ஆரோக்கியம்புதியவைமருத்துவம்

முருங்கை விதை இத்தனை நோய்களை குணப்படுத்துமா? இப்படி சாப்பிட்டால் பலன்களை ஏராளம்

முருங்கைக்காய் தமிழ் பாரம்பரிய சமையலில் ரசம், சாம்பரிகளில் சேர்க்கப்படும் ஒரு சத்து நிறைந்நத அதிக சத்து நிறைந்த காயாகும்.

முருங்கை மரத்தில் உள்ள காய், இலை, மற்றும் பூ போன்ற அனைத்து பாகங்களிலும் மருத்துவ பயன்கள் அதிகமாக உள்ளன.

முருங்கைக்காயில் கொழுப்புச்சத்து, இரும்புச்சத்து, விட்டமின் A, B, B1, B2, B3, புரதச்சத்து, கார்போஹைட்ரேட், கால்சியம் மற்றும் மெக்னீசியம் ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளது.

ஆனால் அதைவிட முருங்கைக்காயின் விதைகளில் ஆன்டி-ஆக்ஸிடண்ட், துத்தநாகம், வைட்டமின் ஏ, சி, பி காம்ப்ளக்ஸ் ஆகிய சத்துக்கள்உள்ளது. அதுவும் இந்த முருங்கை விதைகள் பல நோய்கள் நம்மை அண்ட விடாமல் தடுக்கிறது.

தற்போது இந்த விதையினை எப்படி பயன்படுத்தினால் என்ன நோய்களை குணமாக்கும் என்பதை பற்றி நாமும் தெரிந்து கொள்வோம்.

  • முருங்கை விதைகளில் 30 விதமான ஆன்டி- ஆக்ஸிடன்டுகள் உள்ளது. அவை அனைத்தும் நம் உடம்பில் உள்ள செல்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
  • முருங்கை விதையில் உள்ள கால்சியம் சத்து, மூட்டுகள் மற்றும் எலும்புகள் தொடர்பான பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
  • பாலுடன் சேர்த்து காய்ச்சிக் குடித்தால் தண்ணீர் போன்ற விந்து கெட்டிப்படும். விந்தணுக்கள் அதிகரிக்கும். உடலுக்கு நல்ல பலத்தை தரும். இரத்த சோகையை நீக்கி உடலை புத்துணர்ச்சியாக்கும்.
  • இதயத்தைப் பலப்படுத்தும். நரம்புகளுக்கும், எலும்புகளுக்கும் பலத்தை கொடுக்கும். மூட்டுகளின் இணைப்புகளில் வரும் வலியை போக்குகிறது. அதிக கால்சியம் இது கொண்டுள்ளதால் எலும்புகளும் பலம் பெறும்.
  • முருங்கை விதைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தூக்கமின்மை வியாதி குணமாகும். செல் சிதைவை தடுக்கிறது. புதிய செல்கள் உருவாவதை பெருக்குகிறது மற்றும் புற்று நோய் வர விடாமல் தடுக்கிறது.
  • இதயத்தில் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு உத்திரவாதம் இந்த முருங்கை விதைகள் தருகின்றன. இவை இதயத்தில் படியும் கொழுப்புகளை வெளியேற்றும் பண்பை பெற்றுள்ளன.
  • முருங்கை விதைகளை நன்றாக உலர்த்தி, பொடி செய்து பாலில் கலந்து ஒரு மண்டலம் உண்டு வந்தால் உடல் சோர்வு குறையும். ரத்த சோகை நீங்கும்.
  • பெண்களுக்கு சத்துக் குறைவினால் ஏற்படும் தலைவலி, கால்களில் அடிக்கடி உண்டாகும் தசைப்பிடிப்பு ஆகியவை நாளடைவில் குணமாகும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker