சமையல் குறிப்புகள்புதியவை

டேஸ்டியான வெனிலா புட்டிங் செய்யலாமா? செய்ய ரொம்ப ஈஸி

வெனிலா புட்டிங் மற்றும் ராஸ் பெர்ரி சாஸ் ரெசிபி ரெம்ப ஈஸியான டிசர்ட் ஆகும். குறைந்த நேரத்தில் அழகாக செய்து விட முடியும்.

அதே நேரத்தில் மிகுந்த சுவையுடன் செய்வதற்கு குறைவான பொருட்கள் இருந்தாலே போதும். கிறிஸ்துமஸ், நியூ இயர் மற்றும் உங்க செல்லக் குட்டி குழந்தைகளின் பார்ட்டி போன்றவை வந்தால் இந்த டிசர்ட் செய்து அசத்திடலாம். இதை பிரிட்ஜில் வைத்து கூட அப்போது பயன்படுத்தி கொள்ளலாம். ஒரு நாள் இருந்தால் கூட கெட்டு போகாது.

INGREDIENTS

பால் (உங்களின் தேவைக்கேற்ப) – 1கப்

ஸ்கார்ன் ஸ்டார்ச் / உருளைக்கிழங்கு ஸ்டார்ச் – 1டேபிள் ஸ்பூன்

மாப்பிள் சிரப் – 1 குவியல் டேபிள் ஸ்பூன்

பிங்க் உப்பு – கொஞ்சம்

சிறிய ஒரு முட்டை/ அரை பெரிய அல்லது மீடிய வடிவ முட்டை – 1

வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

வெனிலா பொடி / வெனிலா எஸ்ஸென்ஸ் – 1 டேபிள் ஸ்பூன்

ராஸ்பெர்ரி சாஸ் தயாரிக்க :

தேவையான பொருட்கள்

ப்ரஷ்/ குளிர்விக்கப்பட்ட ராஸ்பெர்ரி-2 கப்

மாப்பிள் சிரப் – 1-2 டேபிள் ஸ்பூன்

HOW TO PREPARE

ஒரு கடாயில் கார்ன் ஸ்டார்ச் மற்றும் உப்பு சேர்க்கவும்

ஒரு தனி பெளலில் முட்டையை கட்டியில்லாமல் அடித்து கொள்ளவும்

அதனுடன் பால் சேர்த்து நன்றாக கலக்கவும். பிறகு அதை கடாயில் ஊற்றவும். அதனுடன் மாப்பிள் சிரப் சேர்க்கவும்.

இப்பொழுது கடாயை மிதமான தீயில் வைத்து சமைக்கவும்.

நுரைகள் வந்து கலவை கெட்டியாகும் வரை சமைக்கவும். பிறகு அடுப்பிலிருந்து எடுத்து வெண்ணெய் மற்றும் வெனிலா எஸன்ஸ்யை சேர்க்கவும்.

கொஞ்சம் நேரம் ஆற வைக்க வேண்டும். கட்டி ஏற்படுவதை தடுக்க நன்றாக கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். பிறகு அதை ஒரு தனியான புட்டிங் கப்களில் அல்லது டிப்பிங் பெளல்களில் ஊற்ற வேண்டும்

ஒவ்வொரு கப்புகளையும் க்ளிங் சீட்டால் மூடி பிரிட்ஜில் வைத்து குளிர்விக்க வேண்டும் பிறகு ஒரு சிறிய கடாயை எடுத்து அதில் ராஸ்பெர்ரியை மிதமான சூட்டில் மென்மையாகும் வரை சமைக்க வேண்டும் பிறகு வேக வைத்த ராஸ்பெர்ரியை ஸ்பூனை கொண்டு நன்றாக மசித்து கொண்டு அதனுடன் மாப்பிள் சிரப் சேர்க்கவும்

இந்த சாஸை சூடாக அல்லது குளிர்வித்து உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப புட்டிங் மீது ஊற்றி சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

யம்மி டேஸ்டியான வெனிலா புட்டிங் மற்றும் ராஸ்பெர்ரி சாஸ் ரெசிபி ரெடி.

INSTRUCTIONS

லாக்டோஸ் இல்லாத பால் வேண்டும் என்று நினைத்தால் மாட்டுப் பாலிற்கு பதிலாக பாதாம் பாலை, பயன்படுத்தி கொள்ளலாம்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker