ஸ்டீம் அயர்ன்பாக்ஸ் கறை போகவே மாட்டேங்குதா? இதோ இந்த சிம்பிள் ட்ரிக்ஸ்ஸ ட்ரை பண்ணுங்க…
ஒவ்வொரு பொருளையும் சுத்தமாக வைத்துக் கொள்வதால் அதிக நன்மைகள் உண்டு. அதன் வாழ்நாள் அதிகரிக்கும். அதன் செயல்பாடுகளும் சரியான விதத்தில் நடைபெறும். இது நாம் பயன்படுத்தும் எல்லா பொருட்களுக்கும் பொருந்தும். குறிப்பாக நாம் பயன்படுத்தும் அயர்ன் பாக்ஸ், ஸ்டவ் போன்றவற்றை ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் சுத்தம் செய்வதை வழக்கமாக்கிக் கொள்வதால் அதன் ஆயுட்காலம் அதிகரிக்கும்.
அதன் திறனும் மேம்படும். நீராவி அயர்ன் பாக்ஸ் என்பது சீரான முறையில் பராமரிக்கப் படவேண்டிய ஒரு பொருள் ஆகும். நீங்கள் அதை நகர்த்தும்போது இரும்பு இழுப்பதைத் தவிர்ப்பதற்கும், அழுக்குகள் அடிப்பகுதியில் சேராமல் இருக்க நீராவி துவாரங்களையும் சுத்தம் செய்ய வேண்டும்.
அயர்ன் பாக்ஸ்
இப்படி அயர்ன் பாக்ஸை சுத்தம் செய்ய பல்வேறு வழிகள் உள்ளன. ஆனால் வீட்டில் உள்ள பொருட்கள் கொண்டு இதனை சுத்தம் செய்வது எளிது. மேலும் வீட்டில் இருக்கும் பொருட்களில் இயற்கையான முறையில் நச்சுத்தன்மை இல்லாமல் இருப்பதால் அயர்ன் பாக்ஸிற்கு எந்த ஒரு சேதமும் ஏற்படுவதில்லை. ஆகவே இந்த பதிவைத் தொடர்ந்து படித்து இதனை எப்படி சுத்தம் செய்வது என்பது பற்றி அறிந்து கொள்ளுங்கள்.
வெள்ளை வினிகர்
அயர்ன் பாக்ஸில் படிந்திருக்கும் அழுக்கைப் போக்குவதில் வெள்ளை வினிகர் நல்ல பலன் தருகிறது. வெள்ளை வினிகர் அல்லது சமபங்கு தண்ணீர் மற்றும் வினிகர் சேர்க்கப்பட்ட கலவையை அயர்ன் பாக்ஸில் நீர் சேமித்து வைக்கப்படும் இடத்தில் முக்கால் பாகம் ஊற்றிக் கொள்ளவும். மிதமான வெப்பத்தில் 5-10 நிமிடங்கள் நன்றாக சூடாகட்டும். இதனால் வினிகர் ஆவியாகிவிடும். பின்னர் அந்த இடத்தில் சாதாரண நீர் கொண்டு நிரப்பி, மறுபடி அயர்ன் பாக்ஸை ஆன் செய்து வினிகர் மற்றும் இதர கனிமங்கள் படித்திருப்பதை வெளியேற்றி விடுங்கள்.
பேக்கிங் சோடா
ஒரு ஸ்பூன் தண்ணீர் மற்றும் இரண்டு ஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து ஒன்றாகக் கலந்துக் கொள்ளவும். ஒரு பேஸ்ட் போல் ஆகும்வரை நன்றாகக் கலக்கவும். தண்ணீர் போல் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். அயர்ன் பாக்ஸின் அடிப்பகுதியில் ஒரு தட்டையான கரண்டி கொண்டு இந்த விழுதை அழுக்கு படிந்திருக்கும் இடத்தில் தடவவும். நீராவி துவாரங்கள் குறிப்பாக நன்றாக இந்த விழுதால் அடைக்கப்பட வேண்டும். இந்த விழுது மிகவும் அடர்த்தியாக இல்லாமல் ஓரளவிற்கு சமமாக எல்லா இடத்திலும் தடவப்பட வேண்டும். சற்று நேரம் கழித்து ஒரு ஈரத் துணியால் அந்த பேஸ்ட்டை துடைத்து எடுத்து விடுங்கள். இதனுடன் அழுக்கும் சேர்ந்து வெளியேறிவிடும்.
உப்பு
நைலான், பிளாஸ்டிக் போன்ற இடங்களில் உள்ள அழுக்கை வெளியேற்றுவதில் உப்பு சிறந்த பலன் அளிக்கிறது. ஒரு பேப்பர் டவலில் ஒரு கை உப்பு வைத்து சூடாக இருக்கும் அயர்ன் பாக்சை இந்த பேப்பரில் வைத்து இழுக்கவும். இதனால் அழுக்கு கரைகள் அகன்றுவிடும். அழுக்கு உப்பால் ஈர்க்கப்பட்டு அந்த இடம் சுத்தமாகிவிடும்.
பற்பசை
அழுக்கு ஊறி வெளியேறும்வரை பற்பசை கொண்டு அயர்னின் அடிப்பகுதியில் தேய்க்கலாம். அடுத்த சில நிமிடங்களில் அழுக்கு மற்றும் இதர கறைகளை நீக்க முடியும்.
காய்ந்த அட்டைகள்
அயர்னின் அடிப்பகுதியில் சில காய்ந்த அட்டைகள் கொண்டு மென்மையாக தேய்ப்பதால் அழுக்கு வெளியேறும். இப்படி செய்யும் நேரம், அயர்ன் பாக்ஸை மிகவும் குறைவான வெப்பத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். கறை மற்றும் அழுக்கு வெளியேறும் வரை தொடர்ந்து தேய்க்கலாம்.
ஈரத் துணி
ஒரு பெரிய துணியை எடுத்து நீரில் நனைத்துக் கொள்ளவும். அதிக நீரைப் பிழிந்து எடுத்துக் கொண்டு அந்த துணியால் அயர்னின் அடிப்பகுதியை சுத்தம் செய்யவும். இதனால் அழுக்கு மொத்தமும் வெளியேறும்.
வினிகர் மற்றும் உப்பு
வினிகர் மற்றும் உப்பு நீர் ஆகியவற்றை சம அளவு எடுத்து ஒரு பாத்திரத்தில் கலந்து கொள்ளவும். உப்பு கரையும் வரை அந்த நீரை அடுப்பில் வைத்து சூடாக்கவும். வினிகர் நீர் கொதிக்கத் தொடங்கும் முன் அடுப்பில் இருந்து நீரை எடுத்து விடவும். ஒரு சுத்தமான துணியை இந்த வினிகர் உப்பு கலவையில் முக்கி எடுத்து அயர்னின் அடிப்பகுதியை சுத்தம் செய்யவும்.
சாதாரண நீர்
நீராவி அயர்னில் நீர் சேமிக்கும் இடத்தில் முழுவதும் நீர் நிரப்பி ஆன் செய்யவும். அந்த நீர் முற்றிலும் ஆவியாகும் வரை கொதிக்க விடவும். நீராவி துவாரத்தில் ஏதாவது அழுக்குகள் இருந்தால், இந்த முறையைப் பின்பற்றுவதால் அவை வெளியேறிவிடும்/ மேலும் உள்ள அழுக்குகளைப் போக்க, ஒரு காய்ந்த துணி கொண்டு அயர்னின் அடிப்பகுதியை சுத்தம் செய்யவும்.