உலக நடப்புகள்புதியவை

மார்ச் மாதம் பிறந்தவர்களிடம் இருக்கும் சில அதிர்ச்சிகரமான ரகசிய குணங்கள் என்ன தெரியுமா?

பிறக்கும் மாதம் அவர்களின் வாழ்க்கையிலும், ஆளுமையிலும் பல தாக்கங்களை ஏற்படுத்தும் என்று நாம் அறிவோம். அந்த வகையில் மார்ச் மாதம் பிறந்தவர்களுக்கு என்று சில தனிப்பட்ட குணங்களும், சிறப்புகளும் இருக்கிறது. மார்ச் மாதத்தில் பிறந்தவர்களை விட சிக்கலான ஒரு நபரை நீங்கள் பார்க்க முடியாது.

சூப்பர் ஆக்டிவாக இருக்கும் இவர்கள் தங்களை சுற்றி எப்போதும் ஒரு மகிழ்ச்சியான சூழ்நிலையை உருவாக்குவார்கள், அதேசமயம் இவர்கள் அதீத பிடிவாதமும், சின்ன முட்டாள்த்தனமும் இவர்களை எப்போதும் பிரச்சினைகளில் சிக்க வைக்கும். இந்த பதிவில் மார்ச் மாதத்தில் பிறந்தவர்களிடம் இருக்கும் வித்தியாசமான குணங்கள் என்னவென்று பார்க்கலாம்.

பகுத்தறியும் திறன்

இவர்கள் அனைத்தையும் சரியாக ஆராயக்கூடியவர்களாக இருப்பார்கள் குறிப்பாக காதலில். இவர்கள் தங்கள் காதலரை சரியாக தேர்ந்தெடுக்கமால் இருக்கலாம், ஆனால் இவர்களை காதலில் முட்டாளாக்குவது என்பது மிகவும் கடினம். நீங்கள் அவர்கள் எந்த வழியிலாவது ஏமாற்ற திட்டமிட்டு இருந்தால் அவர்கள் அதனை முன்கூட்டியே உணர்திருப்பார்கள். நம்பிக்கை மற்றும் துரோகங்களைப் பற்றி அவர்கள் உணர்ச்சிவசப்படுவதால் அவர்கள் எளிதில் மன்னிக்க மாட்டார்கள், அதனால்தான் எதிரிகளை அதிகம் உருவாக்குகிறார்கள்.

குறும்புக்காரர்கள்

இவர்களின் சேட்டைகளுக்கு எல்லையே இருக்காது, மற்றவர்களை விளையாட்டாக ஏமாற்றுவது இவர்களில் சேட்டைகளில் முக்கியமானதாகும். இதனால் பலரும் இவர்கள் மேல் அடிக்கடி கோபப்படுவார்கள். இவர்களின் குறும்புகள் சிலசமயம் விபரீதமானதாக கூட மாறும், இவர்களின் மூளைக்குள் எப்பொழுதும் வித்தியாசமான செயல்கள் நிறைந்திருக்கும். தங்கள் மூளையில் இருக்கும் குழப்பமான எண்ணங்களை செய்லில் காட்ட இவர்கள் எப்போதும் தயாராக இருப்பார்கள்.

இரக்கமானவர்கள்

அவர்களின் இதயங்கள் அனுதாபத்தால் நிறைந்திருக்கின்றன. மற்றவர்களுக்கு ஏற்படும் பிரச்சினையை தங்கள் பிரச்சினையாக நினைத்து தன்னால் முடிந்த அனைத்து வழிகளிலும் அதனை சரிசெய்ய தீவிரமாக முயலுவார்கள். உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவ வேண்டியது தங்களின் கடமை என்று இவர்கள் நினைப்பார்கள். மக்கள் மத்தியில் அவர்கள் மிகவும் போற்றப்படுவதற்கும் மரியாதையுடன் நடத்தப்படுவதற்கும் இது ஒரு காரணம்.

உறவிலிருந்து பின்வாங்க மாட்டார்கள்

மார்ச் மாதத்தில் பிறந்தவர்கள் பெயரைப் பெறுவதற்காக தங்கள் உறவுகளை மட்டும் மகிழ்விக்க மாட்டார்கள். அவர்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவைப் பற்றியும் அவர்கள் மிகவும் தீவிரமாகவும் விசுவாசமாகவும் இருக்கிறார்கள். மார்ச் மாதத்தில் பிறந்தவர்கள் ஏமாற்றுவதை நம்ப மாட்டார்கள், அன்பு என்பது அவர்களுக்கு ஒரு தீவிரமான விஷயமாகும். கடினமான சூழ்நிலைகளில் கூட அவர்கள் தங்கள் கூட்டாளர்களுடன் நடப்பார்கள் என்று நீங்கள் எதிர்பார்க்கலாம்.

இயற்கையை நேசிப்பவர்கள்

இவர்கள் செல்லப்பிராணிகளை அதிகம் விரும்புபவராக இருப்பார்கள், அவற்றை அர்ப்பணிப்புடன் கவனித்துக் கொள்வார்கள். அடக்கமான மனப்பான்மையுடன் ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வதை அவர்கள் நம்புகிறார்கள். இயற்கையிடம் எப்போதும் ஆறுதலை தேடுபவர்களாக இருப்பார்கள்.

அமைதியை விரும்புபவர்கள்

இவர்கள் அனைவருடனும்நட்பாக பழகக்கூடியவர்களாக இருப்பார்கள். குறும்புக்காரர்களாக இருப்பினும் இவர்கள் அதிக சத்தத்தை விரும்பமாட்டார்கள். நூலகம் இவர்களுக்கு பிடித்த இடமாக இருக்கும், ஏனெனில் அங்குதான் சத்தம் இல்லாமல் இருக்கும். இவர்கள் சுய உணர்தல் கொண்டவர்கள் மற்றும் வாழ்க்கையின் அம்சங்களை புரிந்து கொள்ள விரும்புகிறார்கள்.

தத்துவம் அவர்களுக்குள் வாழ்கிறது

உங்களுக்கு பிரச்சினைகள் ஏற்படும் போது அதனை மார்ச் மாதத்தில் பிறந்தவர்களிடம் தாராளமாக கூறலாம். ஏனெனில் அவர்களுக்குள் தத்துவ ஞானி ஒளிந்திருப்பார். அவர்கள் வாழ்க்கையின் அம்சங்களை சிந்தித்து, ஒவ்வொரு சூழ்நிலையையும் தங்கள் நுண்ணறிவு மூலம் மதிப்பிட்டு அதற்கான தீர்வுகளை கூறுவார்கள்.

நேர்மறையான ஒளி

மார்ச் மாதத்தில் பிறந்தவர்கள் முட்டாள்த்தனமான செயல்களில் ஈடுபடுவதை நீங்கள் பார்ப்பது மிகவும் அரிது. அவர்கள் தங்கள் நேர்மறையான ஆற்றலுடன் மக்களை உற்சாகப்படுத்துவதாகவும், அவர்கள் எதைச் செய்தாலும் மக்களை மகிழ்ச்சியடையச் செய்வதாகவும் நம்புகிறார்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கையில் சிறந்ததைச் செய்வதில் ஆக்கப்பூர்வமாக ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மோசமான அனுபவங்களை நம்ப மாட்டார்கள், அவர்கள் நேர்மறையான அணுகுமுறையை நம்புகிறார்கள்.

கையாளும் திறன்

இவர்களை எளிதில் கையாளலாம், இதனால் இவர்களை பலரும் எளிதில் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளது. இவர்கள் மிகவும் தாராளமானவர்கள், அனைவரையம் புரிந்து கொள்ள முயற்சி செய்கிறார்கள், ஆனால் அவர்களின் இணக்கத்தன்மை அவர்களின் பலவீனங்களில் ஒன்றாகும்.

கூச்சம்

இவர்கள் மிகவும் கூச்சசுபாவம் கொண்டவர்களாக இருப்பார்கள். பல சந்தர்ப்பங்களில் இவர்களின் தயக்கம் இவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்துவதாக இருக்கும். இந்த கூச்ச சுபாவத்தை பலரும் இவர்களுக்கு எதிராக பயன்படுத்துவார்கள்.

மேலாதிக்கம்

இவர்கள் அனைவரின் மீதும் அதிகாரம் செலுத்துவதை விரும்புவார்கள், விஷயங்கள் இவர்களுக்கு சாதகமாக நடக்காத போது இவர்கள் அதனை விரும்புவதில்லை, அதனால் நிலையை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர எதனையும் செய்வார்கள். அவர்கள் சிறந்த தலைவர்கள், ஆனால் மற்றவர்கள் தங்கள் வேலையைச் செய்யக் காத்திருக்கும்போது, அவர்கள் பொறுமையிழந்து போகிறார்கள்.

கணிக்கமுடியாதவர்கள்

இவர்களின் ஆற்றல் நெருப்பு போன்றது, எனவே இவர்கள் எளிதில் கோபப்படக்கூடியவர்களாகவும், தடுத்து நிறுத்த முடியாதவர்களாகவும், நிலையற்றவர்களாகவும் இருக்கிறார்கள். இது இவர்களின் இயற்கையான குணமாக இருக்கலாம் ஆனால் தங்களின் அன்புக்குரியவர்களுக்கு இவர்கள் எப்பொழுதும் நேர்மையானவர்களாகவும், அர்ப்பணிப்பு கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker