அசைவம் சாப்பிடுவோரை விட சைவம் சாப்பிடுவோரின் தாம்பத்திய வாழ்க்கைதான் ஜம்முனு இருக்குமாம்
ஆய்வில் 84% சைவப் பிரியர்கள் செக்ஸ் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் வெளியாகியுள்ள ஆய்வு அசைவம் சாப்பிடுவோரைக் காட்டிலும் சைவம் சாப்பிடுவோரின் தாம்பத்திய வாழ்க்கைதான் சிறப்பாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
ஐரோப்பாவின் ஆன்லைன் செய்தி நிறுவனமான ஹக்னால் டிஸ்பேட்ச் நடத்திய ஆய்வுக் குறிப்பில் சைவம் சாப்பிடுவோரைக் காட்டிலும் அசைவம் சாப்பிடுவோர் படுக்கையில் சுயநலமாக இருப்பதால் அவர்களின் தாம்பத்திய வாழ்க்கை செழிப்பாக இருப்பதில்லை என்று கூறியுள்ளது.
அவர்கள் எடுத்த ஆய்வில் 84% சைவப் பிரியர்கள் செக்ஸ் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். ஆனால் அசைவத்தினரோ 59% மட்டுமே மகிழ்ச்சியாக இருப்பதாகக் கூறியுள்ளனர். இதில் 500 சைவம் மற்றும் 500 அசைவம் சாப்பிடும் மக்களிடம் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.
”சைவம் சாப்பிடுவோருக்கு காய்கறிகள், மசாலாக்கள், தானியங்கள் என வகைகள் நிறைய இருக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவை மற்றும் ஊட்டச்சத்தை உள்ளடக்கியது. அதுதான் அவர்களின் ஆரோக்கியமான செக்ஸ் வாழ்க்கைக்கு காரணம்” என ஐரோப்பாவின் டேடிங் ஆப் நிறுவனர் ஜெசிகா லியோனி கூறுகிறார்.
”நான் தாவரம் சார்ந்த உணவுகளையே அதிகம் சாப்பிடுகிறேன். நான் அந்த சமயத்தில் அதிக சுறுசுறுப்போடும், நீண்ட நேர ஆற்றலோடும் இயங்குவேன். அதேபோல் புதுபுது யுத்திகளைக் கையாள்வதிலும் ஆர்வமாக இருப்பேன்” என 39 வயது சைவப் பிரியர் கூறியுள்ளார்.
இந்த விஷயத்தை அறிவியல் ரீதியாக ஆராயும்போதும் அது உண்மைதான் என்கிறது ஆய்வு. அதாவது சைவ உணவுகளில் அதிகமாக ஸிங்க் மற்றும் வைட்டமின் பி சத்து நிறைவாக உள்ளது. குறிப்பாக வாழைப்பழம், அவகோடா, பட்டாணி வகைகளில் லிபிடோ அமிலம் சுரக்கிறது.
இவைதான் செக்ஸ் உணர்ச்சியைத் தூண்டுவதில் மிக முக்கிய சத்துகளாகும். அதோடு அவர்களுக்கு செரோடினின் அளவும் உயர்கிறது. இது செக்ஸ் ஆற்றலை அதிகரித்து மகிழ்ச்சி மற்றும் சுறுசுறுப்பையும் அதிகரிக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.