ஆரோக்கியம்புதியவை

வயதானவர்களுக்கு ருத்ர முத்திரை ஒரு வரம்

கட்டை விரல், ஆள்காட்டி விரல், மோதிர விரல்களின் நுனியைச் சேர்த்துவைக்க வேண்டும். நடுவிரலும் சுண்டுவிரலும் நீட்டி இருக்க வேண்டும். நாற்காலியில் நிமிர்ந்து உட்கார்ந்து, கால்களைத் தரையில் பதித்தோ, விரிப்பின் மீது சப்பளங்கால் போட்டு நிமிர்ந்த நிலையில் அமர்ந்தோ, 10 முதல் 40 நிமிடங்கள் வரை செய்யலாம்.

சோர்வு, களைப்பு, தலைசுற்றல் உணர்வு, வயோதிகத்தில் ஏற்படும் கிறக்கம் ஆகியவற்றைச் சரிசெய்யும். உடலுக்கு ஆற்றலைத் தரும்.

தலைக்கு ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும். நினைவாற்றல், கவனம் அதிகரிக்கும். மாணவர்களை அவசியம் செய்யச் சொல்லலாம்.

பார்வைத்திறனைக் கூர்மைப்படுத்தும். ரத்த அழுத்தப் பிரச்னை, சுவாசப் பிரச்னைகளைச் சீர்செய்யும்.

உடலில் உள்ள ஏழு சக்கரங்களில் ஒன்றான, மணிப்பூரகச் சக்கரத்தைத் தூண்டுகிறது. இதனால், உடலில் ஏற்பட்ட சமநிலையின்மை குணமாகும். சிலர், ஒரு பக்கமாக சாய்ந்து நடப்பர், வலது பக்கம் மட்டும் நன்றாகக் கை வரும், இடது பக்கம் வராது. இதுபோன்ற சமநிலைத் தன்மை இல்லாதவர்களுக்கு, இந்த முத்திரை நல்ல பலனைத் தரும்.

மன அழுத்தத்தால் ஏற்படும் இறுக்கம், கழுத்து, முதுகு, இடுப்பு மற்றும் மார்பக வலி ஆகியவற்றை இந்த முத்திரை குறைக்கும்.

ரத்த நாளங்களில் உள்ள அடைப்புகள், கட்டிகள் ஆகியவற்றைச் சரிசெய்யும்.

காலில் உள்ள ரத்த நாளங்கள் சுருண்டுகொள்ளும் வெரிகோஸ் வெயின் பிரச்னைக்கான வாய்ப்பைக் குறைக்கும். ஆண்களுக்கு விதைப்பையிலும், விரையிலும் உள்ள வெரிகோஸிட்டி பிரச்னை சரியாகும்.

வயோதிகத்தில் ஏற்படும் நினைவாற்றல் பாதிப்பு நோய்களான நடுக்குவாதம் (Parkinson), அல்சைமர் பாதிப்பு உள்ளவர்கள் மூன்று மாதங்கள் தொடர்ந்து செய்துவர முன்னேற்றம் காணலாம்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker