ஆரோக்கியம்புதியவை

உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் நகம் கடிக்கும் பழக்கம்! உடனே நிறுத்துங்கள்… இல்லை பேராபத்து?

மனிதருக்கு இருக்கும் பழக்கங்களிலேயே நகம் கடிக்கும் பழக்கம் மிகவும் மோசமான ஒன்று. இந்த பழக்கமானது சிறு வயதில் தான் அதிக அளவில் இருக்கும்.

இந்த பழக்கத்தை சிறுவயதிலேயே நிறுத்திவிட்டால், பிற்காலத்தில் உடலில் பிரச்சனைகள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

இந்த பழக்கத்தை உடனே நிறுத்த முடியாவிட்டாலும், அதனை நிறுத்த முயற்சிக்க வேண்டும்.

நகம் கடிக்கும் பழக்கம் இருப்பதால் சந்திக்கும் பிரச்சனைகள் என்னவென்று பார்ப்போமா!!!

  • நாம் நகம் கடிப்பதால், உடலில் பாக்டீரியா தொற்று கட்டுப்படுத்த இயலாமல் அதிகரிக்கும். இதனால் உறுப்பு செயலிழப்பு ஏற்படுகிறது.
  • முறையான சிகிச்சை அளிக்காமல் இருந்தால் செப்சிஸ் தொற்று, செப்டிக் ஷாக் என்னும் உயிருக்கு ஆபத்தான நிலையைத் தோற்றுவிக்கும். மேயோ கிளினிக்கின் படி, சுவாச துடிப்பு அதிகரித்தல், மூச்சு விட சிரமம் அடைதல், ஈரம் அதிகம் உள்ள சருமம், குழப்பம், வயிற்று வலி, போன்றவை செப்சிஸ் நோயின் அறிகுறியாகும்.
  • அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் செப்சிஸ் நோயால் பாதிக்கப்படுகின்றனர். 250,000 அமெரிக்கர்கள் ஒவ்வொரு வருடமும் செப்சிஸ் நோயால் இறக்கின்றனர், வயது முதிர்ந்தவர்கள் மற்றும் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், செப்சிஸ் தொற்று அபாயம் அதிகம் உள்ளவர்கள்.
  • நகம் கடிப்பதால் வரும் செப்சிஸ் என்ற சீழ் பிடிப்பு நோயைப் பற்றி பலருக்கும் தெரியாது. அதற்கான அறிகுறிகள் பற்றிய எந்த ஒரு தகவலும் கிடைப்பதில்லை.
  • இதனை பற்றிய விழிப்புணர்வு அவசியம் வேண்டும். எந்த வயது மக்களையும் இந்தத் தொற்று தாக்க முடியும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker