உறவுகள்எடிட்டர் சாய்ஸ்சமையல் குறிப்புகள்

சமையலில் உப்பு, காரம் அதிகமாகிவிட்டதா..? சமையலை ருசியாக்க இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க.!

சமையல் என்பது ஒரு கலை. பெண்கள் மட்டுமில்லை, இன்றைக்கு ஆண்களும் சமையலை நேர்த்தியுடன் கையாள்கின்றனர். பல ஆண்டுகளாக சமையலில் சிறந்து விளங்கினாலும் சில நேரங்களில், நம்மில் பலர் உப்பு, காரம் போன்றவற்றை அதிகமாக சேர்த்துவிடும் தவறை நிச்சயம் மேற்கொள்வோம். இப்படி நீங்களும் உங்களது சமையலில் தவறு செய்திருந்தால் இனி கவலை வேண்டாம். இதோ உங்களது சமையலை ருசியாக செய்ய வேண்டும் என்றால் இதோ இந்த டிப்ஸை நீங்கள் பின்பற்ற மறந்துவிடாதீர்கள். இதோ என்னென்ன? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம்.

உப்பு அதிகமாதல் : உப்பில்லா பண்டம் குப்பையிலே என்பார்கள். அதே சமயம் அதிக உப்பு இருந்தாலும் நம்முடைய சமையலில் ருசி இருக்காது. ஆம் நாம் ஒவ்வொருவரும் சமைக்கும் போது, நிச்சயம் குழம்பு, சூப்கள் போன்றவற்றில் உப்பை அதிகமாக சேர்த்திடுவோம். இந்நேரத்தில் நீங்கள் உப்பை குறைக்க வேண்டும் என்று நினைத்தால், நீங்கள் குழம்பில் ஒரு ஸ்பூன் பால் அல்லது தயிர் சேர்க்கலாம். அல்லது நீங்கள் ஒரு உருளைக்கிழங்கை உணவில் சேர்க்கலாம். உருளைக்கிழங்கில் இருக்கும் ஸ்டார்ச், அதிகப்படியான உப்பை உறிஞ்சி, உணவை நடுநிலையாக்க உதவுகிறது.

நீங்கள் ஹோட்டல்கள் மற்றும் ரெஸ்டாரன்ட்களில் இருக்கும் சப்பாத்தி மற்றும் பரோட்டா போன்று வீட்டில் செய்வதற்கு முயற்சி செய்வீர்கள். ஆனால் நமக்கு நிச்சயம் வராது. எனவே நீங்கள் மாவை பிசையும் போது ஒரு தேக்கரண்டி எண்ணெய் அல்லது பால் சேர்க்கும் போது சப்பாத்தி மென்மையாகவும், ருசியாகவும் இருக்கும்.

அதேசமயம் பூரி புஸ்சுன்னு குண்டாக வர வேண்டும் என்றால் நீங்கள் பிசைந்த மாவை குளிர்சாதன பெட்டியில் வைக்கவும். பின்னர் சமைப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்னதாக எடுத்து செய்யும் போது பூரி நன்றாக வரக்கூடும்.

அடுத்து நாம் சமையலில் செய்யக்கூடிய பெரிய தவறு என்றால் உணவில் காரத்தை அதிகமாக சேர்ப்பது தான். நம்மை அறியாமலே சில நேரங்களில் மிளகாய் பொடியை அதிகமாக சேர்த்துவிடுவோம். சமைந்த உணவை வாயில் வைக்க முடியாத அளவிற்கு காரம் இருக்கும் போது நிச்சயம் சாப்பிடாமல் தூக்கி தான் எறிவோம் . இனி இந்த நிலை உங்களுக்கு வேண்டாம். குழம்பில் அதிக காரமாகிவிட்டால், நீங்கள் அதில் பால் சேர்த்துக்கொள்ளலாம். பாலில் உள்ள கேப்சீன் சத்துக்கள் காரத்தன்மையைக் குறைக்க உதவியாக இருக்கும்.

நாம் சமைக்கும் போது அடுத்த பெரிய பிரச்சனைகளில் ஒன்று வெங்காயத்தை வெட்டுதல். என்ன தான் மெதுவாக நறுக்கினாலும் வெங்காயத்தை வெட்டும் போது கண்களில் இருந்து கண்ணீர் வரக்கூடும். எனவே நீங்கள் கண்ணீர் வராமல் வெங்காயத்தை வெட்ட வேண்டும் என்றால், வெங்காயத்தை வெட்டத் தொடங்குவதற்கு முன், வெங்காயத்தை அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். அல்லது வெங்காயத்தை வெட்டுவதற்கு 10-15 நிமிடங்களுக்கு முன் உறைய வைக்கலாம். இதன் மூலம் இது அமில நொதிகளை காற்றில் வெளியிடுவதைக் குறைத்து கண்ணீர் வருவதைத் தடுக்கிறது.அவற்றை மிக எளிதாக வெட்டுவதற்கு உதவுகிறது.

இதுப்போன்ற எளிய சமையல் குறிப்புகளைப் பயன்படுத்தி இனி எந்த தவறு வந்தாலும் சரி செய்து அனைவருக்கும் ருசியான சமையலை செய்துக்கொடுங்கள்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker