இரவில் போர்வைக்குள் செல்போன் பயன்படுத்துபவர்களுக்கு! அதனால் ஏற்படும் ஆபத்துகள் பற்றி தெரியுமா?
செல்போன்கள் பயன்படுத்தாத மனிதர்களை காண்பதே அரிது என்று கூறும் அளவுக்கு செல்போன்களுக்கு பலரும் அடிமையாக கிடக்கிறார்கள்.
அதிலும் இரவு தூங்கும் முன்னர் போர்வைக்குள் ஒளிந்து கொண்டு செல்போனை பயன்படுத்தும் பழக்கம் பலருக்கும் உள்ளது.
இது எவ்வளவு ஆபத்தானது தெரியுமா?
இது தொடர்பாக சுகாதார ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, செல்போன் கோபுரங்களில் இருந்து வெளியாகும் ஒருவித ரேடியோ அதிர்வலைகள் செல்போன் மூலம் நம்மைத் தாக்குவதால் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனைகளில் மூளையில் கட்டிகளுடன் வரும் நோயாளிகளில் பெரும்பாலானோர், 10 ஆண்டுக்கும் மேலாக செல்போனை அருகில் வைத்து உறங்கும் பழக்கம் கொண்டவர்கள்.
கதிர்வீச்சை மட்டுமே மொபைல்போன்கள் உமிழவில்லை நெருப்பையும் தன்னுள் கொண்டுள்ளதென்பதை நீங்கள் உணரவேண்டும். பேட்டரி சிக்கல்கள் விளைவாக ஸ்மார்ட்போன் வெடிப்பு ஏற்பட்டு உங்கள் தலையணையில் தீப்பற்றிக்கொள்ளும் வாய்ப்பும் இருக்கிறது. அதன் பின்னர் ஏற்படும் தீமைகளை நீங்களே அறிவீர்கள்.
எனவே படுக்கையில் படுத்த படியும், போர்வைக்குள் வைத்தப்படியும் செல்போனை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.