உறவுகள்புதியவை

தூக்கம் உங்கள் செக்ஸ் வாழ்க்கையில் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் தெரியுமா?

ஒருவரின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் தூக்கம் மிக முக்கியமானது என்பது அனைவருக்கும் தெரியும். இதை ஆய்வுகளும் நிரூபித்துள்ளன. இருப்பினும், ஆரோக்கியமான தூக்க பழக்கம் ஆரோக்கியமான பாலியல் வாழ்க்கைக்கு முக்கியமானது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். ஆம், நல்ல தூக்கம் உங்களுடைய பாலியல் வாழ்க்கையை மேம்படுத்தும் என்று ஆய்வுகளிலும் நிரூபிக்கப்பட்டுள்ளன.

வட அமெரிக்கவில் மெனோபாஸ் சொசைட்டி நடத்திய ஆய்வின்படி, ஆரோக்கியமற்ற தூக்க பழக்கம் ஒருவரின் பாலியல் வாழ்க்கையை மோசமானதாக மாற்றுகிறது. இதில், குறிப்பாக பெண்களுக்கு மோசமான பாலியல் வாழ்க்கையை பங்களிக்கிறது. தூக்கப் பிரச்சினைகள் ஒரு பெண்ணின் பாலியல் திருப்திக்கு இடையூறாக இருக்கும் என்று ஆய்வு கூறுகிறது. அமெரிக்கன் அகாடமி ஆஃப் ஸ்லீப் மெடிசின் நடத்திய மற்றொரு ஆய்வும் இதே முடிவை கூறுகிறது.

செக்சோம்னியா

தூக்கக் கோளாறுகள் பாலியல் வாழ்க்கையை பாதிக்கும் மற்றும் ஸ்லீப்ஸெக்ஸ் அல்லது செக்சோம்னியா போன்ற அசாதாரண பாலியல் நடத்தைகளை ஏற்படுத்தக்கூடும். செக்சோம்னியா என்பது தன்னையறியாமல் செக்ஸ் உணர்வால் உடலுறவில் ஈடுபடுவது என்கிறார்கள் மருத்துவர்கள். இத்தகைய உடலுறவில் ஈடுபடுகிறவர்களுக்கு, உறவில் ஈடுபட்ட துணை சொல்லும் வரை தான் உறவில் ஈடுபட்டது தெரியாது என்பது குறிப்பிடதக்கது.

தூக்கமும் பாலியல் வாழ்க்கையும்

தூக்க பழக்கம் உங்கள் பாலியல் வாழ்க்கையுடன் எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளது என்பதை இந்த ஆய்வு விளக்குகிறது. இந்த ஆய்வு பெண்களின் தூக்க முறைகள் மற்றும் பாலியல் வாழ்க்கை ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பை ஆராய்வதில் கவனம் செலுத்தியது. அத்துடன் பெண்கள் நீண்ட நேரம் தூங்குவதாகவும், அடுத்த நாள் அவர்கள் செக்ஸ் மீது அதிக ஆர்வம் காட்டுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

கூடுதல் நேர தூக்கம்

ஒரு மணிநேர கூடுதல் தூக்கம் பாலியல் சந்திப்புக்கான வாய்ப்புகளில் 14 சதவீதம் அதிகரிப்பதற்கு பங்களிக்கும் என்று கூறுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். மேலும் மனநிலையை மேம்படுத்துவதோடு, கூடுதல் மணிநேர தூக்கமும் பிறப்புறுப்பு தூண்டுதலை மேம்படுத்துகிறது.

மாதவிடாய் நின்ற பெண்கள்

மற்றொரு ஆய்வு மாதவிடாய் நின்ற பெண்களில் இந்த இரண்டு காரணிகளுக்கும் இடையிலான உறவை ஆராய்வதில் கவனம் செலுத்தியது. மாதவிடாய் நின்ற பெண்களின் உயிரியல் மற்றும் உளவியல் சிக்கலான தொடர்பு தூக்கம் மற்றும் பாலியல் பிரச்சினைகள் ஆகிய இரண்டோடு தொடர்புடையது. இந்தப் பெண்களின் தூக்கப் பிரச்சினைகள் பாலியல் பிரச்சினைகளுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளன என்று ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.

ஆண்மை குறைபாடு

சரியான அளவு தூக்கம் (7-8 மணி நேரம்) இல்லாதது ஒருவரின் ஆண்மை தன்மையை அழிக்கிறது என்பது ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. 60 வயதிற்கு முன்பு நடுநிலை வயதுடைய 4,000 ஆண்கள் மற்றும் பெண்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பாலியல் மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வின் முடிவில், மோசமான தூக்கம் ஆண்களுக்கான விறைப்புத்தன்மையுடன் தொடர்புடையது என்றும், பெண்களுக்கு புணர்ச்சியுடன் தொடர்புடையது என்றும் தெரிவித்தது.

ஸ்லீப் அப்னியா

இவை தவிர, ஸ்லீப் அப்னியா (இது இளைய தலைமுறையினரிடையே அதிகரித்து வருகிறது) ஒருவரின் பாலியல் விருப்பத்தை பாதிக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த இரண்டும் உண்மையில் எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளன? டெஸ்டோஸ்டிரோன், ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் ஆகியவற்றின் அளவுகள் தூக்கத்தின் போது மிக உயர்ந்தவையாக இருக்கும். இது தூக்க சுழற்சியின் பிற்பகுதியில் ஏற்படும் ஆழமான தூக்கம் ஆகும். நீங்கள் சரியான அளவு தூக்கத்தைப் பெறத் தவறும் போது, டெஸ்டோஸ்டிரோன் சுற்றும் அந்த மறுசீரமைப்பு நிலைகளை பெறமுடியாது. இதன் மூலம் உங்கள் பாலியல் ஆசைக்கு இடையூறு ஏற்படுகிறது.

மூச்சுத்திணறல்

தூக்கப் பழக்கம் பாலியல் உறவோடு தொடர்புடைய விளைவைக் கொண்டிருக்கிறது. டெஸ்டோஸ்டிரோன் குறைவாக இருப்பதால், குறட்டை மற்றும் சுவாசித்தில் சிரமம் ஏற்படுவது. தூக்கம்போது மூச்சுத்திணறல் பிரச்சனைக் கொண்ட ஆண்களின் பாலியல் செயல்பாடுகளின் அளவு குறைந்துள்ளதாக ஆய்வில் கூறப்படுகிறது.

திருப்தியில்லாத உடலுறவு

தூக்கமும் பாலினமும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன. சரியான தூக்கம் இல்லாததால் உங்கள் பாலியல் ஆசை குறையும். அதே வரிசையில், பலவீனமான பாலியல் வாழ்க்கை தூக்கமின்மைக்கு வழிவகுக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. திருப்தியில்லாத உடலுறவு உங்கள் தூக்க சுழற்சியை எதிர்மறையாக பாதிக்கும்.

ஹார்மோன்

செக்ஸ் என்பது மன அமைதியையு, புத்துணர்ச்சியையும், அனபையும், தூக்கத்தையும் மேம்படுத்தவும் உதவுகிறது. புணர்ச்சிக்குப் பிறகு, நம் உடல்கள் கணிசமான அளவு ஆக்ஸிடாஸின் வெளியிடுகின்றன. ஒரு வகையான ஹார்மோன். இது மன அழுத்த ஹார்மோன் கார்டிசோலின் அளவைக் குறைக்கிறது. இதன் விளைவாக ஆழ்ந்த தளர்வு ஏற்படுகிறது .

நல்ல தூக்கம்

சிறந்த தூக்க பழக்கத்தின் மூலம் உங்கள் பாலியல் வாழ்க்கையை மேம்படும். ஒன்றாக படுக்கைக்குச் செல்வது, வார இறுதி நாட்களில் கூட ஒரே நேரத்தில் எழுந்திருப்பது போன்ற நல்ல தூக்க சுகாதாரத்தை துணைகள் கடைப்பிடிக்க வேண்டும். படுக்கைக்குச் செல்வதற்கு முன் மதுவைத் தவிர்க்கவும். ஒரு சூடான குளியல் அல்லது தியானம் அல்லது படுக்கையில் ஒரு புத்தகத்தைப் படிப்பது போன்ற ஒரு படுக்கை நேர வழக்கத்தை அமைக்கவும். உங்கள் தூக்கத்துடன் உங்கள் பாலியல் வாழ்க்கையை திட்டமிட்டு, நல்ல தூக்கத்தையும், மகிழ்ச்சியான பாலியல் வாழ்க்கையும் உருவாக்கி வாழுங்கள்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker