தாய்மை-குழந்தை பராமரிப்புபுதியவை

மாதவிடாய் வருவதற்கு முன்பே கர்ப்பமாவதை உணர்த்தும் அறிகுறிகள்!

கருத்தரிப்பதை உடல் முன்கூட்டியே அறிந்துகொண்டு சில அறிகுறிகளை உண்டாக்குகிறது.அது குறித்து தான் தெரிந்துகொள்ள போகிறோம்.

ஒரு பெண் கருவுற்றதை அறிந்துகொள்ள மாதவிடாய் சுழற்சிக்கு பிறகு குறைந்தது 10 நாட்கள் முதல் 15 நாட்கள் வரை ஆகும். அப்போது தான் அறிகுறிகளும் தொடங்கும். மாதவிடாய் சுழற்சிக்கு பிறகு அடுத்த மாதவிடாய் சுழற்சியை எதிர்நோக்கும் பெண்கள் அடுத்த மாதவிடாய் காலத்தை எதிர்நோக்குவதற்குள் கருவுற்ற அறிகுறிகள் வெளிப்படும். ஆனால் இந்த நாட்களை கூர்ந்து கவனித்தால் கருத்தரிப்பு ஏற்படுவதை அறிந்துகொள்ள முடியும்.

கருத்தரிக்க போகிறோம் என்பதை ஒரு பெண்ணால் நன்றாகவே உணர முடியும். ஆனால் இந்த அறிகுறிகளை வைத்து உடனடியாக பரிசோதனை செய்து கருவுறுதலை உறுதி செய்ய முடியாது. அதற்கு ஒரு வார காலம் அவசியம். எனினும் இந்த முன்கூட்டிய அறிகுறிகள் பெரும்பாலும் கருவுறுதலை உறுதி செய்யகூடியவை.

மாதவிடாய் தொடங்குவதற்கு முன்பு

மாதவிடாய் தொடங்கும் நாட்களை எதிர்நோக்கும் போது முந்தைய வாரமே வயிறு இலேசாக பிடிக்க கூடும். இது எல்லோருக்குமான அறிகுறிகள் இல்லை என்றாலும் வெகு சில பெண்களுக்கு இந்த அறிகுறிக்கு பிறகு கருவுறுதல் உறுதியாகும். சில பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சிக்கு முந்தைய வாரத்தில் இலேசான உதிரபோக்கு இருக்க கூடும். இன்னும் மாதவிடாய்க்கு நாட்கள் இருக்கும் போது இலேசாக உதிரபோக்கு உண்டானால் அது கருவுறுதலுக்கான அறிகுறியாக கொள்ளலாம்.

உங்களின் மாதவிடாய் சுழற்சி மிகச்சரியாக இருந்தால் மிகத்துல்லியமாக இதை கண்டறிய முடியும். ஒவ்வொரு மாதமும் 28 ஆம் நாட்களில் உங்களுக்கு மாதவிடாய் சுழற்சி இருந்தால் அடுத்த 20 ஆம் நாள் முதல் 24 ஆம் நாளுக்குள் இந்த கரு பதியும் நிகழ்வு உண்டாக கூடும்.

கனமான மார்பகங்கள்

கர்ப்பகாலத்தில் கனமான மார்பகங்கள் பற்றி அறிந்திருக்கோம். ஆனால் கருவுறுதலுக்கு முன்பு இந்த மாற்றங்கள் உண்டாக கூடும். கர்ப்பக்காலத்தில் இரண்டாம் ட்ரைமெஸ்டர் காலத்தில் மார்பகங்கள் பெரிதாவதும் மார்பக காம்புகள் அடர்ந்த கருப்பு நிறமாவதும் உண்டு. அதே போன்று கருவுறுதலுக்கு தயாராகும் போதும் பெண்ணின் மார்பகங்கள் உடன்படும்.

மார்பக முலைக்காம்புகளை சுற்றி வழக்கத்தை விட அதிக கருப்பு நிறத்தில் இருக்கலாம். மார்பகங்கள் பெரிதாக கூடும். மார்பக காம்புகளில் இலேசான வலி அல்லது சிறிய புண் உருவாகலாம். மாதவிடாய் வருவதற்கு முன்பு மார்பகங்களை கவனித்து பார்த்தால் இந்த அறிகுறியை பார்க்க முடியும். அதே நேரம் மார்பகங்கள் மெனையாக இருக்கும்.

நெஞ்செரிச்சல்

கர்ப்பத்தின் முதல் மூன்று மாதம், இறுதி மூன்று மாதங்கள் தான் நெஞ்செரிச்சல் என்று நினைக்கிறோம். ஆனால் கரு உருவாகும் ஆரம்ப கட்டத்திலேயே இதை உணர முடியும். ஏனெனில் கருமுட்டை விந்தணுவோடு இணைந்து கருவாக மாறும் நேரத்தில் ஹார்மோன் ஏற்ற இறக்கம் தொடங்கி விடுகிறது.

அப்போதே நெஞ்செரிச்சல், தொடர் ஏப்பம் போன்ற அசெளகரியம் உண்டாகிறது. ஆனால் இவையெல்லாம் மாதவிடாய் முந்தைய நாட்களில் நடப்பதால் இது கர்ப்பத்தோடு தொடர்புபடுத்தி பார்ப்பதில்லை.

களைப்பு

அதிக நேரம் வேலை செய்வதால் களைப்பு இருக்க கூடும். கருவுறுவாதல் நிகழும் போது உடலில் உண்டாகும் ஹார்மோன் மாற்றங்களால் உடலில் ரத்தம் அதிகரிக்கப்படும். அப்போது உண்டாகும் மாற்றங்கள் பெண்களை களைப்படைய வைக்கலாம். சில நாட்கள் தொடர்ந்து இருக்கும் இந்த களைப்பும், சோர்வும் உங்களை கருவுறுதலுக்கு தயார் படுத்த கூடியவையே.

வெகு அரிதாக இந்த களைப்புக்கு பிறகு உங்களுக்கு மாதவிடாய் சுழற்சி இருந்தால் அது உடலில் ஏதேனும் குறைபாட்டின் அறிகுறியாக இருக்கலாம். இதை அலட்சியம் செய்யாமல் மருத்துவரை அணுகுவது நல்லது.

குமட்டல்

கருவுற்றதை உறுதி செய்வதே குமட்டல் தான். ஆனால் குமட்டலோடு கூடிய வாந்தி உண்டாகும் போது தான் கருவுற்ற அறிகுறியாக பலரும் கொள்கிறார்கள். கருவுறுதலின் ஆரம்ப கட்டத்தில் வாந்தி இருக்காது. ஆனால் குமட்டல் இருக்கும். இது மாதவிடாய் சுழற்சி வருவதற்கு முன்கூட்டியே தொடங்கிவிடும்.

75% பெண்களுக்கு கருவுற்றதை உறுதி செய்வதற்கு முன்பாகவே இந்த குமட்டல் தொடங்கிவிடுகிறது. சில நேரங்களில் வீரியமாகவும், சில நேரங்களில் குறைவாகவும் இருக்க கூடும். கருவின் ஆரம்ப கட்டத்தில் தொடங்கும் குமட்டல் முதல் மூன்று மாதங்கள் வரை தீவிரமாக இருக்கும். சிலருக்கு கர்ப்பகாலம் முழுமையும் இருக்கும்.

மலச்சிக்கல்

கருவுறுவாதலின் ஆரம்ப கட்டத்திலேயே மலச்சிக்கலுக்கு ஆளாவது உண்டு. ஏனெனில் பெண்களின் உடலில் உண்டாகும் ஹார்மோன் மாற்றங்கள் அவர்களுக்கு மலச்சிக்கலை உண்டாக்கும். மலக்குடல் பகுதி அசெளகரியமாக இருக்கும் இந்த ஆரம்ப கட்ட கர்ப்பத்தின் போது இது ஏதோ அசெளகரியமான உணவால் உண்டானது என்று பலரும் புரிந்துகொள்கிறார்கள்.

இந்த நாட்களில் உணவின் மீதும் வெறுப்பு உண்டாகும். இது தீவிரமாகாமல் பார்த்துகொள வேண்டும். கரு உருவாகும் ஆரம்ப கட்டம் என்பதால் உணவை தவிர்க்காமல் ஆரோக்கியமாக எடுத்துகொள்வது அவசியம்.

​உடல் உபாதை

மாதவிடாய் சுழற்சி நெருங்கும் நேரத்தில் சிலருக்கு தலைவலி, முதுகுவலி, இடுப்பு வலி உபாதைகள் இருக்கும். சிலருக்கு மன அழுத்தம் இருக்கும். அதே போன்று கருவுறுவாவதின் ஆரம்ப கட்டத்தில் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவதால் தலைவலி தொடர்ந்து இருக்கும். அதோடு கருத்தரிப்பை உறுதிப்படுத்த செயல்படும் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரொஜெஸ்டிரான் போன்ற ஹார்மோன்களும் தலைவலிக்கு காரணமாகிறது.

கருவை தாங்க உடல் கருப்பையை உடலை தயார் செய்யும் போது அடி முதுகு வலி உண்டாக கூடும். அதோடு கருவுறுதல் நிகழ்வில் மலச்சிக்கல் சேரும் போது முதுகுவலியை நன்றாகவே உணர்வார்கள்.

​குழப்பமான மனநிலை

பெண்களின் உடலில் ஹார்மோனின் ஏற்றத்தாழ்வுகள் அவர்கள் மனநிலையில் மாற்றங்களை உண்டாக்கும். ஹார்மோன்கள் மூளையில் இருக்கும் நியூரோஒ ட்ரான்ஸ்மீட்டர்களை பாதிக்கலாம். இந்த நாட்களில் பெண்ணின் மனநிலை அதிக குழப்பத்தில் இருக்கும். கோபம், அழுகை, விரக்தி போன்ற நிலையில் மாறி மாறி இருப்பார்கள்.

மாதவிடாய் சுழற்சிக்கு முந்தைய சில நாட்கள் அல்லது வாரத்தில் இந்த அறிகுறிகள் தொடர கூடும். எனினும் இதை கூர்ந்து கவனித்தால் மட்டுமே உணர முடியும். உங்கள் மாதவிடாய் சுழற்சிக்கு முந்தைய நாட்களில் இந்த அறிகுறிகள் உணர்கிறீர்களா என்பதை கவனியுங்கள்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker