உடலில் மச்சம் உள்ள இடங்கள் சொல்லும் ரகசியத்தை தெரிந்து கொள்ளுங்கள்
ஒருவரின் உடலில் உள்ள மச்சத்தை வைத்து அவர்களின் பொது குணம் மற்றும் பொருளாதார நன்மைகளை பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.
மார்பின் கீழ்
மார்புக்கு கீழ் மச்சம் இருந்தால், அவர்கள் அனைத்திலும் வெற்றி காண்பார்கள். அவர்களிடம் நகைச்சுவை உணர்வும் அதிகம் இருக்கும்.
உதட்டிற்கு கீழ்
உதட்டிற்கு கீழ் மச்சம் இருந்தால், அவர்களிடம் அதிக கோபம் இருக்கும். அதனால் அவர்களை மற்றவர்கள் எளிதாக ஏமாற்றி விடுவார்கள்.
மார்பின் நடுவில்
மார்பின் நடுவில் மச்சம் இருந்தால், அவர்களுக்கு மூதாதையர் மூலம் அதிக செல்வம் கிடைக்குமாம்.
வலது இடுப்பு
இடுப்பின் வலது புறத்தில் மச்சம் இருந்தால், அவர்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் இருக்கும். செல்வ செழிப்புடன் வாழ்வார்கள்.
கால்கள்
கால்களில் மச்சம் உள்ளவர்கள் இயற்கையாகவே திறமை மிகுந்து இருப்பார்கள். ஆனால் அதை எப்படி சீர்ப்படுத்துவது, வழிமுறைப்படுத்தி வெற்றி காண்பது என்ற விடயத்தில் மட்டும் தடுமாற்றம் அடைவார்கள்.
இடது தோள்பட்டை
இடது தோள்பட்டையில் மச்சம் இருந்தால், அவர்களுக்கு பொருளாதார தடங்கல்கள் உண்டாகும். ஆனால் அதுவே வலது பக்கம் இருந்தால் நல்ல அதிர்ஷ்டமாம்.
வலது தோள்பட்டை
வலது தோள் பட்டையில் மச்சம் இருந்தால், அவர்கள் வீட்டிலேயே அதிக நேரம் செலவழிப்பார்கள். குடும்பத்திற்கு அதிகம் உழைப்பார்கள். ஒழுக்கம் நிறைந்தவராக இருப்பார்கள்.
கை விரல்கள்
கைகள் அல்லது விரல்களில் மச்சம் இருந்தால், அவர்கள் சுதந்திர பறவையாக திகழ்வார்கள். யாரின் உதவியும் எதிர்பார்க்க மாட்டார்கள்.
வயிறு
வயிற்றில் மச்சம் இருந்தால், அவர்களுக்கு ஆசைகள் அதிகமாக இருக்கும். காதல், விருப்பம் என்று வரும் போது சுயநலத்துடன் செயல்படுவார்கள்.
மூக்கு
மூக்கில் மச்சம் இருந்தால், அவர்கள் மிகவும் கிரியேட்டிவாக இருப்பார்கள். கலைநயம் அதிகமாக இருக்கும்.
தாடை
தாடை பகுதியில் மச்சம் இருந்தால், அவர்கள் அடிக்கடி நோயினால் பாதிக்கப்படுவார்கள். முக்கியமாக வாழ்க்கை முறை அவர்களுக்கு சீராக இருக்காது.
இடது கன்னம்
இடது கன்னத்தில் மச்சம் இருந்தால், அவர்களது பொருளாதார நிலை சற்று மோசமாக இருக்கும். எளிதாக மனசோர்வு அடைவார்கள். அதுவே வலது கன்னத்தில் மச்சம் இருந்தால், அவர்கள் பேரார்வம் கொண்டவர்களாக திகழ்வார்கள்.
பாதம்
பாதத்தில் மச்சம் இருந்தால், அவர்கள் அதிகம் பயணம் மேற்கொள்வார்கள். அதனால் அவர்கள் பிறந்த இடத்தை விட பிற இடங்களில் தான் அதிகம் வாழ்வார்கள்.