ஃபேஷன்புதியவை

ஆண்கள் அணியும் ட்ரெண்டி காதணிகள்…

ஆண்கள் அணியும் காதணிகளில் இத்தனை மாடல்களா? என்று நம் புருவத்தை உயர்த்தும் அளவுக்கு பல்வேறு மாடல்கள் தங்கம், வெள்ளி மற்றும் வைரத்தில் மட்டுமல்லாது இமிடேஷன் நகைகளிலும் வந்து விட்டன.

ஐம்பது ஆண்டுகள் முன்னோக்கி சென்றால் அனைத்து ஆண்களும் காதுகளில் காதணிகளை அணிந்து கொண்டுதான் இருந்தார்கள். நாகரீக வளர்ச்சியால் ஆண்கள் காதணிகளை அணிவதை முற்றிலும் நிறுத்தி விட்டார்கள். இந்தியாவில் ஒரு சில சமூகத்தில் மட்டும் ஆண்கள் இன்றளவும் காதணிகளை அணிகிறார்கள்.

எந்த நாகரீக வளர்ச்சியால் காதணிகளை அணிவதைத் தவிர்த்தார்களோ அதே நாகரீக வளர்ச்சியின் காரணமாக மறுபடியும் ஆண்கள் காதணிகளை அணியத் தொடங்கி விட்டார்கள்.

ஆண்கள் அணியும் காதணிகளில் இத்தனை மாடல்களா? என்று நம் புருவத்தை உயர்த்தும் அளவுக்கு பல்வேறு மாடல்கள் தங்கம், வெள்ளி மற்றும் வைரத்தில் மட்டுமல்லாது இமிடேஷன் நகைகளிலும் வந்து விட்டன.

தங்கத்தில் ஹூப் மாடலானது முன்புறம் அரை வட்ட வடிவில் கட்டிங்குகளுடனும், டிசைன்களுடனும் அழகாக உள்ளன. சிறியதாகவும், பெரியதாகவும் பல்வேறு அளவுகளில் வருகின்றன.

பாலி மாடல் எனப்படும் வட்ட வடிவமானது ரிங் டைப்பில் அகலமாக உள்ளது. ஆண்களின் பாலி மாடல் காதணியானது காதை ஒட்டி இருப்பது போல் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. தங்கம் மற்றும் வெள்ளியிலும் இந்த மாடலானது கிடைக்கின்றது.

காதே குத்தாமல் அணியக்கூடிய டப்ஸ் மாடல் காதணிகளானது ஸ்டெயின்லெஸ் ஸ்டீலில் பல நிறங்களில் வருகின்றன.

ஒரே ஒரு கல் வைத்த ஸ்டட் மாடலும் பல ஆண்களாலும் விரும்பி அணியப் படுகின்றது. முதலில் கண்களுக்குத் தெரியாத ஒற்றைக் கல்லை மட்டுமே அணிந்து வந்தவர்கள் இப்பொழுது பெரிய ஒற்றைக் கல் (டைமண்ட், அமெரிக்கன் டைமண்ட்) கம்மலை அணியத் துவங்கி இருக்கிறார்கள்.

கோல்ட் இயர் ரிங்ஸ் மெலிதாகவும், அகலமான ஹ்யூஜி ஹூப் காதணிகள், தங்க முலாம் பூசப்பட்ட அலாய் பாலி இயர் ரிங்ஸ், வைரக் கற்கள் முழுவதுமாகப் பதித்த ஹூப் இயர் ரிங்ஸ், வொயிட் கோல்ட் மற்றும் நார்மல் கோல்ட் கலந்து வரும் இயர் ரிங்ஸ் எனப் பல மாடல்கள் வந்துள்ளன.

வட்ட வடிவில் முன்புறமும், பக்கவாட்டிலும் கற்கள் பதித்த ஹிப் ஹாப் காதணிகள் அருமையாக உள்ளன. வட்ட வடிவில் மட்டுமல்லாமல் டயமண்ட் ஷேப் மற்றும் சதுர வடிவத்திலும் ஒன்பது கற்கள், பதினாறு கற்கள் பதித்தது போன்ற காதணிகளும் கவர்ச்சிகரமாக உள்ளன. வெள்ளைக் கற்கள் மட்டுமல்லாது பல வண்ணக் கற்கள் மற்றும் நவரத்தினக் கற்கள் பதித்த காதணிகளையும் ஆண்கள் விரும்பி அணிகிறார்கள்.

டம்பில் காதணிகளை அணிந்து கொள்வதை சிறு வயது ஆண்கள் பெரிதும் விரும்புகிறார்கள். ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மற்றும் கோல்டு சில்வர் பூச்சுகளில் இந்தக் கம்மல்கள் நடுவில் கருமை நிற பட்டன் போன்ற அமைப்புடன் பார்க்க அழகாக உள்ளன.

ஓம் வடிவக் கம்மல், சிலுவைக் கம்மல், மேல் கம்மலிலிருந்து செயினானது தொங்க அதன் கடைசியில் சிலுவையானது இருப்பது போலவும், ட்ராகன் கோல்டு சர்ஜிகல் ஸ்டட், அமைதி அடையாளத்தைக் குறிக்கும் லோகோவுடன் வந்திருக்கும் ஸ்டட், ஸ்டர்லிங் சில்வர் பிளெயின் ஸ்மால் ஹூப் ஹ்யூஜி இயர் ரிங்ஸ், கோல்டு ஸ்டார் டிசைன் காதணிகள், ஸ்க்ரூ மாடல் கோல்டு ஸ்டார் டிசைன் காதணிகள், ஸ்க்ரூ மாடல் காதணிகள் எனப் பல கணக்கிலடங்காத டிசைன்களில் ஆண்களின் காதணிகள் வந்துள்ளன.

14 எம்.எம்., 12 எம்.எம்., 9 எம்.எம்., 7 எம்.எம். அளவுகளில் ஸ்க்ரூ டைப் காதணிகள் வருகின்றன. கோல்டு நக்கட் காதணிகள் பார்ப்பதற்கு வித்தியாசமாக உள்ளன. இன்பைனைட் டிசைன் காதணிகள், ஏழு கல் வைரக்கம்மல், பர்சனாலிட்டி காதணிகள், ஸ்பைக் பங்க் காதணிகள், நாட்டிகல் இயர் ரிங்ஸ், வின்டேஜ் காதணிகள் எனப் பல மாடல்களில் பெண்கள் காதணிகளுடன் போட்டி போடும் அளவுக்கு ஆண்கள் காதணிகளும் வந்து விட்டன.

தொங்கும் காதணிகளை அணிந்து கொள்வதையும் ஆண்கள் விரும்புகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். கம்மலிலிருந்து ருத்ராட்சம் தொங்கும் காதணியும், ரிங்கிலிருந்து சிறிய ஹார்ட்டின்கள் தொங்குவது போல் வந்திருப்பவையும் ட்ரெண்டியாக உள்ளன. கத்தரிக்கோல் வடிவக் கம்மலும், கைத்துப்பாக்கி வடிவக் கம்மலும் மிகவும் வித்தியாசமாக இருக்கின்றன.

காது குத்துவதால் ஏற்படும் நன்மைகள், ஆரோக்கிய நலன்கள்

* காது குத்துவதால் கண் பார்வை கூர்மையாகின்றது.

* மூளை வளர்ச்சிக்கு காது குத்துவது பெருமளவில் உதவி புரிகின்றது.

* இனப்பெருக்க உறுப்புகளைப் பராமரித்து மாதவிடாய் சுழற்சியானது சரியாக வருவதற்கு உதவுகின்றது.

* காதுகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன.

* பதட்டம் மற்றும் ஓசிடி போன்றவை ஏற்படாமல் தடுக்க உதவுகின்றன.

* செரிமான அமைப்புகளைத் தூண்டி அவற்றைச் சரியாக வேலை செய்ய உதவுகின்றன.

ஆண் குழந்தை என்றால் முதலில் வலது காதையும், பெண் குழந்தை என்றால் முதலில் இடது காதைக் குத்துவதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker