தாய்மை-குழந்தை பராமரிப்புபுதியவை
குழந்தைக்கு வயிற்றுவலியா? இதோ இயற்கை மருத்துவங்கள்
பிறந்த குழந்தை அழுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம், அதை என்னவென்று கண்டுபிடிப்பதே தாய்மார்களுக்கு மிகப்பெரிய சவால் தான்.
பொதுவாக குழந்தைகள் பசித்தால் அழும், அல்லது வயிற்று வலியால் அழும்.
தாய்ப்பால் கொடுத்த பின்னரும் குழந்தை அழுது கொண்டே இருந்தால் அதற்கு வயிற்று வலி தான் காரணமாக இருக்கும்.
இதனை சில எளிதான வீட்டு சமையலறை பொருட்களை கொண்டே போக்கிவிடலாம்.
- சிறிதளவு பெருங்காயத்தை எடுத்து தண்ணீருடன் கலந்து கொள்ள வேண்டும், பசைப் போன்று ஆக்கிய பின்னர் குழந்தையின் வயிற்றுப் பகுதியில் தடவி மென்மையாக மசாஜ் செய்யவும், இப்படி செய்தால் வயிற்று வலி சரியாவதுடன் உடல் சூடும் குறைந்து விடும்.
- சிறிதளவு ஓமத்தை போட்டு தண்ணீரில் நன்கு கொதிக்கவிடவும், இதனை குளிர வைத்து பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளுங்கள், குழந்தை அழும் நேரத்தில் ஒரு டீஸ்பூன் அளவு இதனை கொடுத்தால் வயிற்று வலி சரியாகும்.
- இதேபோன்று பெருஞ்சீரகத்தையும் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்துக் கொள்ளவும். இதனை காற்று புகாத பாட்டிலில் அடைத்து வைத்து குழந்தை அழும் நேரத்தில் ஒரு டீஸ்பூன் கொடுத்தால் வலி சரியாகும்.
- உலர்ந்த திராட்சையை இரண்டாக கட் செய்து கொண்டு சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். பின்னர் இதனை குளிரவைத்து உணவிற்கு பின்னர் மாலை வேளையில் குழந்தைக்கு கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும்.
- சிறிதளவு பேக்கிங்சோடாவுடன் தண்ணீர் சேர்த்து பசைப் போன்று ஆக்கி கொள்ளவும், இதனை குழந்தையின் வயிற்றில் தடவி மசாஜ் செய்து வந்தாலும் வலி சரியாகும்.