ஆரோக்கியம்புதியவைமருத்துவம்
ஞாபக மறதி நோயை எதிர்த்துப் போராட வேண்டுமா? கட்டாயம் இந்த உணவுகளே சாப்பிடுங்க
பொதுவாக மறதி என்பதை நாம் பெரும்பாலும் மிக சாதாரணமாக எடுத்துக் கொள்வோம்.
மறதி என்பது வயதானவர்களிடையே அதிக அளவில் காணப்பட்டாலும், அது எந்த வயதினரையும் பாதிக்கக் கூடியதே.
இது நோய் அல்ல. இதற்கு பல காரணங்கள் உள்ளன. மறதிக்கோளாறு என்பது முற்றிலும் வேறுப்பட்டது.
இந்தநோய் மூளையையுமு், மூளையின் பற்வேறு செயல்பாடுகளையும் பாதிக்கும். முதலில் ஞாபக மறதியாகத் துவங்கி மெதுவாக மனிதனின் அடிப்படை செயல்பாடுகளைப் பாதிக்கும் திறன் கொண்டது.
எனவே இவற்றை ஆரம்பத்திலே கண்டறிந்து செயற்படுவது முக்கியமானது ஆகும்.
அதிலும் குறிப்பிட்ட உணவுகளை தொடர்ந்து உட்கொண்டு வருவதன் மூலம், ஞாபக சக்தியை அதிகரிக்கலாம், மூளையைச் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளலாம். தற்போது அது எந்த உணவுகள் என்பதை இங்கு பார்க்கலாம்.
- மீன்கள் அறிவாற்றல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், மூளையின் செயல்பாட்டைப் பாதுகாப்பதற்கும் மிகவும் பயனுள்ள சத்தாகும். சால்மன், டுனா, ஹெர்ரிங்ஸ் மற்றும் மத்தி போன்ற மீன்களை வாரத்திற்கு ஒரு முறை சேர்க்கலாம்.
- பசலைக்கீரை, கேல், கொலார்டு, ப்ராக்கோலி போன்ற பச்சை இலைக் காய்கறிகளில் அதிகம் நிறைந்துள்ளன. இந்த வகை காய்கறிகளை வாரத்திற்கு 6 முறை உணவில் தவறாமல் சேர்த்து வாருங்கள்.
- வாரத்திற்கு 5 முறை நட்ஸ்களை உணவில் சேர்த்து வந்தால், மூளை ஆரோக்கியம் மேம்படுவதோடு, இதய ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.
- வாரத்திற்கு 2-3 முறை உணவில் பீன்ஸை சேர்த்து வருவது நல்லது. ஏனெனில் பீன்ஸில் நார்ச்சத்து மற்றும் புரோட்டீன் அதிகம் உள்ளது. அதே சமயம் இதில் கொழுப்பு மற்றும் கலோரிகள் குறைவு. ஆகவே இதை உணவில் சேர்ப்பதன் மூலம் புத்தி கூர்மையாகும்.
- ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் கொண்ட பெர்ரி பழங்கள், அறிவாற்றல் செயல்பாடுகளை மேம்படுத்த பெரிதும் உதவுகின்றன. எனவே உங்கள் உணவில் வாரத்திற்கு இரண்டு முறை ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி, ராஸ்பெர்ரி போன்ற பல்வேறு வகையான பெர்ரி பழங்களை சாப்பிட முயற்சி செய்யுங்கள்.