ஆரோக்கியம்புதியவைமருத்துவம்
பாடாய்ப்படுத்தும் தலைவலியில் இருந்து நிவாரணம் வேண்டுமா? இதோ சில எளிய மருத்துவம்
தலைவலி என்றாலே உடனே மாத்திரை போடும் பழக்கம் பலரிடம் உள்ளது. இது சில சமயங்களில் பக்கவிளைவுகளை கூட ஏற்படுத்தும்.
உண்மையில் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு எளிய முறையில் தலைவலியை போக்க முடியும்.
அந்தவகையில் தற்போது தலைவலியை போக்க கூடிய சில எளிய இயற்கை மருத்துவங்கள் என்னெ்னன என்பதை பார்ப்போம்.
- உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்தால், டென்ஷன், தலைவலி, ஒற்றைத்தலைவலி ஆகியவை வரும். போதுமான அளவு தண்ணீர் குடித்தால், 30 நிமிடங்கள் – 3 மணி நேரத்துக்குள் தலைவலி சரியாகிவிடும்.
- பட்டையைப் பொடியாக்கி கொள்ளவும். சிறிது தண்ணீர் கலந்து திக் பேஸ்டாக மாற்றவும். இதை நெற்றியில் தடவலாம். அரை மணி நேரம் கழித்து, இளஞ்சூடான நீரில் முகத்தைக் கழுவ வேண்டும்.
- ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய்யுடன் 2 துளி கிராம்பு எண்ணெய் விட்டு, நன்கு கலக்கவும். இதை நெற்றி, நெற்றி ஓரங்கள் தடவி மசாஜ் செய்யவும். தலைவலி குறையும். கிராம்பு எண்ணெயை முகர்ந்தாலும் தலைவலி குறையும்.
- ஒரு கப் தண்ணீரில் 5-6 துளசி இலைகளைப் போட்டு கொதிக்க விடவும். அடுப்பை நிறுத்தி விட்டு, இதை ஆறவிடவும். பின்னர் வடிகட்டி இளஞ்சூடாக கொஞ்சம் கொஞ்சமாக குடிக்கத் தலைவலி சரியாகும்.
- அஷ்வகந்தா பொடியை வைத்துக் கொள்ளவும். பாலில் அஷ்வகந்தா பொடியை ஒரு டீஸ்பூன் அளவு கலந்து 5 நிமிடம் கொதிக்கவிட்டு, பின்னர் அந்தப் பாலை குடிக்கவும். தலைவலி நீங்கும்.
- போதுமான தூக்கம் இல்லையென்றாலும் தலைவலி வரும். எனவே, 7-8 மணி நேரம் தூக்கம் அவசியம்.
- தலைவலி வந்தால் அந்த இடத்தில் 3 துளி லாவண்டர் எண்ணெய்யோ 3 துளி பெப்பர் மின்ட் எண்ணெயோ தெளிப்பது நல்லது. இதனால் டென்ஷன், தலைவலி குறையும்.
- 4-5 வெற்றிலையை சிறிது நீர் விட்டு அரைக்கவும். அதனுடன் கேம்ஃபர் எசன்ஷியல் எண்ணெய் 2 சொட்டு கலந்து தலையில் பத்து போடவும். அரை மணி நேரத்தில் தலைவலி சரியாகும்.