புதியவைமருத்துவம்
‘டீன் ஏஜ்’ பெண்களுக்கு முகப்பரு வரக்காரணம்
‘டீன் ஏஜ்’க்குள் பெண்கள் அடியெடுத்து வைக்கும்போது, அவர்களுக்கு முகப்பரு ஏற்படுவதுண்டு. இது ‘டீன் ஏஜின்’ அடையாளமாக கணிக்கப்படுகிறது. அவர்களது உடலில் உள்ள ‘ஆன்ட்ரோஜன்’ ஹார்மோன்கள் ‘செபேஷியஸ்’ சுரப்பிகளை தூண்டி பெரிதாக்கும். அப்போது அவைகளில் இருந்து ‘செபம்’ என்ற எண்ணெய் தன்மை கொண்ட பொருள் உற்பத்தியாகிறது.
அதுதான் முகப்பரு தோன்ற காரணம். முகப்பருவை கிள்ளிவிட்டுவிடக்கூடாது. ‘டவல்’ பயன்படுத்தி அழுத்தி துடைக்கவும் கூடாது. வீரியம் அதிகமுள்ள சோப்புகளை பயன்படுத்தி முகத்தை சுத்தம் செய்வதையும் தவிர்க்க வேண்டும்.
‘பேஸ்வாஷ்’ பயன்படுத்தி இளம் சுடுநீரால் முகத்தை கழுவினாலே போதும். குறிப்பிட்ட பருவத்தை கடந்ததும் முகப்பரு மறைந்துவிடும். அப்படி மறையாமல் இருந்தால் மட்டும் சருமநோய் நிபுணரிடம் ஆலோசனை பெறவேண்டும்.