ஆரோக்கியம்புதியவை

மன அழுத்தத்துக்கு மருந்தே வேண்டாம், இந்த மூச்சு பயிற்சி மட்டும் செய்யுங்க!

4-7-8 என்னும் சுவாசப்பயிற்சியை மேற்கொள்வது மூலம் மன அழுத்தம், பதட்டம் அல்லது மனதில் உண்டாகும் அச்சத்தை எளிதாக சரி செய்ய முடியும். அது என்ன 4-7- 8 சுவாச பயிற்சி என்று தெரிந்துகொள்வோம்.

எப்போதும் பதட்டமாகவோ அல்லது மன அழுத்தமாகவோ இருக்கும் போது என்ன செய்தாலும் பதட்டம் குறையாது. மனதை அமைதிப்படுத்த அதிக பிரயத்தனம் செய்ய வேண்டும். இது பிராணயாமா என்ற மூச்சுப் பயிற்சியை அடிப்படையாக கொண்டது. இந்த பயிற்சி செய்பவர்கள் அவர்களது சுவாசத்தை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. தொடர்ந்து இந்த பயிற்சியை செய்யும் போது தூக்கமின்மை பிரச்சனை சரியாவதோடு ஆழ்ந்த தூக்கமும் வரக்கூடும்.

4-7-8 சுவாசம்

மருத்துவர் ஆண்ட்ரூ வெயில் என்பவரால் புகழ்பெற்ற இந்த நுட்பமானது உடலை தளர்வு நிலையில் வைக்கிறது. தூங்குவதற்கு முன்பு இந்த முறையை பயன்படுத்தலாம். முதுகை வளைக்காமல் நேராக நிமிர்ந்து உட்கார வேண்டும். அதே நேரம் நீங்கள் தூக்கத்துக்காக இந்த பயிற்சியை மேற்கொள்வதாக இருந்தால் நீங்கள் படுக்கை நிலையில் இதை செய்ய வேண்டும்.

இந்த பயிற்சியை எப்படி மேற்கொள்வது என இப்போது பார்ப்போம்

முதலில் மூச்சை மூக்கின் வழியாக மனதிற்குள் 4 வரை எண்ணியபடி தொடர்ந்து 4 விநாடிகள் வரை மூச்சை இழுத்துக் கொள்ளவும். பிறகு மனதுக்குள் 7 வரை எண்ண வேண்டும். அப்போது மூச்சை நிறுத்தி வைக்க வேண்டும். பிறகு வாய் வழியாக 8 வினாடிகள் வரை மூச்சை வெளியேற்ற வேண்டும். இதுதான் 4-7-8 சுவாசப்பயிற்சி ஆகும். இதை நான்கு முறை செய்யுங்கள். இந்த பயிற்சியில் மூச்சை ஏழு விநாடிகள் வரை நிறுத்தி வைப்பது முக்கியமானது. உங்களால் 7 விநாடிகள் வரை மூச்சை நிறுத்துவது சிரமமாக இருந்தால் நீங்கள் முதலில் 5 விநாடி வரை நிறுத்தி பிறகு படிப்படியாக அதிகரித்துகொள்ளலாம்.
இந்த பயிற்சி முழுமையான ஆழ்ந்த தளர்வு நிலைக்கு கொண்டு வரக்கூடியது.

ஒத்தத்தீர்வு சுவாசம்

இதயம், நுரையீரல் மற்றும் இவற்றில் சுழற்சி ஆகியவற்றை ஒத்திசைவான நிலைக்கு வைக்கும் ஒரு அமைதியான பயிற்சியாக ஒத்த தீர்வு பயிற்சி உள்ளது. இந்த பயிற்சியின் போது உடலின் அமைப்புகள் அனைத்தும் உச்சப்பட்ச செயல்திறனில் செயல்படுகின்றன.இந்த பயிற்சியை எப்படி மேற்கொள்ளலாம் என இப்போது பார்ப்போம்.

முதலில் நேராக உட்கார்ந்துக்கொண்டு உங்கள் தோள்கள் மற்றும் வயிற்று பகுதியை தளர்த்தி மூச்சை விடுங்கள்.
5 விநாடிகளுக்கு மென்மையாக சுவாசத்தை உள்ளிழுக்கவும். காற்று நுரையீரலின் அடிப்பகுதியில் நிரப்பப்படுவதால் காற்றும் வயிற்றை விரிவுப்படுத்துகிறது.
இடை நிறுத்தப்படாமல் மீண்டும் 5.5 விநாடிகளுக்கு மென்மையாக சுவாசிக்கவும். நுரையீரல் காலியாக இருப்பதால் வயிறு உள்ளே இழுக்கப்படும். இதனால் ஒவ்வொரு சுவாசமும் வட்டம் போல உணர வேண்டும்.
முடிந்தால் குறைந்தது 10 தடவை இந்த முறையை செய்யவும்.

நீங்கள் கவலை அல்லது ஒருவித அச்சத்தை சந்திக்கும் போது உங்கள் அறிகுறிகளை போக்க இந்த சுவாசப்பயிற்சி உதவுகிறது. மன அழுத்தம் குறைந்து மனதை அமைதிப்படுத்த இந்த இரண்டு சுவாசப்பயிற்சியும் உதவுகிறது. தினமும் செய்து வந்தால் உங்களுக்கே மாற்றம் தெரியும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker