ஆரோக்கியம்புதியவை

கவனச்சிதறல் அதிகம் ஏற்படுதா? அது நரம்பு கோளாறாகவும் இருக்கலாம்.. எச்சரிக்கை

பெரும்பாலும் மூளையையும், மனதையும் ஒருமுகப்படுத்தி கவனத்துடன் இருப்பதில் எல்லோருக்குமே பிரச்சினைகள் உள்ளன. குறிப்பாக மாணவர்கள் படிக்கும் போது தங்களை ஒருமுகப்படுத்த அதிகம் சிரமப்படுகின்றனர். அதே நேரத்தில் பெரியவர்கள் தங்கள் வேலைகளில் ஒருமுகப்படுத்த முடியாமல் தவிக்கின்றனர். எனவே எல்லோருமே தங்களை ஒருமுகப்படுத்த முடியாமல், தங்கள் அன்றாட வாழ்க்கையில் கவனத்தைச் சிதறவிடுகின்றனர்.

மகிழ்ச்சி அல்லது துக்கம் மிகுந்த நேரங்களில் நம்மை ஒருமுகப்படுத்த முடியாமல், கவனம் சிதறி நம்மையே மறந்து இருப்பது என்பது இயல்பான ஒன்று. ஆனால் தொடர்ந்து மூளையை ஒருமுகப்படுத்த முடியாது அடிக்கடி கவனச் சிதறல் ஏற்பட்டால், அதை உடனே கண்டிறிந்து, அந்தப் பிரச்சினையை நிவர்த்தி செய்ய வேண்டியது கட்டாயமான ஒன்று.

ஆனால் பெரும்பாலானோர் இந்தக் கவனச் சிதறல் பிரச்சனையை ஒரு முக்கியமான பிரச்சினையாகக் கருதுவதில்லை. கவனச் சிதறல் அடிக்கடி ஏற்படுகிறது என்றால் அதன் பின்னனியில் நரம்பியல் கோளாறு கூட இருக்கலாம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எனவே இந்தக் கட்டுரையில் நரம்பியல் கோளாறுக்கான அறிகுறிகள் மற்றும் அதற்கான சிகிச்சைகளைப் பற்றி பார்க்கலாம்.

நரம்பியல் கோளாறு என்றால் என்ன?

பொதுவாக நரம்பியல் கோளாறு மூளையைத் தாக்கி, மூளை செய்யும் கடின வேலைகளில் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. குறிப்பாக கேட்டல், பார்த்தல், புரிதல் மற்றும் ஒருமுகப்படுத்துதல் போன்ற வேலைகளை அதிகமாகப் பாதிக்கிறது. அதே நேரத்தில் முதுகுத் தண்டுவடத்திலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. கவனிக்கும் திறன் குறைவு மற்றும் ஒருமுகப்படுத்த முடியாமை போன்றவை எல்லாம் நரம்பியில் கோளாறின் அறிகுறிகளே.

நரம்பியல் கோளாறுகளின் காரணங்கள்

கவனச் சிதறலுக்குப் பின்னனியில் இருப்பது நரம்பியல் கோளாறு ஆகும். ஊட்டச்சத்து குறைவு, பாரம்பரிய காரணி, பிறக்கும் போதே ஏற்படும் குறைபாடு, சுற்றுப்புறச்சூழல், மரபணுக்கள் மற்றும் வெளியிலிருந்து வரும் புறக் காரணிகள் போன்றவை நரம்பியில் கோளாறுக்கு காரணங்களாக இருக்கலாம். மேலும் பல காரணிகள் இந்த நரம்பியல் கோளாறுக்கு காரணங்களாக இருக்கலாம். ஆனால் நரம்பியல் கோளாறு கவனச் சிதறலுக்கு காரணமாக இருக்கிறது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரு சிலருக்கு இந்த நரம்பியல் கோளாறு நடப்பது, பேசுவது மற்றும் பார்ப்பது போன்ற உடல் சார்ந்த இயக்கத்திலும் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.

கவனச் சிதறலுக்கான காரணங்கள்

* நமது அன்றாட வாழ்க்கையே ஒருமுகப்படுத்தப்பட்ட கவனம் என்பதில் தான் அடங்கி இருக்கிறது. நமது அலுவலகமாக இருக்கலாம் அல்லது பள்ளியாக இருக்கலாம். கவனச் சிதறல் ஏற்பட்டுக் கொண்டிருந்தால் நாம் அங்கு திறம்பட செயல்பட முடியாது. மேலும் முடிவெடுப்பதிலும் இந்த கவனச் சிதறல் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

* கவனச் சிதறல் பிரச்சினை அதிகமாகிவிட்டால் அதற்கு முக்கிய காரணம் நமது உளவியல் பிரச்சினையாகத் தான் இருக்கும். இதைத் தான் நரம்பியில் கோளாறு என்கிறோம்.

* சில சமயம் இந்த நரம்பியல் கோளாறு நமது உடலில் இருக்கும் மரபணுக்களில் ஏற்படும் மாற்றங்களால் ஏற்படக்கூடியதாக இருக்கும். குறிப்பாக கருவுற்றிற்கும் பெண்களின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் அவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் ஆகியவற்றை இதற்கு சான்றாக எடுத்துக் கொள்ளலாம்.

பிற காரணங்கள்…

* நரம்பியல் கோளாறு சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் என்று அனைவரையும் பாதிக்கிறது. ஆகவே சரியான நேரத்தில் நரம்பியல் கோளாறை கவனிக்கவில்லை என்றால் அது ஆபத்தை ஏற்படுத்தும்.

* நரம்பியல் கோளாறு இருப்பதால் பலர் ஒருமுகப்படுத்தி கவனத்தைச் செலுத்துவதில் தோல்வியைச் சந்திக்கின்றனர். அதனால் அவர்கள் பல பிரச்சினைகளில் சிக்கிக் கொள்கின்றனர்.

* நரம்பியில் கோளாறு காரணமாக மக்கள் ஒரு சில சமயங்களில் மிக எளிதாக உணர்ச்சிவசப்பட்டு விடுகின்றனர் அல்லது உளவியல் ரீதியாக விரக்தியடைந்து விடுகின்றனர்.

கவனச் சிதறலை விரட்டும் பயற்சிகள்

ஒருவருக்கு மூளையையும், மனதையும் ஒருமுகப்படுத்துவதில் பிரச்சினை இருக்கிறது என்றால் அவரிடம் உள்ள சிந்தனை செய்யும் திறனும், இயங்கும் திறனும் வெகுவாக குறைந்திருக்கிறது என்று பொருள். கவனச் சிதறல் என்ற நரம்பியல் பிரச்சினையை குணப்படுத்த ஏராளமான சிகிச்சை முறைகள் உள்ளன. இந்த நரம்பியல் பிரச்சினை இருப்பதாகத் தெரிந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். மருத்துவரின் சிகிச்சைக்கு முழுமையைாக ஒத்துழைக்க வேண்டும். அதே நேரத்தில் கவனச் சிதறல் ஏற்படாமல் இருக்க பின்வரும் எளிய வழிகளையும் பின்பற்றலாம்.

குறிப்பாக ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்வதைத் தவிர்க்க வேண்டும். படிப்பாக இருக்கலாம் அல்லது வேலையாக இருக்கலாம் ஆனால் ஒரு நேரத்தில் ஒரு வேலையில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். இரண்டாவதாக நமது வேலைகளை சிறிய சிறிய பகுதிகளாக பிரித்து வைத்துக் கொண்டு அவற்றை கொஞ்சம் கொஞ்சமாக செய்யும் போது கவனம் சிதறாமல் இருக்கும். மூன்றாவதாக ஒருமுகப்படுத்தக் கூடிய தியான பயிற்சிகளைச் செய்து வந்தாலும் கவனச் சிதறல் ஏற்படாமல் தடுக்கலாம்.

இறுதியாக கவனச் சிதறல் மிகப் பெரிய பிரச்சினையாக இருந்தால் உடனே மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த மருந்தாக இருக்கும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker