இன்றைய காலக்கட்டத்தில் கணவன், மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதில்லை. எதற்கெடுத்தாலும் நீயா, நானான்னு குடும்பத்தில் கணவன், மனைவி இடையே சண்டை, தகராறு ஏற்படுவது சகஜமாகி விட்டது.
ஐகோர்ட்டில் பார்த்தால் விவகாரத்து பிரச்சினை கேஸ்தான் அதிகமாக உள்ளது. அதிகமான கணவன்மார்கள் மனைவி கோபப்படுவதால்தான் சண்டை வருகிறது என்ற குற்றச்சாட்டு சொல்வார்கள்.
குடும்பத்தில் மனைவிகள் கோபம் அடைய, கணவன்களும் பல நேரங்களில் காரணமாகி விடுகின்றனர் என்பது அவர்களுக்கு புரிவதில்லை.
அப்படிப்பட்ட மனைவிகளை சுலபமாக சமாளிச்சுடலாம்ங்க. மனைவியை சமாளிக்க திறன் கற்றுக்கொண்டால் மனைவியிடம் அன்பை அதிகளவில் பெறலாம். மனைவியிடம் எப்போதும் அக்கறையாக இருந்தால் அவர்கள் உங்கள் அன்பு அதிகமாக காட்டுவார்கள்.
மனைவிகளை சமாளிக்க சில ஆலோசனைகள்
- மனைவிகள் செய்யும் சின்ன சின்ன தவறுகளை நாலு பேர் எதிர்க்க சுட்டிக்காட்டி பேசாதீங்க. தனியாக கூப்பிட்டு மெதுவாக அவர்கள் செய்த தவறை எடுத்துச் சொல்லுங்கள். அவர்களை சிந்திக்க வைக்கும்படி அறிவுரைகள் கூறுங்கள். அவர்கள் செய்த தவறை உணருவார்கள்.
- வேலையில் எந்த மனக்கஷ்டம் இருந்தாலும் வீட்டு வாசலில் வரும்போது எல்லாவற்றையும் தூக்கிபோட்டு உள்ளே நுழைங்க. வேலைக்கு போய்ட்டு வரும் கணவன்மார்கள் வீட்டிற்கு வந்ததும் மனைவியை பார்த்து ஒருமுறை சிரிங்க. அப்போது உங்களுக்கு என்ன சண்டை இருந்தாலும் மனைவி மறந்துவிடுவார்கள். கொஞ்சம் நேரம் கோபம் இருந்தாலும் அவர்கள் சரி செய்து கொள்வார்கள்.
- மனைவி வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தால் சில மணி நேரம் அவர்களிடம் அன்றைய வேலைகளில் என்ன நடந்தது என்று கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். இப்படி அவர்களிடம் அக்கறையுடன் கேட்டால் அவர்களின் அன்பு இன்னும் பெருகும்.
- மனைவி அவசர அவசரமாக வேலையை செய்து கொண்டு இருக்கும்போது அவர்களுக்கு தொந்தரவு தருமாறு அடிக்கடி கடுகடுன்னு பேசாதீங்க. இதனால் அவர்களுக்கு கோபம் அதிகமாகும். சில நேரங்களில் அவர்கள் உங்களை திட்ட கூட நேரிடும். இதனால் உங்கள் இருவருக்கும் சண்டை வர வாய்ப்பு உள்ளது.
- மனைவி உங்களுக்கு செய்யும் வேலைகளுக்கு நீங்கள் அடிக்கடி அவர்களிடம் நன்றி தெரிவித்தால் போதும். வாயால் மட்டும் தெரிவித்தால் போதாது. கொஞ்சம் அன்பு கலந்து சொன்னால் போதும். அப்படியே உங்கள் மேல் காதல் பொங்கி விடும் மனைவிகளுக்கு.
- நீங்கள் எதாவது தவறு செய்துவிட்டால் அவர்களிடம் மன்னிப்பு கேட்க தயங்காதீங்க. உடனே மன்னிப்பு கேட்டுவிடுங்கள். மனைவியிடம் கோபம் நீடிப்பதை தவிர்த்து விடுங்கள். இதனால் அவர்களுக்கு உங்கள் மேல் இருக்கும் கோபம் கொஞ்சம் தணியும்.
- மனைவி விரும்பி ஏதாவது பொருட்களை கேட்கும் போது, பணம் இருந்தால் வாங்கி கொடுக்கலாம். இல்லாவிட்டால் பணம் இல்லை என்றோ அல்லது குறிப்பிட்ட பொருள் இப்போது தேவையில்லை என்றோ சாந்தமாக மனைவியிடம் எடுத்து கூறிவிடுங்கள்.
- வேலைக்கு செல்லாத மனைவியாக இருந்தால், வேலையை விட்டு வரும்போது அவர்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கி வாருங்கள். நேரம் கிடைத்தால் மனைவியை வெளி இடங்களுக்கு கூட்டிச் செல்லுங்கள்.
- மனைவியின் உணவில் சுவை இல்லாவிட்டாலும் நல்லா இருக்குன்னு சொல்லுங்க. கொஞ்சம் நேரம் கழித்து மனைவி செய்த சமையலில் ஏதாவது குறை இருந்தால் நாசுக்காக எடுத்துச் சொல்லுங்கள்.
- வாழ்வது ஒருமுறைதான். காலம் விரைவாக சென்று கொண்டிருக்கிறது. நாளை யாருக்கும் நிரந்தரம் இல்லை. எனவே, ஒருவரையொருவர் விட்டுக்கொடுத்து வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழ கற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் செய்யும் தவறு நாளை உங்கள் குழந்தைகளுக்கு பாதிக்கக்கூடாது. எனவே, மனைவி மேல் எப்போதும் அன்பாக இருங்கள். அவர்களை மனைவி புரிந்து நடந்துகொண்டால் வாழ்க்கையில் எந்த பிரச்சினையும் இருக்காது.