மல்லிகை பூ போன்ற இட்லி வேண்டுமா? இந்த டிப்ஸ்களை தெரிஞ்சுக்கோங்க
இட்லிக்கு மாவு அரைக்கும்போது ஒரு தேக்கரண்டி ஜவ்வரிசி சேர்த்து ஊற வைத்து அரைத்தால் மிருதுவாக இருக்கும்.
4 பங்கு இட்லி அரசிக்கு ஒரு பங்கு உளுந்து சேர்த்து ஒரு தேக்கரண்டி வெந்தயம், ஒரு தேக்கரண்டி ஜவ்வரிசி, ஒரு தேக்கரண்டி வெள்ளை அவல் ஆகியவற்றை சேர்த்து 5 மணி நேரம் ஊறவைத்து அரைத்தால் பஞ்சுபோல இட்லி மென்மையாக வரும்.
இட்லிக்கு ஊற்றும் மாவில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி கலக்கி விட்டு பின்னர் இட்லி ஊற்றி அவித்து எடுக்கும்போதும் இட்லி ஒட்டாமல் அருமையாக வரும்.
இட்லியை அவித்த பிறகு, இட்லி தட்டில் இருந்து இட்லியை எடுக்கும் முன்னர் சிறிதளவு சுத்தமான தண்ணீரை இட்லி மீது தெளித்து எடுத்தால் இட்லி துணியில் ஒட்டாமல் வரும்.
மிக முக்கியமான விஷயம் இட்லி அவிக்கும் நேரம் ரொம முக்கியமானது. 10 நிமிடத்திற்கு மேல் இட்லியை அவிக்க கூடாது. சரியாக 10 நிமிடத்தில் இட்லி அவிந்து அழகாக வர வேண்டும். அதுதான் இட்லியின் சரியான பதம்.