்படுவதற்கு சில காரணங்கள் உள்ளன. இந்த பிரச்சனையை சரிசெய்ய நீங்கள் பல்வேறு முயற்சிகள் எடுத்தும் பலன் இல்லாமல் இருந்திருக்கலாம்.
என்ன செய்யலாம்?
குறிப்பாக மாலை நேரம் தொடங்கி நீங்கள் திரவ பானங்களை தவிர்த்து கூட முயற்சி செய்திருக்கலாம். ஆனால் இவை எதுவும் உங்களுக்கு பலன் அளிக்க வில்லையா? அப்படி என்றால் பின்வரும் உதவிக் குறிப்புகளை பயன்படுத்த முயற்சி செய்யுங்கள்.
வழக்கமாக ஒரு நாளைக்கு 1 முதல் 2 லிட்டர் சிறுநீரை நாம் வெளியேற்றுகிறோம். அதில் 25 சதவிகிதம் சிறுநீர் இரவில் வெளியேற்றப்படும். இரவு நேரங்களில் அடிக்கடி நீங்கள் சிறுநீர் கழிக்க செல்வது போல் உணர்கிறீர்களா? அப்படி என்றால் உங்களுக்கு நாக்டீரியா பிரச்சினை உள்ளது என்று அர்த்தம். இதனால் நமது உடல் அதிகமாக சிறுநீரை உற்பத்தி செய்கிறது. இந்த பிரச்சினை வயது முதிர்வு காரணமாகவும் ஏற்படுகிறது. மேலும் இது ஆண்களை விட பெண்களை அதிகம் பாதிக்கிறது. இந்த பிரச்சனை ஏற்பட்டவர்கள் இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்க எழுவார்கள்.
காரணங்கள்
நீங்கள் இரவில் அடிக்கடி சிறுநீர் கழிப்பதை கவனித்திருந்தால்? இதற்க்கான காரணம் என்ன என்ற குழப்பம் உங்களுக்கு இருக்கலாம். நமது உடலில் ஏற்படும் அதிகரித்த சிறுநீர் உற்பத்தி இது போன்ற பிரச்சனைகளுக்கு காரணமாகிறது.
இந்நோய் ஏற்படுவதற்கான காரணங்கள்.
இரவு தூங்குவதற்கு முன்பு அதிகமாக திரவ உணவுகளை உட்கொள்வது
சிறுநீரக செயல்பாடு பலவீனம் அடைதல்
சிறுநீர்ப்பை கோளாறு
ஆண்களில் புரோஸ்டேட் பிரச்சினைகள்
திரவ குவிப்பு என அழைக்கப்படும் எடிமா உருவாக்கம்
சில மருந்துகளின் காரணமாக
அடிப்படை நோய்
மருத்துவரின் ஆலோசனை
நீங்கள் எப்பொழுது மருத்துவரின் ஆலோசனையை பெறவேண்டும்? இந்த பிரச்சினை உங்களது இரவு தூக்கம் மற்றும் உங்களது ஓய்வு போன்றவற்றில் இடையூறு விளைவிக்கிறது என்றால், நீங்கள் நிச்சயமாக மருத்துவரை அணுக வேண்டும். ஆனால் எப்போதேனும் இந்த பிரச்சனை ஏற்படுகிறது என்றால் இதைக் குறித்து நீங்கள் கவலைப்படத் தேவையில்லை.
அடிக்கடி இப்படி ஏற்படுகிறது என்றால், நீங்கள் மருத்துவரை சந்திப்பது மட்டுமே இதற்கு முழுமையான தீர்வாக இருக்க முடியும். மருத்துவர் உங்களைப் பரிசோதித்து சிகிச்சை முறையை கூறுவார்.
குறிப்பாக உங்களது திரவ உணவு பழக்கவழக்கம், ஹார்மோன் பிரச்சனை, சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரகத்தில் கல் போன்ற பிரச்சினைகள், சிறுநீர் பாதை நோய் தொற்றுகள், சிறுநீரக பிரச்சனை மற்றும் இதய பிரச்சினைகள் குறித்து மருத்துவர் பரிசோதித்து உங்களுக்கு தீர்வினை வழங்குவார்.
செய்ய வேண்டியவை
மருத்துவரிடம் செல்வதற்கு முன் இரவில் சிறுநீர் கழிப்பதை தடுப்பதற்கு வீட்டிலேயே சில விஷயங்களை செய்ய முடியும். அதற்கு பின்வரும் உதவிக் குறிப்புகள் உங்களுக்கு பயனளிக்கும்.
இரவு எட்டு மணிக்குப் பிறகு திரவ உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளாதீர்கள். நீங்கள் ஒரு நாளைக்கு ஒரு லிட்டர் அல்லது ஒன்றரை லிட்டர் தண்ணீர் எடுத்து கொண்டால் இது ஒரு பிரச்சினையாக இருக்காது.
காபின் கலந்த உணவுகள் மற்றும் பானங்கள், மது அருந்துதல் போன்றவற்றை கட்டுப்படுத்துங்கள்.
கால்களில் வீக்கம் ஏற்படுகிறது என்றால் உங்கள் கால்களுக்கு அடியில் ஒரு தலையணையை வைத்து தூங்குங்கள்.
நீங்கள் தூங்க செல்வதற்கு முன் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதை கவனித்து சாப்பிடுங்கள். ஏனென்றால் செரிமானம் சிறுநீர் உற்பத்தியை தூண்டுகிறது. டையூரிடிக் டெஸ்மோ பிசின் போன்ற சோதனைகளை மேற் கொள்ளலாம்.