ஆரோக்கியம்மருத்துவம்

ஆஸ்துமாவின் அறிகுறிகள் என்ன தெரியுமா?

ஆஸ்துமாவின் அறிகுறிகள் என சிலவற்றை மருத்துவர்கள் வரையறை செய்து செய்திருக்கிறார்கள். அவையாவை யெனில், முதலில் மூச்சுத் திணறல். இதன் போது மூச்சை உள்ளிழுப்பதிலும், மூச்சை வெளியே விடுவதிலும் இயல்பான தன்மை மாறி சிரமங்கள் இருக்கும். சிலருக்கு மூச்சை உள்ளிழுக்கும் போதும் அல்லது வெளியே விடும் போதும் விநோமான ஓசை எழும்.

இவர்களுக்கு நுரையீரல் முழுவதும் சளி பரவியிருப்பதால், மூச்சை உள்ளிழுக்கும் போது நெஞ்சகத்தில் வலி ஏற்படலாம் அல்லது வலி ஏற்படுவது போன்ற உணர்வு உருவாகக் கூடும். இதன்போது சிலருக்கு இரும வேண்டும் என்ற உணர்வு தோன்றும். ஆனால் இருமினால் நெஞ்சில் வலி ஏற்படக்கூடும். இதனை சிலர் தவறுதலாக நெஞ்சுவலி என்று நினைக்கக் கூடும்.



ஆனால் அவை ஆஸ்துமாவின் அறிகுறியாக புரிந்து கொள்ள வேண்டும். சிலருக்கு இந்நிலையில் இருமல் அதிகமாகும். அப்போது தொண்டையில் புண் அல்லது இடையூறு ஏற்படக்கூடும்.

அதே தருணத்தில் இருமலுடன் சளி வெளியேறும் போது, அதில் இரத்தமும் கலந்து வெளியேறக் கூடும். தொண்டையில் உள்ள புண்களில் பாதிப்பு ஏற்படுவதால் இரத்தக் கசிவு உண்டாகிறது. சிலருக்கு இதன்போது அசிடிட்டி பாதிப்பும் வரக் கூடும். சிலருக்கு நெஞ்செரிச்சல் ஏற்படக்கூடும். சிலருக்கு இந்த தருணத்தில் அஜீரண கோளாறும் உண்டாகி, மலச்சிக்கல் உருவாகும்.

இதன் போது மருத்துவர்கள், மலச்சிக்கலுக்கு நிவாரணமளித்து, அதனை குணப்படுத்துவதில் மூலம் வீசிங்கைக் கட்டுப்படுத்துவார்கள். இது போன்ற தருணங்களில் இவர்களுக்கு உணவின் காரணமாகவும் ஒவ்வாமை ஏற்பட்டு, மூக்கில் நீர் வடிதல், தும்மல் போன்றவை ஏற்படக்கூடும். இதன் போது முதலில் சைனசைட்டிஸாக உருவாகி, ஒரு வாரம் கழித்து ஆஸ்துமாவாக மாறக் கூடும்.

இதன் போது மருத்துவர்கள் ஸ்பிரே பயன்படுத்தி நிவாரணமளிப்பார்கள். இத்தகைய நிவாரணத்தை தற்காலிக மாகத் தான் மேற்கொள்ள வேண்டும். இதனை மருத்துவர்களின் எச்சரிக்கையை மீறி பயன்படுத்தினால், நுரையீரலின் சுருங்கி விரியும் தன்மை பெரிய அளவில் பாதிக்கப்படும்.



சிலருக்கு அரிதாக வைட்டமின் டி பற்றாக்குறையின் காரணமாகவும் ஆஸ்துமா பிரச்சனை வரக்கூடும். அதே போல் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் வெளியேற்றும் சளியை பரிசோதனை செய்து, பாதிப்பின் வீரியத்தை மருத்துவர்கள் அறிந்து கொள்வார்கள்.

இதனையடுத்து மருத்துவர்கள் பரிந்துரைக்கும் சிகிச்சையை மேற்கொண்டு சளியை முழுமையாக நுரையீரல் பகுதியில் இருந்து அகற்றி விடலாம்.



Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker