குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு எந்த வகை உணவுகளைக் கொடுக்கலாம்? கொடுக்கக்கூடாது?
சீதோஷண நிலையில் நுண்கிருமிகள் வீரியமாகச் செயல்படும். எனவே, அவற்றை எதிர்கொள்ள குழந்தைகளுக்கு அதிக ஆற்றலும் நோய் எதிர்ப்பு சக்தியும் தேவைப்படும். அவற்றை ஆரோக்கியமான உணவுகளின் மூலம் குழந்தைகளைப் பெறச் செய்யலாம்.
குளிர்காலம் வந்துவிட்டாலே இருமல், சளி, காய்ச்சல் என குழந்தைகள் அதிக நோய்த்தாக்குதல்களுக்கு ஆளாவார்கள். காரணம், இந்த சீதோஷண நிலையில் நுண்கிருமிகள் வீரியமாகச் செயல்படும். எனவே, அவற்றை எதிர்கொள்ள குழந்தைகளுக்கு அதிக ஆற்றலும் நோய் எதிர்ப்பு சக்தியும் தேவைப்படும். அவற்றை ஆரோக்கியமான உணவுகளின் மூலம் குழந்தைகளைப் பெறச் செய்யலாம். குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த வைட்டமின் C, E, பீட்டா கரோட்டீன் சத்துகள் அடங்கிய உணவுகளைக் கொடுக்கவேண்டும். குறிப்பாக, நொறுக்குத் தீனி தவிர்த்து இந்த சத்துகள் அடங்கிய பழம் மற்றும் பயறு வகைகளைக் கொடுக்கலாம்.
உங்கள் குழந்தைகள் ஆரோக்கியமான உணவு உண்ண அவர்களை உற்சாகப்படுத்துவது அவசியம். குழந்தைகளுக்கு பிடித்த உணவுகளை கொடுப்பது உங்கள் குழந்தைகளை உண்ண வைக்க சிறந்த வழியாகும். உங்கள் குழந்கை ஆரம்பத்தில் ஒரு வகை உணவை விரும்பவில்லை அவர்களை வற்புறுத்த வேண்டாம். அந்த வகையில் இங்கு ஒருசில முக்கியமான குளிர்கால உணவுகள் கொடுக்கப்பட்டுள்ளன இதை உங்கள் குழந்தைகளுக்கு அளித்து அவர்களின் உடல் நலத்தில் அக்கறை கொள்ளுங்கள்.
வெஜ் மற்றும் நான்-வெஜ் உணவுகள் : வழக்கமான காய்கறிகள் மற்றும் கீரைகளை பொதுவாக குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள். நீங்கள் இவற்றை சமைக்கும்போது வண்ணமயமாக இதில் அடங்கியுள்ள சத்துக்களை குழந்தைகளிடம் எடுத்துச் சொல்லி அவர்களுக்கு கார்ட்டூன் கதாபாத்திரங்களில் வரும் நபர்களை போல மாற முடியும் என்று கூறி அவர்களை உண்ண வைப்பது சிறந்தது. வழக்கமான காய்கறி குழம்பு, பொரியல் இவற்றை செய்தால் குழந்தைகள் உண்ணுவது கடினமாக இருக்கும் அதில் வித்தியாசத்தை கொண்டு வாருங்கள். சமைத்த உணவை குழந்தைகள் உண்ண விரும்பவில்லையெனில், கொஞ்சம் மட்டனை காரம் குறைவாக வேக வைத்து, சிறிது காய்கறிகளை சேர்த்து அவர்களை உண்ண வையுங்கள். மீன் உணவுகளையும் அவ்வப்போது சேர்த்து கொள்ளுங்கள். இது குழந்தைகள் விரும்பும் எளிய வகை உணவு. இதை முயற்சி செய்து பாருங்கள். இதை அவர்கள் மிகவும் விரும்புவார்கள்.
சிக்கன் ஃபிங்கர்ஸ் : உணவை விரும்பாத களுக்கு மொறுமொறுவென சிக்கன் செய்து கொடுங்கள். இது குழந்தைகளுக்கான விருப்ப உணவுகளில் ஒன்றாகும். அவர்கள் அதை விரும்பலாம். அவர்களை இந்த உணவை சுலபமாக உண்ண வைக்கும். உங்கள் குழந்தை உணவு விஷயத்தில் கடுமையாக நடந்து கொண்டால், இந்த உணவை முயற்சி செய்து பாருங்கள். சிக்கன் ஃபிங்கரை உண்ண அவர்களுக்கு வேடிக்கையாக இருக்கும். இதுவும் குளிர்கால உணவு வகைகளில் முயற்சிக்க வேண்டிய ஒன்றாகும்.
சீஸ் கேக் : குழந்தைகளுக்கு கேக் என்றால் மிகவும் பிடிக்கும். கேக் செய்து குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்கள். அதை அவர்கள் விரும்பலாம். இது அவர்களை குஷிப்படுத்த ஏற்ற ஒரு சிறந்த குளிர்கால உணவாகும். பிஸ்கெட், சீஸ் வைத்து வீட்டிலேயே எளிய முறையில் கேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம். இந்த மிருதுவான கேக் அவர்களை மீண்டும் மீண்டும் சாப்பிடத் தூண்டும். பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான ஸ்ட்ராபெர்ரி சீஸ் கேக் ரெசிபியை சமைத்து குழந்தைகளுக்கு அளித்திடுங்கள்.
தூள் கிளப்பும் சூப் : தாய்ப்பாலுக்கு பிந்தைய இணை உணவில் திட உணவுகள் சேர்க்கும் போது கஞ்சி, கூழ், ப்யூரி, பழச்சாறுகள் போன்றவற்றை அதிகம் சேர்க்கிறோம். அந்த வகையில் சூப் வகைகளையும் சேர்க்க வேண்டும். குழந்தைகள் உணவுகளை சாப்பிட நேரம் எடுத்துக் கொள்ளவில்லையெனில் அவர்களுக்கு சூப் செய்து கொடுக்கலாம். அது அவர்களுக்கு சுலபமானதாக இருக்கும். அவர்களுக்கு விருப்பமான உணவை சமைப்பது எளிதான ஒன்றாகும். கொஞ்சம் காய்கறிகளை வைத்து அருமையான சூப் செய்து கொடுங்கள். இதுவும் குளிர்காலத்தில் அவர்களுக்கு கொடுக்க வேண்டிய சிறந்த உணவாகும்.
குழந்தைக்கு சூப் தயாரிக்க வெங்காயம் பயன்படுத்தும் போது சாம்பார் வெங்காயத்தை சேர்ப்பது நல்லது. தக்காளியும் பெரும்பாலும் ஹைப்ரேட் இல்லாமல் நாட்டு தக்காளியாக இருக்க வேண்டும். அதிகம் சேர்க்க வேண்டியதில்லை. குழந்தைக்கு கொடுப்பதால் மிளகு சேர்க்க வேண்டாம். அப்படி சேர்ப்பதாக இருந்தால் அரை சிட்டிகை அளவு போதுமானது. அதற்கு மாறாக சீரகம் கால் டீஸ்பூன் அளவு சேர்க்கலாம். பூண்டு ஒரு பல் போதுமானது. நெய் கால் அல்லது அரை டீஸ்பூன் வரை சேர்க்கலாம்.
குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாத உணவுகள் :இவ்வளவு நேரம் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய உணவுகளைப் பற்றி பார்த்தோம் இப்பொழுது குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு நிச்சயம் கொடுக்க கூடாத உணவுகள் எவை என்று பார்ப்போம்.
எண்ணெய்யில் பொரித்த நொறுக்குத்தீனிகள்: எண்ணெயில் நன்றாகப் பொரித்த உணவுகளை அடிக்கடி கொடுக்கக்கூடாது, ஆசைக்கு கொடுக்கலாம். அதை பழக்கப்படுத்தக்கூடாது. சிலர் சிக்கனை விரும்பி குழந்தைகளுக்கு அளிப்பார்கள் அது உண்மையில் மோசமான ஒன்று. அதே அளவுக்குக் குழந்தைகள் அதிகமாக விரும்பிச் சாப்பிடும் ‘பிரெஞ்சு ஃபிரைஸ்’, ‘சிக்கன் நக்கெட்ஸ்’, ‘மொஸெரெல்லா சீஸ் ஸ்டிக்ஸ்’ ‘ஸ்மைலிஸ்’ போன்றவையும் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டியவை. இந்த வகையான பொரித்த உணவு வகைகளில் இருக்கும் கொழுப்பு, குழந்தைகளின் இதயத்துக்கு நல்லதல்ல.
பிரட்-ரோல்ஸ் (Bread & Rolls) : ஒரு வெள்ளை பிரட் துண்டில் 80-230 மில்லிகிராம் உப்பு இருக்கிறது. அந்த பிரட் துண்டின் மீது வெண்ணெய் தடவினால், அதன் சோடியம் அளவு மேலும் அதிகரிக்கும். ஒரு நாளில் குழந்தைகள் உட்கொள்ளும் சோடியம் அளவுக்கு அதிகமாக இருந்தால், அது குழந்தைகளின் மூளை, சிறுநீரகங்கள், இதயம் போன்ற உடல் உறுப்புகளைப் பாதிக்கும்.
பீட்சா/பர்கர் : ஒரு நாளில் உட்கொள்ள வேண்டிய மொத்த உப்பின் அளவில் 25 சதவீதம் பீட்சா/பர்கரில் இருக்கிறது. எந்த டாப்பிங்ஸும் இல்லாத சாதாரண சீஸ் பீட்சாவின் நான்கு துண்டுகளில் 370-730 மில்லிகிராம் வரை சோடியம் இருக்கிறது. அதுவே உணவகங்களில் வாங்கும் வழக்கமான சீஸ் பிட்ஸாவில் 510-760 மில்லிகிராம் சோடியம் இருக்கிறது. பர்கரும் கிட்டத்தட்ட ஒதுக்கவேண்டியதுதான். குழந்தைகள் முற்றிலும் தவிர்க்க வேண்டிய உணவுப் பட்டியலில் சீஸ் பர்கர் முதலிடத்தில் இருக்கிறது. குழந்தைகள் ஒரு நாளில் உட்கொள்ள வேண்டிய சோடியம் அளவைவிடப் பன்மடங்கு அதிக சோடியம் பர்கரில் இருக்கிறது. குறிப்பாக அசைவ பர்கர்களைத் தவிர்ப்பது மிகவும் நல்லது.