புதியவைவீடு-தோட்டம்

மழைக்காலத்தில் வீட்டை எப்படி பராமரிக்கணும்?

மழைக்காலம் வந்தால் வீட்டை முன்னிலும் அதிகமாக பராமரிக்க வேண்டும். குறிப்பாக ஜன்னல், கதவுகள் வீட்டிலிருக்கும் பொருள்கள் என அது குறித்து தான் இப்போது பார்க்க போகிறோம்.

மழைக்காலத்தில் உடல் எதிர்ப்புசக்தியோடு இருக்க எப்படி நாம் ஆரோக்கீயத்தில் தயாராக இருக்கிறோமோ அதே போன்று வீட்டையும் மழைக்காலத்துக்கு முன்பு தயார்படுத்தி வைக்க வேண்டும். குறிப்பாக பழைய கால வீடுகளை இன்னும் கூடுதல் கவனத்தோடு தயார் படுத்த வேண்டும்.

மழை வரும் போது பார்த்துகொள்ளலாம் என்று தள்ளிப்போடுவது உசிதமல்ல. மழை வந்த பிறகு வீட்டை பராமரிப்பது சிரமமான வேலை. சொந்த வீடு மட்டும் தான் பராமரிக்க வேண்டும் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் குடியிருக்கும் வீட்டில் நாம் தான் வசிக்கீறோம் என்பதால் அதிக சேதாரமில்லாமல் பார்த்துகொள்ள வேண்டும்.

ஓடு வீடாக இருந்தால் மழைக்காலம் வருவதற்கு முன்னரே பெரிய பிளாஸ்டிக் ஷீட்டுகளை போட்டு வைக்கலாம். ஷீட்டுகள் பறக்காமல் இருக்க அதன் மேல் கனமான பொருள்களை வைப்பார்கள். ஆனால் மழையின் போது அதிக காற்று வீசினால் அவை கீழே விழுந்து பாதிப்பை உண்டாக்க செய்யும். தற்போது பிளாஸ்டிக் ஷீட் கொண்டு ஓட்டை ஒட்டி விடலாம். சற்று சிரமப்பட்டேனும் இதை செய்துவிடுவது நல்லது. வீடு ஒழுகுவதாக இருந்தால் ஓட்டை மாற்றுவதும் இன்னும் பாதுகாப்பானது.

தளம் போட்ட வீடுகளாக இருந்தால் வெதரிங் கோஸ்ட் போட்டு வைக்கலாம். இது தளங்களில் ஒழுகுதலை தடுக்கும். சுவர் ஓதங்கள் இல்லாமல் வைக்கும். மொட்டை மாடியில் தண்ணீர் தேங்காமல் பார்த்துகொள்ள வேண்டும். மொட்டைமாடியில் தண்ணீர் செல்லும் பாதையில் அடைப்பு இருந்தால் அதை மழைக்கு முன்பே சுத்தம் செய்வது அவசியம். மழை நீர் தொட்டியில் தண்ணீர் சுத்தமாக நிரம்பும்.
மழைக்காலம் வந்தாலே வீட்டில் இருக்கும் மரக்கதவுகள், ஜன்னல்கள் இலேசாக உப்பலடையும். அதிலும் கொஞ்சம் பழைய கால வீடாக இருந்து கதவு ஜன்னல்கள் பழையதாக இருந்தால் இன்னும் கூடுதல் கவனம் தேவை. இந்த நேரத்தில் வீட்டை கழுவினால் அவை இன்னும் உப்பலாகி இருக்கும். கதவுகள் பக்கம் தண்ணீர் தேங்காமல் வெறும் மாப் கொண்டு துடைக்க வேண்டும். உலர்ந்த துனியை கொண்டு அவ்வப்போது சுத்தமாக துடைக்க வேண்டும். தரையையும் ஈரம் இல்லாமல் வைக்க வேண்டும்.

மழைக்காலங்களில் கதவுகள், ஜன்னல்கள் மேலும் இறுக்கமாகிவிடக்கூடும். குழந்தைகள் வேகமாக திறக்கும் போது கதவுகள் சேதமடையும். ஜன்னல்களும் திறக்க முடியாமலும் போகும். சில நேரங்களில் திறந்த பிறகு மூடுவதில் சிரமம் இருக்கலாம். இது தற்காலிகமானது, மழைகாலம் முடிந்த பிறகு அவை தானாகவே சரி ஆகிவிடும்.எனினும் பாதிப்பில்லாமல் இருக்க மழை வருவதற்கு முன்பே கதவுகளிலும் ஜன்னல்களிலும் கைப்பிடி தாழ்ப்பாள் போன்ற இடங்களில் எண்ணெய்விட வேண்டும்.

பாத்ரூமில் இருக்கும் கதவுகள் பொதுவாகவே சேதமடைவது உண்டு. அதிலும் மழைக்காலத்தில் எப்போதும் ஈரப்பதம் இருந்துகொண்டே இருக்கும். கதவின் கீழ்ப்பாகத்தில் அதிகமான செதாரம் ஆகும். மழைக்காலங்களில் பாத்ரூம் கதவுகளின் கீழ் பாகத்தில் அலுமினிய தகடு வைத்து அடிக்கலாம். இது ஈரம் பட்டாலும் அல்லது தண்ணீர் பட்டாலும் எந்த சேதத்தையும் கதவுக்கு உண்டாக்காது. குளித்து முடித்தபிறகு பாத்ருமை கழுவி உலர விட வேண்டும்.

ஸ்விட்ச் பாக்ஸ் வைத்திருக்கும் இடங்களின் மேல் உள்ள கூரைகள், தளங்களிலிருந்து அதன் மேல் நீர் கசிகிறதா என்று பார்க்க வேண்டும். இந்த கசிவு மின்சாரத்தோடு இணைந்து எலக்ட்ரிக் ஷாக் அடிக்க கூடும்.
வீடு முழுக்க இருக்கும் குழாய்கள், தண்ணீர் பைப்கள் செல்லும் இடங்கள், தண்ணீர் தொட்டி போன்றவற்றில் நீர்க்கசிவு இல்லாமல் பார்த்துகொள்ள வேண்டும். வீட்டின் மேல் தளம் பால்கனி பகுதியில் சாரல் அடிக்க செய்யும். அந்த இடங்களில் பாலிதீன் பையை போட்டு வைப்பது சாரலை தடுக்க செய்யும். மழை ஈரத்தோடு இந்த கசிவும் இருந்தால் அதிக சிரமத்தை சந்திக்க நேரிடும்.
வீட்டில் இருக்கும் மின்சார பொருள்கள் நீர் படாமல் பாதுகாப்பாக வைக்க வேண்டும். மழைக்காலங்களில் வீட்டில் கார்பெட்டுகள் இருந்தால் அதை சுற்றி பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும். அலங்கார ஃபோம் சோபாக்கள் இருந்தால் அவை மழை ஈரத்தில் பூஞ்சை ஏற்படுத்தகூடும். இதை தடுக்க அழகான பிளாஸ்டிக் கவர்கள் கடைகளில் கிடைக்கும் . அதை வாங்கி கவர் செய்யலாம். தினமும் சோபாக்களை சுத்தம் செய்ய வேண்டும். சோபாக்களின் கால் தான் முதலில் அரிப்பை உண்டாக்கும். அதனால் கால்களை புஷ் கொண்டு மூடிவிடுவதன் மூலம் இதை தடுக்கலாம். மரச்சாமான்களில் பூஞ்சைகள் இருந்தால் ஈரத்துணியால் துடைத்து பிறகு உலர்ந்த துணியால் துடைத்து எடுக்க வேண்டும். சமையலறையையும் மசாலா பொருள்கள் இருக்கும் இடத்தையும் எப்போதும் உலர்வாக வைத்திருக்க வேண்டும்.

தண்ணீர் தொட்டிகளை மழைக்கு முன்பே சுத்தம் செய்ய வேண்டும். வெளியிலிருந்து கழிவு நீர் உள்ளே வரக்கூடிய வீடாக இருந்தால் தண்ணீர் தொட்டியை சற்று மேலே உயர்த்தி வைக்க வேண்டும். வீட்டில் எர்த் சரியாக வேலை செய்கிறதா, மின்சார ஸ்விட்ச் போர்டுகள் பழுதாகாமல் இருக்கிறதா என்பதையும் கவனித்து மாற்ற வேண்டும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker