ஃபேஷன்புதியவை

இதை ட்ரை பண்ணுங்க மிக பெரிய பிரச்னை பிரசவ கால தழும்புகள் மறைய Super tips

குழந்தை பெற்ற அனைத்து பெண்களும் சந்திக்கும் மிக பெரிய பிரச்னை பிரசவ கால தழும்புகள். ஒரு சிலருக்கு இது தானாக மறைந்து விடும். ஆனால் சிலருக்கு இது நிரந்தர தழும்பாக மாறி அசிங்கமாக தென்படும்.
அவர்களால் சில ஆடைகளை அணிய முடியாமல் அவதிப்படுவார்கள். இத்தகைய தலையாய பிரச்னையை, வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்தே சரி செய்ய எளிய குறிப்புகள்:

தேங்காய் எண்ணெய்:

தேங்காய் எண்ணெய் நமது முடிக்கும் சருமத்திற்கும் மிகவும் நல்லது.

இவை சருமத்திற்கு போதுமான ஈரப்பதத்தை கொடுத்து பிரசவ தழும்புகளை மறையச் செய்கிறது. கொஞ்சம் தேங்காய் எண்ணெய்யை எடுத்து தழும்புகள் உள்ள பகுதிகளில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். சருமம் தேங்காய் எண்ணெய்யை உறிஞ்சி கொண்டு அந்த தழும்புகளை குணப்படுத்தி விடும். இதை தினமும் மூன்று முறை செய்து வந்தால் தழும்புகள் இல்லாத வயிற்றை பெறலாம்.

விளக்கெண்ணெய் பேக்:

அந்த காலத்தில் இருந்தே கருவுற்ற பெண்கள் விளக்கெண்ணெய் தேய்த்து சுடுநீரில் குளித்து வர சொல்லி இருக்கின்றனர். இதற்கு காரணம் விளக்கெண்ணெய் சருமத்திற்கு போதுமான ஈரப்பதத்தை கொடுத்து பிரசவ தழும்புகள் இல்லாமல் செய்கிறது. மேலும் சுருக்கங்கள், சரும கோடுகள், சுகப் பிரசவம் போன்றவை ஏற்படவும் வழி வகுக்கிறது. கருவுற்ற காலத்தில் விளக்கெண்ணெய்யை சருமத்தில் தடவி அந்த பகுதியில் பேக் வைத்து சுடுநீர் ஒத்தடம் கொடுத்தோ அல்லது சூடான குளியல் மேற்கொண்டோ வந்தால் நல்ல பலன் கிடைக்கும். உங்களுக்கு விளக்கெண்ணெய் ரெம்ப அடர்த்தியாக தென்பட்டால் 2 டேபிள் ஸ்பூன் பாதாம் எண்ணெய் சேர்த்து கொள்ளுங்கள்.

முட்டை வெள்ளை கரு:

முட்டையில் உள்ள புரோட்டீன் சத்து சருமத்தை புதுப்பித்து, சுருக்கங்கள், சரும கோடுகள் தழும்புகள் இல்லாமல் செய்கிறது. முட்டையின் வெள்ளைக் கருவை வயிறு மற்றும் மார்பு பகுதியில் தினமும் தடவி வந்தால் தழும்புகள் மாயமாக மறைவதோடு வராமலும் தடுக்கும்.

சர்க்கரை ஸ்க்ரப்:

1 டேபிள் ஸ்பூன் சர்க்கரை மற்றும் சில துளிகள் லெமன் ஜூஸ், பாதாம் எண்ணெய் சேர்த்து பிரசவ தழும்புகள் உள்ள பகுதிகளில் தேய்க்க வேண்டும். சருமத்தை புதுப்பித்து தழும்புகளை மறையச் செய்து விடும்.

உடற்பயிற்சி:

கருவுற்ற காலத்தில் உடற்பயிற்சி செய்வது மிகவும் நல்லது. இப்படி உடற்பயிற்சி செய்வதன் மூலம் சரும நீட்சித்தன்மையை பழைய நிலைக்கு கொண்டு வந்து தழும்புகள் இல்லாமல் செய்யலாம். ஏனெனில் அந்த பகுதியில் இரத்த ஓட்டம் அதிகரித்து சருமம் புத்துயிர் பெறும். மேலும் கால்களில் ஏற்படும் வீக்கம், வெரிகோஸ் வீன் போன்ற பிரச்சினைகள் வராமல் செய்யலாம். எனவே உங்கள் பிரசவ காலத்திற்கு ஏற்ற உடற்பயிற்சியை மருத்துவரின் ஆலோசனை பேரில் செய்து வரலாம்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker