ஆரோக்கியம்புதியவை

உங்கள் எடையை சீராக வைத்துக் கொள்ள வேண்டுமா? இந்த ஒரு பயிற்சி மட்டும் செய்தால் போதும்

இன்று பலரும் உடல் எடையை சீராக வைத்து கொள்ளவதற்காக பல உடற்பயிற்சிகளை செய்து வருகின்றனர். அதில் ஒன்று தான் ஸ்கிப்பிங்.

இது உடல் பருமன் முதல் மனஅழுத்தம் வரை மக்களை பாதிக்கும் பல பிரச்சினைகளுக்கும் தீர்வு தருகின்றது.

அந்தவகையில் தற்போது இந்த பயிற்சி செய்வதினால் என்னென்னெ நன்மைகள் கிடைக்கின்றன என்று பார்ப்போம்.

  • ஸ்கிப்பிங் செய்வதால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து தொப்பை பிரச்சினை படிப்படியாக குறையும். மனக்கவலை, மன அழுத்தம், போன்றவை குறையும்.
  • ஸ்கிப்பிங் பயிற்சி இதயத்துக்கும் நுரையீரலுக்கும் வலுவை கொடுக்கும். தினமும் ஸ்கிப்பிங் செய்து வந்தால் உடல் மற்றும் தண்டுவடம் நேராகி உயரமான தோற்றம் கிடைக்கும்.
  • ஸ்கிப்பிங் பயிற்சியைத் தொடர்ந்து செய்து வந்தால் இடுப்பு வலி குறைவதுடன், முதுகெலும்பு பலம் பெறும். மேலும் கை மற்றும் கால்களின் செயல் வேகம் அதிகரிக்கும். இதனால் நீங்கள் சுறுசுறுப்பாக செயல்படலாம்.
  • தினமும் செய்தால் உடல் எடை எளிதில் குறைந்து, உடலுக்கு சீரான வளர்ச்சியும், ஆரோக்கியமும் கிடைக்கும். மேலும் தினமும் 15 நிமிடங்கள் ஸ்கிப்பிங் செய்தால் 200 கலோரிகள் வரை குறைக்கலாம்.
  • தினமும் தொடர்ச்சியாக 15 நிமிடங்கள் ஸ்கிப்பிங் செய்து வந்தால் உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்து, உடலில் இருக்கும் நச்சுப்பொருட்கள் எளிமையாக வெளியேற்றிவிடும்.
யார் ஸ்கிப்பிங் செய்யக் கூடாது?

இதய நோயாளிகள், முழங்கால் வலி, கணுக்கால் வலி, இடுப்பு வலி, எலும்பு முறிவு உடையவர்கள் மற்றும் சுளுக்கு ஏற்பட்டவர்கள் அனைவரும் ஸ்கிப்பிங் பயிற்சியைத் தவிர்க்கலாம்.

மேலும் அதிக உயரம் கொண்டவர்கள் ஸ்கிப்பிங் பயிற்சியைத் தவிர்ப்பது நல்லது.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker