தாய்மை-குழந்தை பராமரிப்புபுதியவை

நீங்கள் சிங்கிள் மதரா? அனைத்தையும் நீங்களே கவனிப்பதால் மன அழுத்தம் தலை தூக்குகிறதா..? உங்களுக்கான டிப்ஸ் இதோ

நீங்கள் அலுவலக வேலையை செய்யும்போது உங்கள் குழந்தைகளை கவனித்துக் கொள்வது, அவர்களின் தேவைகள் கவனிக்கப்பது என பலவும் நீங்கள் ஒரே ஆளாக இருந்து பார்த்துக்கொள்ள வேண்டும். அதனால் இது உங்களை சோர்வடைய வைக்கும். ஒற்றை தாய்மார்கள் மன அழுத்தத்தை குறைக்க பின்வரும் வழியை பின்பற்றி பயனடையுங்கள்.

போதுமான ஓய்வு : நம் மன அழுத்த அளவைக் குறைப்பது கடினம் அல்ல. மன அழுத்தத்தை குறைக்க நீங்கள் பல முறைகளை பயன்படுத்தலாம், ஆழமான சுவாச பயிற்சிகள், தியானம், யோகா, இசை மற்றும் போதுமான தூக்கம் ஆகியவற்றால் நாம் எளிமையாக நம் மன அழுத்தத்தை குறைக்க முடியும். ஒரு நினைவூட்டலை வைத்து, அவ்வப்போது ஓய்வு (Rest) எடுப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஒரு வழக்கமான திட்டமிடல் மற்றும் வேலைக்கு இடையே, 10-15 நிமிடங்கள் இடைவெளியை எடுத்துக்கொள்ளுங்கள். மனதை லேசாக அல்லது ஆழமான சுவாச (Deep Breathe) பயிற்சிகளை செய்ய இந்த இடைவெளியை நீங்கள் பயன்படுத்தலாம்.

தனியாக சிறிது நேரம் செலவிடுங்கள் : சுய பாதுகாப்பு மற்றும் தியானத்தை மேற்கொள்வதைத் தவிர, நீங்கள் தனியாக இருப்பது முக்கியம். உங்கள் அலுவலக வேலைகளில் ஈடுபடும்போது, நீங்கள் தனியாக நேரத்தை செலவிட மறந்து விடுகிறீர்கள். அதையும் மீறி நீங்கள் தனிமையில் இனிமை காண முற்பட்டால், இது மன அழுத்தத்தை குறைக்கவும் உங்களை அமைதியாக வைத்திருக்கவும் உதவுகிறது.

தியானம் மற்றும் யோகா : தியானம், யோகா மற்றும் ஆழ்ந்த சுவாச பயிற்சிகள் உங்களைத் தொடர்ந்து மன அழுத்தத்திலிருந்து விலக்கி வைக்கிறது. மன சிக்கலை குறைக்க இவையே சரியான வழியாகும். உங்கள் அன்றாட வழக்கத்தில் 10 நிமிட தியானம், யோகா மற்றும் ஆழ்ந்த சுவாச பயிற்சிகளை ஒருங்கிணைக்கவும், இப்படி செய்தால் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் காண்பீர்கள். உங்கள் மன சிக்கலில் இருந்து விடுப்பட அற்புதமான வழி யோகா ஆகும். மன சிக்கலுக்கு மட்டும் அல்லாமல் உடல் ஊக்கத்திற்கு யோகா வழிவகுக்கிறது. ஒரே நேரத்தில் உங்கள் மன மற்றும் உடல் ஆரோக்கியத்தை பார்த்துக்கொள்வதற்கு யோகா நிச்சயம் உதவும்.

போதுமான அளவு உறக்கம் : தனிப்பட்ட பல காரணங்களுக்காக, மக்கள் தூக்கத்தால் பாதிக்கப்படுகின்றனர். உங்கள் அறையை முழுமையாக இருட்டாக வைத்திருப்பதன் மூலம் நீங்கள் தூக்கத்தை கொண்டுவர முடியும். செல்போன்களை அறைக்கு வெளியே வைத்து விட்டு சரியான நேரத்தில் படுக்கைக்குச் சென்று தூங்கி எழுந்தாலே மன அழுத்தத்தை குறைக்கலாம்.

உங்களையும் கவனித்து கொள்ளுங்கள் : மன அழுத்தத்தைத் தவிர்க்க, அவ்வப்போது சுய கவனிப்பில் ஈடுபடுவது அவசியம். அழகு, ஆரோக்கியம் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வு போன்ற உங்கள் தனிப்பட்ட தேவைகளை கவனிக்க நீங்கள் நேரத்தை எடுத்துக்கொள்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஒரு சொகுசு ஸ்பாவுக்கு சென்று உங்களை மேலும் அழகுப்படுத்திக்கொள்ளுங்கள்.

உணவு மற்றும் குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுதல் :- மன அழுத்தத்தை குறைப்பதில் உணவுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. உணவுகளில் ஆக்ஸிஜனேற்றம் உள்ளது மற்றும் நார்ச்சத்து, உடல் பருமன் மற்றும் இதய நோயிலிருந்து விடுபட உதவுகிறது. அதிக பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்ணுங்கள், எப்போதும் நீரேற்றமாக இருங்கள். ஆரோக்கிய உணவு பழக்கத்தை வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுதல், சமையல், வீட்டு வேலைகள் மற்றும் அலுவலக வேலைகள் போன்ற ஒவ்வொரு குறிப்பிட்ட பணிகளுக்கும் நீங்கள் அர்ப்பணித்துள்ள நீங்களே உங்கள் நேரம் செலவிடும் பட்டியலை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஒழுக்கத்துடன் ஒரு கண்டிப்பான கால அட்டவணையைப் பராமரிக்கவும், உங்கள் வாழ்க்கை மாற்றத்தை நன்மையாகாக மாற்ற தீவிரமாக முயற்சிக்கவும்.

இந்த சிங்கிள் அம்மாக்களில் பெரும்பான்மையினர் வேலைக்குச் செல்பவர்கள். அதிலும் ஆசிரியர்கள், செவிலியர்கள், எழுத்தாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் வீட்டுத் தொழிலாளர்கள் எனப் பணியாற்றுபவர்கள். இவர்கள் தங்கள் குழந்தைகளை டே கேர் மற்றும் அங்கன் வாடிகளில் விட்டுச்செல்வதை வழக்கமாகக் கொண்டவர்கள். ஆனால், இந்த லாக்டவுனில் இந்தப் பெண்கள் பகிர்ந்துகொள்ள துணையின்றி தனி மனுஷியாக நின்று சமாளிப்பதால், மன அழுத்தத்தில் சிக்கி தவிப்பார்கள். இதற்கு மேற்சொன்ன அறிவுரைகளை பின்பற்றினால் நலமுடன் மகிழ்ச்சியாக வாழலாம்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker