ஃபேஷன்புதியவை

ட்ரெண்டிற்கு ஏற்ற சில அழகிய ஸ்லிங் பேக்குகள்

ஸ்கார்ஃப் பக்கெட் பை
பக்கெட் பைகள் இப்போது சமீபகாலமாக ட்ரெண்டில் இருக்கிறது. இதில் ஒரு பரந்த ஒற்றை திறப்பை கொண்டுள்ளதால் அதில் உங்களின் அனைத்து முக்கியமான பொருட்களையும் எளிதில் வைத்துக் கொள்ளலாம். இந்த அழகிய சிறிய போஹோ ஸ்டைல் பக்கெட் பேக் மற்றும் அதில் இருக்கும் ஸ்கார்ஃப் உங்கள் பாணியை முன்வைக்கும். இதை நீங்கள் ஒரு ஜீன்ஸ் பேண்ட் மற்றும் கிராப் டாப் உடன் எடுத்துச் செல்லலாம்.

வர்ணம் பூசிய ஸ்லிங் பை
உங்கள் பையில் ஏதேனும் பாரம்பரிய தொடர்பை விரும்புகிறீர்கள் என்றால் இந்த மதுபானி ஸ்லிங் பேகை தேர்ந்தெடுங்கள். இதில் இருக்கும் வண்ணமயமான இந்திய நாட்டுப்புற ஓவியம் உங்களின் சாதாரணமான உடையும் ஸ்டைலாகவும் அழகாகவும் காட்ட உள்ளது. மேலும் இதில் வரும் ஒற்றய கம்பார்ட்மெண்ட் பகுதி உங்கள் பொருட்களை வைக்க வசதியாக இருக்கும். – இந்தப் பை ஒரு அடர் நீலம் / கருப்பு ஜம்ப் சூட் அல்லது டிரஸ் உடன் பொருந்தும்.

கேமரா ஸ்லிங் பை
கேமராவின் வடிவத்தில் இருக்கும் இந்த பை மற்ற ஸ்லிங் பைகளை பார்க்கையில் தனித்துவம் கொண்டது. கேமரா பிரியர்களுக்கு ஏற்ற இந்த பை ஒரு நவீன பெண்மணிக்கான நவீன தோற்றத்தை நிச்சயம் அளிக்க உள்ளது. ஜீன்ஸ், டி-ஷர்ட் மற்றும் ஒரு ஜாக்கெட் அணிந்து இதை ஸ்டைல் செய்யுங்கள்.

ஸ்டர்க்செர் பை
வழக்கமான வடிவங்களை மறந்து இந்த ஆறுகோண வடிவம் கொண்ட லெதர் ஸ்லிங் பையுக்கு மாறுங்கள் . இதில் இருக்கும் ஒற்றை கம்பார்ட்மெண்ட் பகுதி மற்றும் உள்ளிருக்கும் ஒரு ஜிப் உங்கள் பொருட்களை வைக்க சரியானதாக அமையும். மேலும் இது உங்களுக்கு ஒரு கூல் லுக்கை அளிக்க உள்ளது. இதற்கு முரணான நிறத்தில் குர்தா – ஜெஃகிங்ஸ் அணிந்து இதே ரஸ்ட் ஆரஞ்சு நிறத்தில் பிளாட்ஸ் அணிந்து இதை மேட்ச் செய்யலாம்.

அன்னாசிப்பழ ஸ்லிங் பை
நீங்கள் தனித்துவமான பைகளை தேடிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் இதுபோன்ற நவநாகரீக பை கட்டாயமாக உங்கள் கலெக்சனில் இருக்க வேண்டிய ஒன்றாகும். வழக்கத்திற்கும் முரணாக விரும்புவோர்களுக்கு இந்தப் பை மிகவும் பொருந்தும். இந்த அழகிய போஹோ ஸ்டைல் அன்னாசிப்பழ வடிவத்தில் இருக்கும் பை உங்கள் பாணியை மேம்படுத்தும் ஒரு பையாக அமையும். இதை ஏதேனும் ஒரு அடர் நிற டிரஸ் உடன் அணிந்து செல்லலாம்.

ஹார்ட் ஸ்லிங் பேக்
இதய வடிவிலான இந்த பை உங்கள் இதயத்தை நிச்சயம் வென்றுவிடும். மேலே குறிப்பிட்டுள்ள எந்த ஒரு பாணியிலும் நீங்கள் ஈர்க்கப்படவில்லை என்றால் நவநாகரீகமான தோற்றத்தை கொண்ட இந்த பையை வாங்குங்கள். உங்கள் அன்பர்தவருடன் டேட்டிற்கு எடுத்துச்செல்ல மிகவும் ஏற்ற ஒன்றாகும்.

கேர்ள் பாஸ் பை
உங்கள் பையில் வெறும் ஸ்டைல் மட்டும் இல்லாமல் சில நல்ல உந்துதல் மேற்கோளை நீங்கள் விரும்பினால், இது அனைத்தும் இந்த கேர்ள் பாஸ் பையில் உள்ளது. அடர் பச்சை நிறத்தில் ஒரு அழகிய வரியுடன் இந்த பை உங்களை மட்டுமில்லாமல் சுற்றியுள்ள மற்றவர்களையும் கவர்ந்து இழுக்கும் என்பது உறுதி.

பக்கெட் பேக்
இதுவரை பார்த்ததை விட சிறிது பெரிதாக விரும்பினால், இந்த பையை தேர்ந்தெடுங்கள். பக்கெட் வடிவத்தில் இருக்கும் இந்த பை கல்லூரி அல்லது ஷாப்பிங்கிற்கு ஏற்ற ஒன்றாகும். இதன் உள்ளிருக்கும் சிந்தெடிக் துணி மற்றும் வெளிப்புற வெளிப்படையான அடுக்கு இதை ட்ரெண்டியாக காட்டுகிறது. இதை பலாஸோ பேண்ட் மற்றும் குர்தி அல்லது ஷர்ட் உடன் மேட்ச் செயுங்கள்.
நியான் பேக்
நியோன் வண்ணங்கள் ட்ரெண்டில் வந்துள்ள நிலையில் பழைய வடிவங்களுடன் மந்தமான வண்ணங்களை கொண்ட பைகளை ஒதுக்கிவிட்டு இது போன்ற விலங்குகளின் அச்சிடப்பட்ட பிரகாசமான நியான் லைம் வண்ணத்திற்கு மாறுங்கள்! இது உங்கள் தோற்றத்திற்கு ஒரு புது பொலிவை அளிக்க உள்ளது. இது ஏதேனும் ஒரு அடர் அல்லது கருப்பு நிற குர்தி/ ஷர்ட் உடன் அட்டகாசமாக பொருந்தும்.

10. பூனை ஸ்லிங் பேக்
மியா மியா பூனை குட்டி என்று பூனையுடன் நட்பாக இருப்பவர்களுக்கு ஏற்றவையாகும். பூனைகளின் மீது உங்களின் அன்பை காட்ட இந்த பேக் உடன் வெளியேறுங்கள்! விரைவான காபி டேட்டிற்கு இது சரியான பை ஆகும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker