சமையல் குறிப்புகள்புதியவை

வாய்ப்பன் பலகாரம் செய்யத் தெரியுமா?

தேவையான பொருட்கள் :


* கோதுமை மாவு – 2 கப்
* நன்கு பழுத்த வாழைப்பழம் – 2 (பெரியது)
* சீனி – அரை கப்
* பேக்கிங் பவுடர் – கால் தேக்கரண்டி
* எண்ணெய் – பொரிப்பதற்கு
* உப்பு – சிறிதளவு

செய்முறை :
* முதலில் கோதுமை மாவுடன் உப்பு, பேக்கிங் பவுடர் மற்றும் சீனி சேர்த்து கலந்து வைக்கவேண்டும்.

* பின்னர் வாழைப்பழத்தை நன்கு மசித்துக் கொள்ளவும்.

* மசித்த வாழைப்பழத்தை கோதுமை மாவுக் கலவையுடன் சேர்த்து நன்றாகக் கலந்து பிசையவேண்டும்.

* பின்னர் சப்பாத்தி மாவு பதத்திற்கு வரும் வரை பிசையவும்.

* இப்பொழுது வாணலியில் எண்ணெயைக் கொதிக்கவிடவும்.

* கையைத் தண்ணீரில் நனைத்துக் கொண்டு, பிசைந்த மாவை சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

* பின்னர் அவற்றை எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

* சுவையான வாய்ப்பன் தயார்.



Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker