கிளாசிக் அலைபாயும் கூந்தல்
மிருதுவான மற்றும் மின்னும் அலையலையான கூந்தல், நம்மை பழைய ஹாலிவுட் காலத்திற்கு அழைத்துச் செல்கிறது. பீச் அல்லது டிஸ்கோ அல்லது ஒரு ஃபார்மல் நிகழ்ச்சி என்று இந்த லுக் எங்கு வேண்டுமானாலும் கச்சிதமாகப் பொருந்தும். கல்கியின் இந்த அழகிய ஸ்டைலை எப்படி பெறுவது என்று சொல்கிறோம்.
கூந்தலை முதலில் வால்யுமைஸிங் ஷாம்பூ மற்றும் கண்டிஷனர் கொண்டு சுத்தம் செய்யவும். உங்கள் ஈரமான கூந்தலின் வேர் பகுதியில் வால்யுமைஸிங் மூஸை தடவவும். ரவுண்ட் பிரஷ் உதவியால் உங்கள் கூந்தலை புளோ டிரை செய்யவும். ஹீட் புரொடெக்டிங் ஸ்பிரேவை கூந்தலில் பயன்படுத்தவும். கூந்தலை இரண்டு இன்ச் அளவு உள்ள பகுதிகளாகப் பிரித்துக் கொள்ளவும். ஒவ்வொரு பகுதியையும் கர்லிங் அயர்ன் கொண்டு அழகிய அலைகளை உருவாக்கவும். முழுமையாக முடிந்தவுடன் பேடில் பிரஷ்ஷைக் கொண்டு வாரிவிடவும். கொஞ்சம் நேச்சுரல் லுக்கைப் பெற உங்கள் விரல்களைப் பயன்படுத்தி அலைகளை கலைத்து விடவும். ஹோல்டிங் ஸ்பிரேவைக் கொண்டு முடிக்கவும்.