அழகு..அழகு..புதியவை

சூப்பர் டிப்ஸ் தினமும் இப்படி செய்தால் நிச்சயம் உங்கள் உடலில் மாற்றத்தை எதிர் பார்க்கலாம்

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சுடுநீர் குடிப்பது என்பது ஆரோக்கியமான செரிமான மண்டலத்திற்கு வழிவகுக்கும். இருப்பினும், அத்துடன் வெல்லம் சேர்த்து கொண்டால், இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும். அதிலும், காலையில் எழுந்து பற்களைத் துலக்கும் முன் வெல்லம் சாப்பிட்டு சுடுநீர் குடிப்பதால் உடலில் நிகழும் மாயங்கள் குறித்து தெரியுமா?

ஆயுர்வேதத்தின் படி, வெல்லம் சாப்பிட்டு சுடுநீர் குடிப்பதால் பல்வேறு நோய்கள் குணமாக உதவுவதோடு, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, உடலை சிறப்பாக இயங்க செய்யும். மேலும் இச்செயல் உடலுக்கு வலிமையை வழங்குவதோடு, ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாக கருதப்படுகிறது.நீங்களும் உங்கள் உடலை ஆரோக்கியமாகவும், வலிமையுடனும் வைத்துக் கொள்ள நினைத்தால், காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் 2 துண்டு வெல்லம் சாப்பிட்டு ஒரு டம்ளர் சுடுநீரைக் குடியுங்கள். இப்போது இச்செயலால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று காண்போம்.

வெல்லம் சர்க்கரைக்கு சிறந்த மாற்றுப் பொருள். இதில் பொட்டாசியம், மக்னீசியம், வைட்டமின் பி1, பி6 மற்றும் வைட்டமின் சி போன்ற அதிகப்படியான கலோரிகளை எரிக்க உதவும் பொருட்கள் அதிகம் நிறைந்துள்ளன. ஒரு கிராம் சர்க்கரையில் வெல்லத்தை விட அதிகளவு கலோரிகள் நிறைந்துள்ளது. ஆகவே இந்த அற்புதமான வெல்லத்தை அன்றாடம் குடிக்கும் காபி, டீக்களில் சேர்ப்பதோடு, இனிப்புக்கள் தயாரிக்கும் போது சர்க்கரைக்கு மாறாக வெல்லத்தைப் பயன்படுத்துங்கள். இதனால் உடல் ஆரோக்கியம் மேம்படுவது மட்டுமின்றி, இனிப்புக்களின் சுவையும் வித்தியாசமாக இருக்கும். முக்கியமாக உடல் எடை குறையும்.

வயிற்றுப் பிரச்சனைகளான வாய்வுத் தொல்லை மற்றும் மலச்சிக்கல் போன்றவற்றால் அவஸ்தைப்படுபவர்கள், 2 துண்டு வெல்லத்தை சாப்பிட்டு 1 டம்ளர் சுடுநீரை இரவு தூங்கும் முன் குடித்தால், உடனடி நிவாரணம் கிடைக்கும். இச்செயலால், உடலின் செரிமான செயல்பாடுகள் வேகப்படுத்தப்பட்டு, தினமும் காலையில் தவறாமல் மலம் கழிக்க முடியும். மேலும், உணவு உட்கொண்ட பின் ஒரு துண்டு வெல்லம் சாப்பிட்டால், செரிமான நொதிகளின் அளவு அதிகரித்து, செரிமானம் சீராக நடைபெறும். வெல்லம் மன இறுக்கத்தை எதிர்க்கும் பொருளாக செயல்படும். இரவு தூங்கும் முன் வெல்லத்தை சாப்பிட்டு ஒரு டம்ளர் சுடுநீரைக் குடித்தால், உடலில் சந்தோஷமான ஹார்மோன்கள் மேம்படுத்தப்படும். பொதுவாக மன அழுத்தத்துடன் இருந்தால், இரவு நேரத்தில் தூக்கமே வராது.

பல நூற்றாண்டுகளாக, வெல்லம் தூக்கமின்மையை சரிசெய்ய பயன்படுத்தப்பட்டு வருகிறது.வெல்லத்தில் இனிப்பு குறைவு மற்றும் சர்க்கரை குறைவு என்பதால் சர்க்கரைக்கு சிறந்த மாற்றுப் பொருள். சர்க்கரைக்கு பதிலாக வெல்லத்தை சாப்பிட்டால், பற்கள் மற்றும் ஈறுகள் ஆரோக்கியமாக இருக்கும்.

அதிலும், வெல்லத்துடன் சிறிது ஏலக்காய் சேர்த்து சாப்பிட்டால், வாயில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களைக் குறைக்கும். வாயில் பாக்டீரியாக்கள் அதிகம் இருந்தால் தான், வாய் துர்நாற்றம் வீசும். வாய் துர்நாற்ற பிரச்சனை உள்ளவர்கள், அப்பிரச்சனையை நினைத்தே பெரிதும் வருத்தம் கொள்வர். ஆனால் வெல்லம் இதற்கு நல்ல தீர்வை வழங்கும்.மேலும், வெல்லம் வாயில் நோய்களின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும்.உங்களுக்கு முகத்தில் பருக்கள் மற்றும் சரும நிற மாற்றம் போன்ற பிரச்சனைகளை சந்தித்தால், காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சிறிது வெல்லம் சாப்பிட்டு சுடுநீர் குடியுங்கள். இப்படி சில நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால், ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம். மேலும் இது ஒரு நல்ல கிளின்சராக செயல்படும் மற்றும் நீண்ட காலமாக சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.

முக்கியமாக வெல்லம் சாப்பிட்டு, சுடுநீர் குடித்தால், முதுமை செயல்பாட்டை தாமதமாக்கும்.சிறுநீரக கல் உள்ளவர்களின் வாழ்க்கை நரகமாக இருக்கும். ஆனால் அத்தகையவர்கள் வெல்லம் சாப்பிட்டு சுடுநீரைக் குடித்தால், உடலில் மாயங்கள் நிகழ்வதைக் காணலாம். குறிப்பாக இச்செயல் சிறுநீரக கற்களை உடைத்தெறிய உதவும். கற்கள் அளவில் மிகவும் சிறியதானால், எளிதில் சிறுநீரின் வழியே வெளியே வந்துவிடும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker