தாய்மை-குழந்தை பராமரிப்பு

குழந்தைகள் தாய்ப்பாலை மறக்கச் செய்வது எப்படி?

குழந்தைகளுக்கு பிறந்தது முதல் ஓரிரு வயது ஆகும் வரை நிறுத்தாமல் கொடுக்கப்படும் உணவு, தாய்ப்பால்; குழந்தைகள் தாயின் அரவணைப்பிலேயே பிறந்தது, வளர்ந்து வருகின்றனர். குழந்தைகள் அழுதால், உடனே தாய் அவர்களுக்கு பால் அளித்து அவர்தம் அழுகையை நிறுத்தச் செய்திடுவாள்; குழந்தைகள் பயந்தாலோ அல்லது அவர்களின் மீது தனது நேசத்தை காட்ட எண்ணினாலோ, அவர்களை மார்போடு அணைத்துக் கொள்வாள் அன்னை. இந்த மாதிரியான விஷயங்களால் குழந்தைகளால் தாய்ப்பால் குடிப்பதை நிறுத்த இயலாமல், அதை மறக்க முடியாமல் தொடர்ந்து தானும் கஷ்டப்பட்டு தாயையும் கஷ்டப்படுத்துவர். இந்த பதிப்பில் குழந்தைகளை தாய்ப்பாலினை எப்படி மறக்கச் செய்வது என்று அறிந்து கொள்ளலாம்.

1. தாய்ப்பாலை உடனே நிறுத்துவதால், தாயின் உடலில் சில மாற்றங்கள் மற்றும் பாதிப்புகள் உண்டாகலாம்; மார்பகங்களில் பால் கட்டிக்கொள்வது, மார்பகத்தில் வலி, மார்பகம் வீக்கமடைதல் – இது போன்ற பிரச்சனைகள் உண்டாகலாம்.

2. குழந்தைக்கோ மனரீதியாக அழுத்தம் உண்டாகலாம்; தாய் தாய்ப்பால் கொடுக்காமல் தவிர்ப்பது குழந்தையிடத்தில் ஏக்கத்தை ஏற்படுத்திவிடும்; குழந்தையை தவிப்பில் ஆழ்த்திவிடும்.

நிறுத்துவது எப்படி?

1. முதலில் தாய் தன்னை கூர்ந்து கவனிக்க வேண்டும்; அதாவது, தாய்ப்பால் சுரக்க சில உணவுகளை உண்டிருப்பீர். அதேபோல் இப்பொழுது தாய்ப்பாலை நிறுத்த உதவும் உணவுகள் என்னென்ன என்று அறிந்து அவற்றை உண்ண வேண்டும்; அல்லது தாய்ப்பால் சுரப்பை தூண்டும் உணவுகளை உண்பதை தவிர்க்க வேண்டும்.

2. முட்டைகோஸ் இலைகளை மார்பக பகுதியில் சில மணிநேரம் வைத்திருப்பதால் கூட தாய்ப்பால் சுரப்பை நிறுத்த இயலும்.

3. குழந்தைகள் தாயின் மார்பகத்தை பார்ப்பதை தவிர்க்க வேண்டும்; அதாவது குழந்தைகள் முன் உடை மாற்றுவது, அவர்களுடன் சேர்ந்து குளிப்பது, பால் கொடுப்பது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

4. குழந்தைக்கு பாலை புட்டியில் வைத்து அளிக்க வேண்டும்; அதுவும் குழந்தைக்கு பிடித்த வண்ணம், வடிவம் கொண்ட பாட்டிலில் பால் ஊற்றி அளிக்க வேண்டும்.

5. குழந்தையுடன் சேர்ந்து உறங்கும் போது, குழந்தை மார்பகத்தை தொடாமல், பால் அருந்த முயற்சிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

6. குழந்தையின் கவனத்தை திசை திருப்ப அவர்களுக்கு கதை சொல்வது, அவர்களுடன் பேசுவது, வீடியோ கட்டுவது, பாடல் கேட்க வைப்பது, வெளியே அழைத்துச் செல்வது போன்ற செயல்களில் ஈடுபடலாம்.

பொதுவாக குழந்தைகளுக்கு தாய்ப்பாலை நிறுத்தும் போது, உடனடியாக எதுவும் செய்துவிடாமல், மெதுவாக, படிப்படியாக நிறுத்த வேண்டும்; அதே சமயம் குழந்தைக்கு போதுமான அளவு தாய்ப்பால் அளித்திருக்க வேண்டும். குழந்தைகள் நடக்க ஆரம்பிக்கும் பொழுது தாய்ப்பாலை நிறுத்துவது உசிதமானது.!

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker