இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் என பெரும்பாலானவர்கள் சந்திக்கும் பிரச்சனையாகிவிட்டது உடற்பருமன்.
பிறந்த குழந்தை முதலே இப்பிரச்னை தொடங்கிவிடுகிறது என்று கூறலாம்.
பொதுவாக 2.500 கிலோகிராமில் குழந்தை பிறந்தாலே ஆரோக்கியமான குழந்தை தான், ஆனால் இன்றே 3 கிலோவிற்க்கு மேலாக இருந்தாலே ஆரோக்கியம் என்று நினைக்கும் வழக்கம் வந்துவிட்டது.
குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பால் மட்டுமே கொடுத்து வந்தால் எடையும் சீராக இருக்கும், அதுவே புட்டி பால் குடிக்கும் குழந்தையின் உடல் எடை அதிகரிக்கும்.
இதனால் வளரும் போது குழந்தைக்கு பல்வேறு விதமான நோய்கள் ஏற்படுகிறது, வளர்ந்து பெரியவர்கள் ஆனாலும் வயதுக்கு ஏற்ற எடையில்லாமல் நாளடைவில் ஆரோக்கியமற்ற வாழ்க்கை வாழும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
இதுவே தம்பதிகளில் குழந்தையின்மை பிரச்சனைக்கு முக்கிய காரணமாகி விடுகிறது.
பெண்கள் உடல் பருமனாக இருந்தால் மாதவிடாய் பிரச்சனை, ஹார்மோன் பிரச்சனை, நீர்க்கட்டி என பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாவதால் கருத்தரிப்பதிலும் சிக்கல்களை சந்திக்கின்றனர்.
ஆண்களுக்கு உடலுறவில் திருப்தியின்மை, விந்தணுக்கள் குறைபாடு என பல பிரச்சனைகள் உருவாகின்றன.