ஆரோக்கியம்புதியவை

உங்கள் விரல்களை தினமும் ஒரு நிமிடம் தடவினால் என்ன நடக்கும் தெரியுமா?

நமது உடலில் உள்ள ஏதேனும் ஒரு பாகங்களை அழுத்தினால் அதன் மூலம் நமக்கு நிவாரணம் கிடைப்பதுதான் அக்குபஞ்சர் மருத்துவம்.

நமது கை விரல்கள் அனைத்துமே உடலில் உள்ள ஏதேனும் ஒரு பாகத்தோடு தொடர்புடையது என்பதால், அதனை ஒரு நிமிடம் தடவுவதால் அந்த பாங்களுக்கும் ஆரோக்கியம் கிடைக்கும்.

ஆள்காட்டி விரல்

இந்த விரலானது இரைப்பை குடலுடன் தொடர்புடையது. இதனை ஒரு நிமிடம் தடவும்போது வாயு பிரச்சனை மற்றும் செரிமானப்பிரச்சனைகள் இருந்து சில நிமிடங்களிலேயே நிவாரணம் கிடைத்துவிடும்.

மோதிர விரல்

மோதிர விரலை ஒரு நிமிடம் அழுத்தினால் மன அமைதி கிடைக்கும்.மேலும் தினமும் இப்படி செய்து வந்தால் அதிகமாக கோபம் வருவதும் குறைக்கப்படும்.

கட்டை விரல்

இந்த விரலானது இதயம் மற்றும் நுரையீரலுடன் தொடர்புடையது. இந்த விரலை அழுத்தினால் இதயத்துடிப்பு சீராகி மூச்சுவிடுவதற்கு எளிதாக இருக்கும்.

நடு விரல்

இந்த விரலானது இரத்த ஓட்ட அமைப்புடன் தொடர்புடையது. இரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும்போது இந்த விரலை தடவினால் தீர்வு கிடைக்கும்.

சுண்டு விரல்

உடலில் ஏதேனும் ஒரு பாகத்தில் வலி ஏற்பட்டால், இந்த சுண்டுவிரலை தடவினால் நிவாரணம் கிடைக்கும்.

Related Articles

Close