ஆரோக்கியம்புதியவை

காலையில் தவிர்க்க வேண்டிய உணவுகள்!

காலையில் எழுந்தவுடன் சிலவகை உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அவை செரிமானத்துக்கு பங்கம் ஏற்படுத்திவிடும். அதனால் இரைப்பை பாதிப்புக்குள்ளாகும். குறிப்பாக,
வெறும் வயிற்றில் பழச்சாறு பருகுவது நல்லதல்ல. அது வயிற்றுக்கு சுமையை ஏற்படுத்திவிடும். பழங்களில் பிரக்டோஸ் வடிவத்தில் இருக்கும் சர்க்கரை கல்லீரலுக்கும் கெடுதல் விளைவிக்கும். அதுபோல் இனிப்பு, கார பலகாரங்களை சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும்.

Trendylife
குளிர்பானங்கள் பருகுவதும் நல்லதல்ல
அதிலிருக்கும் அமிலங்கள் வயிற்றில் இருக்கும் அமிலங்களுடன் சேர்ந்து குமட்டல், வாயு தொல்லை போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். செரிமானத்தை தாமதப்படுத்தும். காலையில் ஐஸ் காபி பருகுவதையும் தவிர்க்க வேண்டும். அது சுறுசுறுப்பை தொலைத்து மந்தமான உணர்வை ஏற்படுத்தி விடும். சிட்ரஸ் பழ வகைகளையும் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. அவை செரிமானத்தை தாமதப்படுத்தும்.கொய்யா, ஆரஞ்சு பழங்களை காலையில் சாப்பிடவே கூடாது. நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளும் வயிற்றுக்கு தீங்கு இழைக்கும். அவைகளை வெறும் வயிற்றில் சாப்பிடும்போது வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலி ஏற்படலாம்.

காபி
தூங்கி எழுந்ததும் காபி பருகுவதையும் தவிர்க்க வேண்டும். வெறும் வயிற்றில் பருகும்போது இரைப்பை அழற்சி ஏற்படும். செரிமான கோளாறும் தோன்றக்கூடும். இரவு வெகுநேரம் உணவு உண்ணாமல் உறங்குவதால், ஏற்கனவே வயிற்றில் அமிலம் அதிகமாக சுரந்திருக்கும். அப்போது, காபி/டீ பருகினால், இரைப்பையில் அலர்ஜி உண்டாகும். செரிமானம் பாதிக்கப்படும். வயிறு பொருமல் ஏற்படும். காபி நல்லதுதான். ஆனால் ஏதாவது நன்றாக உணவு சாப்பிட்டுவிட்டுப் பின்னர், காபி குடிக்கலாம்.

தக்காளி மற்றும் புளிப்பு பழங்கள்
தக்காளியில் டேனிக் அமிலம் இருப்பதால், வயிற்றில் அமிலத்தை மேலும் அதிகரிக்கும் என்பதால், காலையில் வெறும் வயிற்றில் தக்காளி சாஸ், தக்காளி ஜூஸ் போன்றவற்றை தவிர்க்கலாம். புளிப்பான பழங்களில் அமிலத்தன்மை அதிகம் இருக்கும். அவை இரைப்பையில், அதிக அமிலத்தன்மையை ஏற்படுத்தி நெஞ்செரிச்சல், அல்சர் வர காரணமாகும்.
தயிர்
இரைப்பையில் சுரந்துள்ள ஹைட்ரோகிளோரிக் அமிலம், தயிரின் லாக்டிக் பாக்டீரியாக்களை கொன்றுவிடும். அதனால், காலையில் தயிர் சாப்பிடுவதால் உடலுக்கு எந்த சக்தியும் கிடைக்காது.

Trendylife

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker