புதியவைவீடு-தோட்டம்

சமையலுக்கும் அழகுக்கும் தவிர மற்ற எதுக்கெல்லாம் எலுமிச்சை பழத்தை பயன்படுத்தலாம்…

எலுமிச்சை ஒரு சமையலுக்கான தாவரம் என்பதை தாண்டி அது ஒரு மருத்துவ குணம் மிக்க தாவரம் ஆகும். அதை நாம் அதிகமாக சாறு பிழிந்து குடிப்பதற்கும் சமையலுக்கும் பயன்படுத்துகிறோம். எலுமிச்சை தன்னுள்ளே பல மருத்துவ நன்மைகளை கொண்டுள்ளது. எனவே உணவை தாண்டி நமது வீட்டில் பல விஷயங்களுக்கு நாம் எலுமிச்சையை பயன்படுத்தலா. இவற்றில் இலை முதல் காய் வரை அனைத்தும் பயனளிக்க கூடியதாக இருக்கின்றன. அவற்றை வரிசையாக இப்போது தெரிந்துக் கொள்ளலாம்.

​துடைப்பதற்கு பயன்படுத்தலாம்

எலுமிச்சை பழம் வீட்டில் உள்ள பொருட்களை துடைப்பதற்கு பயன்படுகிறது. அதற்கான துடைப்பானை எப்படி செய்யலாம் என இப்போது பார்ப்போம். முதலில் சில எலுமிச்சைகளை உரித்து அவற்றை 150 மில்லி வினிகருடன் தண்ணீர் கலந்து ஊற விடவும். ஒரு இரவு முழுவதும் ஊறிய பிறகு அவற்றில் உள்ள தண்ணீரை ஒரு ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி அவற்றை துடைப்பதற்கு பயன்படுத்தலாம்.

​வெள்ளை துணிகளை சுத்தம் செய்யலாம்

வீட்டு பெண்களுக்கு வெள்ளை துணியில் இருந்து கரைகளை அகற்றுவது என்பது மிகவும் கடினமான காரியமாக இருக்கும். அதற்கு ஒரு சிறந்த தீர்வை எலுமிச்சை அளிக்கிறது. ஆமாம் வெள்ளை துணிகளில் இருந்து கறையை நீக்க எலுமிச்சை உதவுகிறது. வெள்ளை நிற உடைகள் எளிதில் அழுக்காகிவிடும். பிறகு அந்த அழுக்கை போக வைப்பது மிகவும் கடினமாகிவிடுகிறது. எனவே அப்படியான துணிகளை பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை சாறு கலந்த கலவையில் உறவைக்கவும். இந்த கலவைகள் கடினமான கறைகளை நீக்குவதற்கும் வெள்ளை ஆடைகள் பிரகாசமாக இருப்பதற்கும் உதவுகின்றன.

​உணவில் சேர்க்க வேண்டியவை

நீங்கள் உங்கள் உணவு டயட்டுக்காக அட்டவணையை உருவாக்கும்போது அதில் எலுமிச்சைக்கும் சிறிது இடம் ஒதுக்கலாம். எலுமிச்சை பழத்தை உணவில் சேர்த்துக்கொள்வதற்காக இதை கூறவில்லை. எலுமிச்சை கலந்த நீரில் உங்கள் விரல்களை கழுவும்போது உங்கள் நகங்களில் உள்ள அழுக்குகள் வரை அது சுத்தம் செய்கிறது. எனவே உணவிற்கு முன்பு எலுமிச்சை நீரில் கையை கழுவவும்.

​எஃகுவை சுத்தம் செய்கிறது

இரும்பு எஃகு போன்ற உலோகங்களை சுத்தம் செய்யவும் எலுமிச்சை உதவுகிறது. எலுமிச்சை தோல்களில் சிறிதளவு பேக்கிங் சோடாவை தூவி அதை கொண்டு உங்கள் எஃகு பொருட்களை துடைக்கலாம். இதனால் அவை பிரகாசமாக இருக்கும்.

​பூச்சிகளை விரட்டும் ஆற்றல் கொண்டது

எறும்புகள் என்பது பலரது வீட்டில் பெரும் தலைவலியாக இருக்கலாம். வெளியே இருந்து எறும்புகள் பெரும்பாலும் சன்னல் அல்லது கதவு வழியாகதான் வீட்டிற்குள் வருகின்றன. எனவே ஜன்னல் மற்றும் நுழைவாயில்களில் சிறிது எலுமிச்சை சாற்றை ஊற்றி விடுங்கள். அந்த கோட்டை தாண்டி எறும்புகள் வராது. எலுமிச்சை கொசுக்களை விரட்டவும் உதவிப்புரிகிறது. கொசுக்களை விரட்ட எலுமிச்சையை இரண்டாக வெட்டி அதில் கிராம்பை ஒட்டி வைக்கவும்.

​வெட்டும் பலகைகள்

பலர் காய்கறிகளை வெட்டுவதற்கு பலர் பிரத்யேகமான வெட்டும் பலகைகளை பயன்படுத்துவது உண்டு. இந்த பலகைகள் நீண்ட காலத்திற்கு வர வேண்டும் என்றால் அதில் எலுமிச்சையை பயன்படுத்தலாம். எலுமிச்சையை இரண்டாக வெட்டி அதில் சிறிது உப்பு தெளித்து அதை அப்படியே அந்த பலகையில் தேய்ப்பது மூலம் அதில் உள்ள அழுக்குகளை நீக்க முடியும்.

​நாற்றங்களை போக்குகிறது

உங்கள் காலணிகள், செருப்புகள் போன்ற பொருட்களில் அதிக நாற்றம் ஏற்படுவதை தடுக்க உங்களுக்கு எலுமிச்சை உதவுகிறது. எலுமிச்சை தோலை அவற்றில் சேர்ப்பதன் மூலம் அவற்றில் உள்ள துர்நாற்றத்தை போக்கி காலணிகளை சுத்தமாகவும் ஆக்குகிறது.

​எலுமிச்சையை வீட்டிலேயே வளர்க்கலாம்

எலுமிச்சை சாற்றை கசக்கி விட்டு அதில் உள்ள விதைகளுடன் அவற்றை புதைப்பதன் மூலம் எலுமிச்சையை வீட்டிலேயே வளர்க்கலாம்.

குளிர்சாதனப் பெட்டிகளில்

குளிர்சாதன பெட்டிகள் எப்போதும் ஈரப்பதமாகவே இருக்கின்றன. மேலும் அவை எப்போதும் மூடப்பட்டே இருக்கின்றன. இதனால் எளிதாக இவை பாக்டீரியா பாதிப்புக்கு உள்ளாகின்றன. எனவே குளிர்சாதன பெட்டி, மைக்ரோவேவ் போன்ற மூடிய எலக்ட்ரானிக் சாதனங்களில் துர்நாற்றம் ஏற்படுகிறது.

ஆனால் எலுமிச்சையானது காற்று புத்துணர்ச்சி சக்தியை கொண்ட தாவரமாக உள்ளது. இதை பயன்படுத்துவதன் மூலம் இந்த மூடிய சாதனங்களில் உள்ள துர்நாற்றத்தை போக்க முடியும். இப்படியாக வீட்டில் பல விஷயங்களுக்கு பயன்படும் பொதுவான தாவரமாக எலுமிச்சை உள்ளது.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker