கூந்தலை அடர்த்தியாக்கும் நெல்லிக்காய் பொடி.. வீட்டிலேயே தயாரித்துப் பயன்படுத்த வழிமுறைகள் இதோ…
கவலை , தூக்கமின்மை, மன அழுத்தம், மாதவிடாய் தள்ளிப்போதல் , ஊட்டச்சத்து சமநிலையின்மை போன்ற பல காரணங்களால் முடி உதிர்வு உண்டாகிறது.
கொரோனா நெருக்கடியின் பின்விளைவுகளில் முக்கியமான பிரச்னை தலை முடி உதிர்தல். கவலை , தூக்கமின்மை, மன அழுத்தம், மாதவிடாய் தள்ளிப்போதல் , ஊட்டச்சத்து சமநிலையின்மை போன்ற பல காரணங்களால் முடி உதிர்வு உண்டாகிறது. இதை சரிசெய்ய சில வீட்டு வழிமுறைகளே போதும். அதற்கு நெல்லிக்காய் நல்ல தீர்வாக இருக்கும். எனவே நெல்லிக்காயை எப்படி தலைமுடி உதிர்வை தடுக்கப் பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.
நெல்லிக்காய் , சீயக்காய் மற்றும் பூந்தி கொட்டை : இவை மூன்றையும் நன்கு காய வைத்து மைய அரைத்து பொடியாக்கி வாரம் ஒருமுறையேனும் பயன்படுத்துங்கள். இந்த பொடியை தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் கலந்து வேர்களில் தடவி அரை மணி நேரம் ஊற வைத்து பின் தலைக்கு குளியுங்கள்.
நெல்லிக்காய் பொடி மற்றும் தயிர் : தயிர் பொடுகு இருந்தாலும் நீக்கிவிடும். எனவே நெல்லிக்காய் பொடியை தயிரில் கலந்து பேஸ்ட் போல் குழைத்து வேர்களில் படும்படி தடவுங்கள். பின் சில மணி நேரம் ஊற வைத்து பின் அலசிவிடுங்கள்.
நெல்லிக்காய் பொடி மற்றும் வெந்தயம் : வெந்தயத்தை இரவு ஊற வைத்து மறுநாள் பேஸ்டாக அரைத்துக்கொள்ளுங்கள். பின் நெல்லிக்காய் பொடி சேர்த்து கலந்து கொள்ளுங்கள். தண்ணீர் தேவைப்பட்டால் வெந்தயம் ஊற வைத்த தண்ணீரை பயன்படுத்துங்கள். இதை தலையில் தேய்த்து ஊற வைத்து பின் தலையை அலசுங்கள்.
குறிப்பு : மேலே கூறியுள்ள குறிப்புகளை செய்வதற்கு முன் உங்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துமா என பரிசோதனை செய்துவிட்டு பயன்படுத்தவும். சைனஸ் போன்ற பிரச்னைகள் இருந்தால் மருத்துவர் ஆலோசனைக்கு பின் பயன்படுத்தலாம்.